அது ஏன் மேய்ப்பர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது? Tucson, Arizona, USA 64-1221 1நான் ஒரு விதமான நீண்ட நேரம் பிரசங்கி என்று எண்ணுகிறேன். படிப்பில்லாமல் சிலருக்கு நான் பிரசங்கியைப் போல் ஒலிப்பதில்லையென்று நினைக்கிறேன். நான் பிரசங்கி என்று கூட உரிமை கோருவதில்லை. நான் ஒருவிதமான உதிரி டையர் (spare tire). ஆனால் நான் தேவனிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றிருப்பதாக உணருகிறேன். அதை என் சொந்த வழியில் உலகத்துக்கு அளிக்க முயல்கிறேன் (அந்த ஒரு வழியில் தான் அதை நான் அளிக்க வேண்டும்). அந்த செய்தியில் நான் நிலைத்திராவிட்டால், தேவனுக்கு துரோகியாகவும் உங்களுக்கு மாய்மாலக்காரனாகவும் ஆகிவிடுவேன். ஒருவன் ஒன்றைக் கூறி வேறொன்றை விசுவாசிப்பானானால், அது மாய்மாலம். நாம் எப்பொழுதுமே நமது இருதயத்திலிருந்து சத்தியத்தை உரைக்க வேண்டும். அப்பொழுது ஜனங்கள் நம்மைக் காணும் போது, அவர்கள் நம்முடன் இணங்காமல் போனாலும், நம்முடைய இருதயத்திலிருந்து சத்தியத்தை உரைத்த கெளரவமுள்ள ஆண்களும் பெண்களுமாய் நாம் இருக்க விரும்புகிறோம். 2சென்ற ஆண்டு, அல்லது அதற்கும் முந்தின ஆண்டு, ஒரு கிறிஸ்தவ... மன்னிக்கவும், ஒரு கிறிஸ்தவ செய்தியை ரமாதா அரங்கத்தில் பேசும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. இங்கேயோ அல்லது பீனிக்ஸிலோ நான் ஏன் சிறு பெத்லகேம்?'' என்னும் பொருளின் பேரில் பேசினேன் என்று நினைக்கிறேன். சென்ற ஆண்டு இங்கு, ''கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம் என்பதன் பேரில் பேசினேன் என்று எண்ணுகிறேன். உங்களுக்குத் தெரியுமா, நாம் வேதாகமத்தைப் படிக்கும் போது, ''ஏன்''களைக் கண்டு வியக்கிறோம். இன்றிரவு நீங்கள் என்னை சிறிது நேரம் பொறுத்துக் கொண்டு, என்னுடன் ஜெபம் செய்வீர்களானால், என் கிறிஸ்துமஸ் செய்தியை அளிக்க முயல்வேன். இதற்கு பிறகு அடுத்த கிறிஸ்துமஸ் ஒன்று இருக்குமானால், அடுத்த கிறிஸ்துமஸின் போது நாம் எங்கிருப்போமென்று தேவன் மாத்திரமே அறிவார். எனவே நாம் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருப்பது இதுவே கடைசி கிறிஸ்துமஸாக இருக்கக்கூடும். அதன் பிறகு நாம் வேறொரு மேசையில் உட்காருவோம். அது இந்த விதமாக இருக்காது. நாம் பாதையின் முடிவில், பிதாவின் ராஜ்யத்தில் அவருடன் போஜனத்தை நவமாய் புசித்து குடிப்போம். எனவே நாம் ஆழ்ந்த உத்தமத்துடன் இதை கடைசி கிறிஸ்துமஸ் செய்தி போல் பாவித்து இன்றிரவு அதை அணுகுவோம். 3இன்றிரவு வழக்கத்துக்கு மாறான ஒரு பொருளின் மேல் பேசலாம் என்றிருக்கிறேன். சில சமயங்களில், வழக்கத்துக்கு மாறான காரியத்தில் நீங்கள் தேவனைக் கண்டு கொள்கிறீர்கள். அவர் வழக்கத்துக்கு மாறான வழியில் கிரியை செய்கிறார் - வழக்கமான வழியில் அல்ல, வழக்கத்துக்கு மாறான வழியில், வழக்கத்துக்கு மாறான நேரங்களில், வழக்கத்துக்கு மாறான காட்சிகளில், அவர் வழக்கத்துக்கு மாறானவர். நான் இதை விரும்புகிறேன்... கர்த்தருக்கு சித்தமானால், அது ஏன் மேய்ப்பர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நாம் வார்த்தையை அணுகும் முன்பு; அது தேவன் என்று நான் விசுவாசிக்கிறேன். ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' 4நான் சென்ற வாரம், இல்லை, அதற்கு முந்தின வாரம் பீனிக்ஸில் கூறினது போன்று, இந்த உலகத்தின் பொருட்கள், ஜனங்கள் ஆகியோர் இக்கட்டிடத்தின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி அதை நிரூபிக்கிறது. அது வேறொரு பரிமாணத்தில் உள்ளதால், நமது மாம்சக் கண்களும், நமது ஐம்புலன்களும் அதை கிரகித்துக்கொள்ள முடிவதில்லை. தொலைக்காட்சி எதையும் புதிதாக உற்பத்தி செய்வதில்லை, அது வாய்க்கால்படுத்துகிறது. நீங்கள் ஒவ்வொரு முறையும் விரல்களை அசைக்கும் போதும் கண்களை இமைக்கும் போதும், அவை என்றென்றைக்கும் பதிவு செய்யப்படுகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நான் இங்கு நின்று கொண்டிருப்பது.... அல்லது ஆஸ்திரேலியாவில் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தால், இங்கு ஒரு தொலைக்காட்சி திரை இருக்கும் பட்சத்தில், அவர் பேசுவதும், விரல்களை அசைப்பதும், கண் இமைப்பதும், அவர் உடுத்துள்ள உடைகளின் வண்ணமும் கூட, அந்த திரையில் காணப்படும் - அது ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, உலகின் எந்த பாகங்களிலும் இருந்தாலும் சரி. பாருங்கள், ஈதர் அலைகளின் (ether waves) சக்கரம் ஒன்றுள்ளது. அதை எனக்கு விளக்கத் தெரியவில்லை, ஆனால் அது அங்குள்ளது என்றறிவேன். அதை உண்மையில் யாருமே விளக்க இயலாதென்று நினைக்கிறேன். எனவே தொலைக்காட்சி சில இயந்திரங்களின் மூலம் அதை உள்ளே இழுத்து, அதை தத்ரூபமாக்கி, திரையில் பிரதிபலிக்கச் செய்கின்றது. 5ஆதாம் இவ்வுலகில் இருந்த போதும் அது இருந்தது. கர்மேல் பர்வதத்தின் மேல் எலியா இருந்த போதும் இந்த தொலைக்காட்சி இருந்தது. அந்த வாலிப குருவானவராகிய லூத்தர் அப்பத்தை தரையில் எரிந்து, ''அது கோஷர் (kosher)! விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்'' என்றுரைத்த போதும் அது இருந்தது. அப்பொழுது அது இருந்த போதிலும், இப்பொழுது தான் அதை நாம் கண்டு பிடித்தோம். அவ்வாறே இன்றிரவு நமது சமுகத்தில் தேவன், தேவதூதர்கள், இயற்கைக்கு மேம்பட்டவர்கள் உள்ளனர். நமது மாம்ச பார்வைக்கு அதை காண இயலவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள், இப்பொழுது தொலைக்காட்சி உள்ளது போல், அது தத்ரூபமாகவும் சாதாரண ஒன்றாகவும் அமைந்து விடும். ஆகையால் தான் நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். ''எவனாகிலும் இந்த வேதாகமத்துடன் ஒரு வார்த்தையைக் கூட்டினால், அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படும்'' என்று இயேசு கூறினார். 6எனவே, நாம் வார்த்தையை படிப்பதற்கு முன்பே தலை வணங்குவோம். மிகவும் பயபக்தியுடன்! சரீர பெலன் உள்ள எவனும் வேதாகமத்தின் பக்கங்களைத் திருப்ப முடியும். ஆனால் தேவன் மாத்திரமே அதை வெளிப்படுத்தித்தர இயலும். நாம் எந்த மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டோமோ அந்த மண்ணை நோக்கி தலை வணங்கி, என்றாவது ஒருநாள் அந்த மண்ணுக்கே திரும்புவோம் என்னும் சிந்தையுடையவர்களாய்; நான் வியக்கிறேன். இந்த பயபக்தியான நேரத்தில், நாம் கிறிஸ்துமஸை அணுகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், யாருக்காகிலும் தாங்கள் அபாத்திரர் என்னும் உணர்வு ஏற்பட்டு, இந்த ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்பினால், தலை நிமிராமல், உங்கள் கரங்களை மாத்திரம் தேவனிடம் உயர்த்தி, ''இந்த கிறிஸ்துமஸின் போது என்னை நினைவு கூரும், ஆண்டவரே'' என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 7மிகப் பரிசுத்தமும் கிருபையுமுள்ள எங்கள் பரலோகப் பிதாவே, சர்வ வல்லமையுள்ள தேவனே, ஒரு நட்சத்திரம், ஒரு அணு, ஒரு மூலக்கூறு தோன்றுவதற்கு முன்பே ஆதியிலிருந்து இருப்பவரே, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நீர் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, அவரில் எங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாய் அருளியிருக்கிறீர். கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒன்று கூடி, பரிசுத்த ஆவியினால் நாங்கள் எச்சரிக்கப்பட்டு போதிக்கப்பட்ட எங்களுக்கு நீர் அருளின இந்த தருணத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரிசுத்த ஆவியானவர் தாமே உமது வார்த்தைகளை எடுத்து எங்களுக்கு வெளிப்படுத்தித்தருகிறார். ஏனெனில் இயேசு, ''சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, நான் கூறின இவைகளை உங்களுக்கு நினைவுபடுத்தி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார் என்று கூறிச் சென்றார். தேவனே, உமது வார்த்தையை வியாக்கியானப்படுத்த எங்கள் மத்தியிலோ, அல்லது பூமியில் வேறெங்கிலும் யாருமே கிடையாது. “தேவனுடைய வார்த்தையை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக்கூடாது'' என்று எழுதப்பட்டுள்ளது. எனவே கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே இன்றிரவு எங்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான பங்கை அளித்து, எங்கள் இருதயத்திலுள்ள பசியைத் தீர்த்து, உம்முடன் நெருங்கி நடக்கச் செய்வாராக. நாங்கள் தகுதியற்றவர்கள், அசுத்தமானவர்கள், அபாத்திரர். பெத்லகேமில் பிறந்த குழந்தை தாமே; அவர் ஒருவரே இவ்வுலகில் பரிபூரணமான வாழ்க்கை வாழ்ந்து, பரிபூரண மனிதனாக இருந்தார். அசுத்தம் நிறைந்த பாவிகளான எம்மை சுத்திகரித்து பிதாவினுடன் ஐக்கியப்படுத்த தம்மைதியாக பலியாக ஒப்புக் கொடுத்தார். அவருடைய பரிசுத்த ஆவிதாமே பிரசங்கிக்கப்படும் வார்த்தையின் மூலம் அதை எங்களுக்கு செய்யும்படி அருள்வீராக. 8கர்த்தராகிய தேவனே, எங்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் சிறந்த மருந்துகள், சிறந்த மருத்துவமனைகள் இருந்த போதிலும், இன்று தேசத்தில் அநேகர் வியாதியாயுள்ளனர். நாங்கள் அரிய பெரிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளை பெற்றிருந்த போதிலும், இன்று உலகில், நாங்கள் முன்பு அறிந்திருந்ததைக் காட்டிலும் அதிக வியாதி நிலவுகின்றது. இதற்கு காரணம் உலகம் இதுவரை அறிந்திராத அளவுக்கு பாவமும் அவிசுவாசமும் பெருகியுள்ளதால். பெரிய வைத்தியரே, இன்றிரவு எங்களுக்குதவி செய்து, எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்துவீராக. எங்களுக்கு ஆவியை, கிறிஸ்துமஸின் உண்மையான ஆவியைத் தந்தருளுவீராக. இன்று... கிறிஸ்துமஸ் மரங்களை வணங்குதல் போன்ற அஞ்ஞான பழக்க வழக்கங்கள், சான்டா கிளாஸ் என்னும் பெயருடைய மனிதன் இருந்ததாக கட்டுக்கதைகள், ஈஸ்டர் முயல்கள், வெவ்வேறு நாகரீகங்கள் போன்றவைகளை வர்த்தக உலகம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தேவனே, அவைகளை நாங்கள் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு, வார்த்தையாகிய கிறிஸ்துவுக்குள் பிரவேசிப்போமாக. இதை அவருடைய நாமத்திலும் அவருடைய மகிமைகென்றும் கேட்கிறோம். ஆமென். 9பரிசுத்த வேதாகமத்தைப் படிப்பதற்காக என்னுடன் லூக்கா 2ம் அதிகாரத்துக்கு திருப்புங்கள். நான் பேசுவது நன்றாக கேட்கிறதா? ஒலிப் பெருக்கிகளில் இடம் மாற்றம் (transposition) ஏதாகிலும் உள்ளதா? நான் பேசுவது பின்னால் நன்றாக கேட்கிறதா? கேட்கிறதென்றால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். நன்றி. பரி. லூக்கா எழுதின சுவிசேஷம் 2ம் அதிகாரம். அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி : உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். தேவதரதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும் யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்டயாவரும் அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள். மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின் படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக் கொண்டு திரும்பிப்போனார்கள். தேவன் தாமே வாசிக்கப்பட்ட அவருடைய வார்த்தையோடு தம்முடைய ஆசிர்வாதத்தை கூட்டுவராக. லூக்கா 2:1-20 10இப்பொழுது, இது... இந்த மகத்தான நிகழ்ச்சி மேய்ப்பர்களுக்கு ஏன் வெளிப்படுத்தப்பட்டது? அது நமக்கு ஒருவிதமான ஆச்சரியத்தை விளைவிக்கக் கூடியதாயிருக்கிறது. நான் சில வேத வாக்கியங்களையும், சில குறிப்புகளையும் இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அதை வேகமாகப் பார்த்து, எனக்குத் தெரிந்த வரைக்கும் ஏன் என்று உங்களுக்கு விளக்க முயல்கிறேன். ஒருக்கால் இதற்கு பிறகு கர்த்தர் தமது கிருபையினால் இன்றிரவு இந்த ''ஏன்'' களை நம்மிடமிருந்து எடுத்துப் போடுவார். ஆனால் அது.... எல்லா காலங்களுக்கும் மிகவும் மகத்தான நிகழ்ச்சி மேய்ப்பர்களுக்கு ஏன் வெளிப்படுத்தப்பட்டது என்று நம்மில் அநேகர் எப்பொழுதாவது ஒரு சமயம் வியந்ததுண்டு என்று எண்ணுகிறேன். அது ஏன் அக்காலத்து வேத சாஸ்திரிகளுக்கு வெளிப்படுத்தப்படாமல் மேய்ப்பர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது? (மேய்ப்பர்கள் தான் அதைக் குறித்து கேட்க பயிற்சி பெற்றிருந்தனர்.) அது ஏன் ஐசுவரியவான்களைக் கடந்து ஏழைகளிடத்தில் வர வேண்டும்? அல்லாமல், அது ஏன் கல்விமான்களையும் ஞானிகளையும் கடந்து, தாழ்மையுள்ளவர்களிடத்திலும் படிக்காதவர்களிடத்திலும் வர வேண்டும்? ஏன் என்னும் சில கேள்விகள் இதில் அடங்கியுள்ளன. 11நான் கூற விரும்பும் மற்றொரு காரணம். கவனியுங்கள், குழந்தை பெத்லகேமில் பிறந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கூறினது போன்று, பெத்லகேம் என்னும் எபிரெயச் சொல், ''தேவனுடைய அப்பத்தின் வீடு'' என்று பொருள்படும். அதை நாம் வேதவாயிலாக நிரூபித்தோம். அவர் வேறெந்த இடத்திலும் பிறந்திருக்க முடியாது. பெத்லகேம் ராகாப் என்பவளாலும் அவளுடைய கணவனாலும் நிறுவப்பட்டது. ராகாப் ஒரு வேசி. இஸ்ரவேல் சேனை எரிகோவைக் கைப்பற்றின பிறகு, அந்த சேனையின் தளபதி ஒருவன் நேசித்தான்... அவள் தன் நிலையில் தேவனுடைய செய்தியை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டாள். அங்கிருந்து, ஒவ்வொரு கோத்திரமும் எங்கிருக்க வேண்டுமென்று யோசுவா தேசத்தைப் பகிர்ந்து கொடுத்த போது.... 12எபிரெயத் தாய்மார்கள் குழந்தைகளைப் பிரசவித்த போது, அதில் ஒரு பெரிய பாடமே அடங்கியுள்ளது. என்றாவது ஒருநாள் அதை டூசானில் எடுத்துக் கூறுவேன் என்று நம்புகிறேன். அவள் பிரசவ வேதனைப்பட்டு முனகின போது, குழந்தைக்கு பெயர் வைத்தாள். அது அந்த குழந்தையை, அந்த கோத்திரத்துக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் சரியாக பொருத்தினது. பெரியகாரியம் என்னவெனில், தேவனுடைய வார்த்தை அனைத்தும் ஒன்றாக இணைகிறது. அது ஒன்றாக இணையாமல் தவறாகப் பொருந்தினால், அது தேவனுடைய வார்த்தையல்ல. உங்கள் சிந்தனை தான் வார்த்தைக்கு பொருந்துவதாயில்லை. ஆனால் வார்த்தை அனைத்தும் ஒன்றாக இணைகிறது. 13எனவே, நான் சென்ற வாரம், இல்லை அதற்கு முந்தின வாரம் நான் பீனிக்ஸில் போதித்தது போன்று, அவர் ஜீவ அப்பமாயிருந்தார். அவர் ஜீவ அப்பமாயிருந்ததால், அவர், ''தேவனுடைய அப்பத்தின் வீட்டில் தவிர வேறெந்த இடத்திலும் வர முடியாது. அது ஏன் என்பதற்கு பதில். இயேசு பெத்லகேமில் பிறந்தார். பெத்லகேமில் நிறைய யூத வழிப்பாட்டு ஸ்தலங்கள் இருந்தது. மார்க்க சம்பந்தமான தலைவர்கள் பெத்லகேமில் வாழ்ந்தனர். அந்த பெரிய ராஜா மேய்ப்பனாகிய தாவீது பெத்லகேமில் பிறந்தான், அவனுடைய தகப்பன் ஈசாய் பெத்லகேமில் பிறந்தான், அவனுடைய பாட்டன் ஓபேத் பெத்லகேமில் பிறந்தான். எனவே வழி வழியாக அவர்கள் பெத்லகேமில் தோன்றினர். இங்கு தாவீதின் குமாரனாகிய இயேசு பெத்லகேமில், பெரிய தேவாலயங்களின் நிழலில் பிறந்தார். அந்த ஜனங்கள் பயிற்சி பெற்று, அத்தனை ஆண்டுகளாக மேசியாவை எதிர் நோக்கியிருந்தனர். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மேசியா தோன்றுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. மேசியா தேவாலயத்தின் நிழலில் பிறந்த அந்த பெரிய செய்தியை தேவதூதன் ஏன் மலையிலிருந்த படிப்பில்லாத, பயிற்சி பெற்றிராத மேய்ப்பர்களுக்கு அறிவித்து, அவர்கள் அந்த முதல் செய்தியை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்? மற்றவர்களுக்கு அறிவிக்க அனுப்பப்பட்ட மேய்ப்பர்கள்! ஞானிகளும் பயிற்சி பெற்றவர்களும் அல்ல. ஆனால் மேய்ப்பர்கள். அது விசித்திரமான செயல் அல்லவா? அந்த ஏன் என்னும் கேள்வி எங்காவது இருக்க வேண்டும். ஏன் என்னும் கேள்வி இருந்தால், அதற்கு ஒரு பதில் இருந்தாக வேண்டும். தேவனைத் தவிர வேறு யாருக்கும் பதில் தெரியாது. அவர் ஒருவருக்கு மாத்திரமே பதில் தெரியும். 14இப்பொழுது, கவனியுங்கள், மேசியா ஏற்கனவே ஊரில் இருந்தார், அந்த ஊரில், முன்னணையில் பிறந்திருந்தார். அந்த பெரிய ஆலயங்களின் அருகில்; அங்கு பிரதான ஆசாரியன்.... பெரிய ஆசாரியர்களும், வேத சாஸ்திரிகளும், ஞானிகளும், சாஸ்திரத்தில் பயிற்சி பெற்றவர்களும் மேசியாவுக்காக காத்திருந்தனர். அதோ அவர் அவர்கள் மத்தியில் இருந்தார். ஆனால் தேவதூதர்கள் ஏன்... யூதேயாவின் மலைகளிலிருந்த படிப்பில்லாத, பயிற்சி பெற்றிராத, நாகரீகமற்ற, எல்லோரைக் காட்டிலும் ஏழையானவர்களிடத்தில் செல்ல வேண்டும்? இந்த செய்தி வெளிப்படுவதற்கும், அவர்கள் சென்று அந்த செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் அவர்கள் மிகவும் தகுதியற்றவர்களாகக் காணப்பட்டனர். என் கருத்து என்ன தெரியுமா? அது அவ்வளவு முக்கியமாகத்தென்படாது, இருப்பினும் என் கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். ஞானிகள் அப்படிப்பட்ட ஒரு செய்தியை அது அளிக்கப்பட்ட விதமாகவே ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை தேவனுடைய ஞானம் அறிந்திருந்தது என்பது என் கருத்து. அது அவர்களுடைய படிப்புக்கு ஒத்ததாக அமைந்திருக்கவில்லை. அது வித்தியாசமாக இருந்தது. அவர் எப்படியிருப்பாரென்று தங்கள் வேதசாஸ்திர பயிற்சியின் மூலம் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு மாறாக அது அமைந்திருந்தது. அவர்களுடைய பயிற்சி அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு, அது ஒன்றுமற்றதாய் போனது. அப்படிப்பட்ட ஒருசெய்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தேவஞானம் அறிந்திருந்தது என்பது என் கருத்து. 15மேசியா அங்கிருந்தார், அதை யாராகிலும் ஒருவர் அறிய வேண்டும். அப்படிப்பட்ட வேதசாஸ்திரத்தின் மூலம் குழப்பமடையாதவர்கள் யாரென்பதை அவர் அறிந்திருந்தார். தங்கள் சொந்த வழிகளில் சென்று குழப்பமடைந்து, எதுவுமே - தேவனுடைய வார்த்தையும் கூட - அவர்களை மாற்ற முடியாது என்னும் நிலையிலிருந்த இவர்களைக் காட்டிலும் படிப்பில்லாத கூட்டத்தினருக்கு தமது செய்தியை அறிவிப்பது அவருக்கு எளிதாயிருந்தது. இப்பொழுது, கிறிஸ்தவ நண்பனே, எல்லா உத்தமத்தோடும் அன்போடும் உன்னிடம் இந்தக்கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர் இன்றிரவு அதே விதமான ஒரு செயலைப் புரிந்து, இந்த சந்ததிக்கென்று வாக்களிக்கப்பட்டுள்ள வார்த்தையை இந்த சந்ததியிலுள்ள நமக்கு அனுப்புவாரானால், நமது வேத சாஸ்திரிகளும், கல்வி கற்றவர்களும், ஞானிகளும், அவர்கள் அன்று செய்தது போலவே செய்தியை புறக்கணிக்க மாட்டார்களா என்று வியக்கிறேன். மனிதன் மாறாமல் அப்படியே இருக்கிறான், தேவனுடைய வார்த்தையும், மாறாததாயுள்ளது. அவர் மாறாத தேவன், அவர் மாறுவதில்லை! 16கவனியுங்கள், தேவதூதர்கள் தோன்றி... இந்த எளிய , படிப்பில்லாத மேய்ப்பர்களைக் காட்டிலும் தகுதி வாய்ந்த (உலகப் பிரகாரமாக நினைத்துப் பார்க்கும் போது) மனிதர் இருந்த போது, தேவதூதர்கள் வந்து தங்கள் செய்தியை மிகவும் தாழ்வான இந்த மனிதர்களுக்கு அறிவித்தனர். மேய்ப்பன் எல்லோரைக் காட்டிலும் மிகவும் படிப்பில்லாதவன். அவனுடைய ஆடுகளைத் தவிர வேறொன்றும் அவனுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு கணிதம் தெரிய வேண்டிய அவசியமில்லை. அணுவை எப்படி பிளப்பதென்று அவனுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. அவனுக்கு சிறந்த படிப்பு அவசியமில்லை. அவனுக்கு அவனுடைய ஆடுகளைக் குறித்து தெரிய வேண்டும். அவ்வளவு தான் அவனுக்குத் தெரிய வேண்டும். எல்லா ஞானத்துக்கும் ஊற்றுக்கும் உறைவிடமாயுள்ள தேவன், தமது பெரிதான ஞானத்தினால் அப்படிப்பட்ட ஒரு மனிதனை (அப்படிப்பட்ட மனிதர்களை) தெரிந்து கொண்டு, இதை அறிய நன்கு பயிற்சி பெற்றிருந்த அறிவாளிகள் அனைவரையும் அசட்டை செய்து விட்டார். அது ஒன்றைக் காண்பிக்கிறது, அதாவது அவர்கள் தவறான துறையில் பயிற்சி பெற்றிருந்தனர் என்று. தேசத்திலிருந்த முக்கியமானவர்கள் எல்லோரையும் அவர் கடந்து; அவர் முக்கியமானவர்கள், சிறந்த போதகர்கள், பிரதான ஆசாரியனாகிய காய்பா, இன்னும் அநேக பெரிய மனிதர், இஸ்ரவேல் அனைத்திலும் அதிகம் படித்தவர்கள், ஸ்தாபனங்கள், பெருமையடித்துக் கொண்ட வேதசாஸ்திரிகள், இவர்கள் ஒருவரையாகிலும் தெரிந்து கொள்ளாமல் கடந்து சென்று விட்டார். அது தேவனுடைய ஞானம். 17கவனியுங்கள், வானாதி வானங்கள் பூமியிலுள்ள மிகவும் தாழ்மையான , படிப்பில்லாத ஜனங்களை கெளரவிக்க விரைந்து வருகிறது. வானாதி வானங்களில் பெரியவர் தம்மை வெளிப்படுத்த மற்றெல்லாரையும் கடந்து வந்து பூமியில் மிகவும் தாழ்வான, சாதாரண ஆடு மேய்ப்பவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார்; இந்த சாதாரண ஆடு மேய்ப்பர்களுக்கு, எல்லா காலங்களுக்கும் மிகப் பெரிதாக விளங்கின செய்தியை அளிக்க வருகிறார். அநேக பெரிய செய்தியாளர்கள் இருந்திருக்கின்றனர். நமக்கு நோவாவின் காலம், தீர்க்கதரிசிகள் நினைவுக்கு வருகிறது. கடந்த காலங்களில் மகத்தான ஆசாரியர்கள், அதிகம் படித்தவர்கள், ராஜாக்கள், அதிபதிகள் போன்றவர் இருந்திருக்கின்றனர். ஆனால் இதோ அவர் எல்லா செய்திகளைக் காட்டிலும் மிகப்பெரிய செய்தியுடன் வருகிறார். அந்த செய்தி என்ன? ''மேசியா இப்பொழுது இங்கிருக்கிறார்.'' பாருங்கள்? அதை அறிவிக்க, அவர் பயிற்சி பெற்ற அனைவரையும் தள்ளி வைத்து விட்டு, தாழ்மையுள்ள மேய்ப்பர்களுக்கு அதை அறிவிக்கிறார். இதை யோசித்துப் பாருங்கள். எல்லா குருவானவர்களும், எல்லா சபையோர்களும், எல்லா போதகர்களும், பணம் நிறைய செலவழித்து, வேத சாஸ்திர பயிற்சி பெற்ற அனைவரும், எல்லா சபைகளும், உபதேசங்களும், ஸ்தாபனங்களும், இவையனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன! வேதசாஸ்திரத்தைப் போதிப்பதற்கென அவர்கள் நிறைய பணம் செலவழித்து மிஷனரிமார்களை உருவாக்கி, எல்லா மனம் மாறுதல், சபை அங்கத்தினர்கள், தேவனை கனப்படுத்த அவர்கள் செய்வதாக எண்ணியிருந்த அனைத்தும்; இருப்பினும் முக்கியமான செய்தி அவர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது. விசித்திரமானது! ஏன்? பாருங்கள்? 18கவனியுங்கள், அது மாத்திரமல்ல, அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நேரிடக் கூடாத ஒரு இடம் அது. இந்த மேய்ப்பர்களுக்கு தான் செய்தி அறிவிக்கப்பட்டது. அந்த செய்தி எங்கு அறிவிக்கப்பட்டதென்று கவனியுங்கள். அது நேரிடுமென்று யாருமே எதிர்பாராத இடத்தில். அது போன்று இன்றிரவு நாம் கர்த்தராகிய இயேசுவின் உண்மையான செய்தியை எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர்களாயிருப்போமானால், அது இப்படிப்பட்ட எதிர்பாராத ஒரு குழுவில், ஒரு இடத்தில்... இன்றைய மிகுந்த நாகரீகமுள்ள உலகமும் சபையும் மதத்துரோகிகளின் கூட்டம் என்று கருதுபவர்களினிடையே காணப்படுமா என்று வியக்கிறேன். அதுதான் நாம் அவரைக் காணக்கூடிய இடமாக இருக்குமா வென்று வியக்கிறேன். மிகவும் நேரிடக் கூடாத இடத்தில் மிகவும் தகுதியற்ற பேச்சாளர்களுக்கு. மேய்ப்பர்களுக்கு பேசவே தெரியாது. அவர்களுக்கு ஆடுகளைக் கூப்பிட மாத்திரமே தெரியும். ஒருக்கால் அதன் காரணமாகத் தான் அந்த செய்தி அவர்களிடம் வந்திருக்கக் கூடும். 19ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை இருந்தது. அது மறுபடியும் அதையே செய்ய முடியும். அது தேசத்திலிருந்த உயர் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் ஒதுக்கிவிட்டது. அது பெருமக்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டு. ஒன்று மற்றவர்களுக்கு அதை வெளிப்படுத்தினது. வேத சாஸ்திரத்திலும் மனோதத்துவத்திலும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், உயர்ந்த கல்வி பெற்றவர்கள் போன்ற பெருமக்களையும், பெரிய ஆலயங்களையும் அது ஒதுக்கிவிட்டு, ஒன்று மற்றவர்களுக்கு அதை வெளிப்படுத்தினது. சர்வ வல்லமையுள்ள தேவனின் ஞானம் - அளவற்ற ஞானம் - இதை செய்து, ''மேசியா இப்பொழுது பூமியில் இருக்கிறார்'' என்னும் மிக மகத்தான செய்தியை அவர்களுக்கு அறிவித்தது. என்னே ஒரு ஞானம்! ஞானத்தை அறிந்திருக்கும் தேவனிடத்திலிருந்து மாத்திரமே அது வர முடியும். உலக ஞானமும், பள்ளி படிப்பும், மற்றவைகளும் வீணாகி, தேவனுடைய மகத்தான ஞானத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டது. இது ஆழமாகப் பதிய வேண்டும் என்பதற்காகவே இதை திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன். எல்லாமே வீணாயிற்று, அது உபயோக மற்றதாகி விட்டது. தேவனுடைய ஞானம், அதன் வழியின் உரிமையைக்கைக் கொண்டு, இவையனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, ஒன்று மற்றவர்களை தேவன் முக்கியம் வாய்ந்தவர்களாக்கும் படி செய்தது. 20இங்கு நாம் நிறுத்திக் கொண்டு யோவானைக் குறித்து பேசுவோம். இங்கு நாம் நிறுத்திக் கொண்டு எலியாவைக் குறித்து பேசுவோம். எலியா எங்கிருந்து வந்தானென்று யாருக்குமே தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவன் காட்சியில் தோன்றினான் என்று. காலங்கள்தோறும் இருந்த தீர்க்கதரிசிகள் ஒன்று மற்றவர்களாயிருந்தனர். ஆனால் தேவன் அவர்களைத் தெரிந்து கொண்டு... சபையின் பிரமாணங்களையும் போதகங்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு... அவர் தேவன் என்பதைக் காண்பித்தார். அவர் ஒன்றுமற்ற ஒன்றை எடுத்து, அதைக் கொண்டு ஏதாவதொன்றை செய்கிறார். அவர் ஒன்றுமற்றதை தெரிந்து கொள்வதன் மூலம் அவருடைய ஞானத்தையும் தேவத்துவத்தையும் காண்பிக்கிறார். அவர் மனிதனை முதலில் உண்டாக்கின போது, அவனை ஒரு களிமண் உருண்டையைக் கொண்டு சிருஷ்டித்தார். அது வெறும் களிமண்ணாய் இருந்தது. ஆனால் அவர் அதைக் கொண்டு மனிதனை உண்டாக்கினார். இப்பொழுதும் தேவன் ஒன்றுமற்றதை எடுத்து, அதைக் கொண்டு ஏதாவதொன்றை செய்கிறார். நம்மை பெரியவர்களாக நாம் நினைத்துக் கொண்டால், தேவனுடைய கரம் நம்மை உபயோகிக்க முடியாது. நாம் அறிந்த அனைத்தும், படித்த அனைத்தும் விட்டுவிட வேண்டும். அந்த மகத்தான பரி. பவுலைப் போல். அவன் கிறிஸ்துவை அறிந்து கொள்ள, தான் கற்ற அனைத்தையும் மறக்க வேண்டியதாயிருந்தது என்று கூறினான். 21அவர்களுடைய பள்ளி படிப்பு, அவர்களுடைய போதகங்கள் போன்ற அனைத்துமே அவர்களுக்கு மோசமாக முடிந்தது. முடிவில் அது அவரை மறுதலித்தது! அவருக்கென, அவரை விசுவாசிப்பதற்கென அவர்கள் பெற்ற பள்ளி படிப்பு, அவரைக் குற்றஞ்சாட்டும் சத்துருவாக மாறி, அவரை சிலுவையில் அறையக் காரணமாயிருந்தது. வரலாறு அடிக்கடி திரும்பத்திரும்ப நிகழ்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது எவரும் அறிந்த உண்மை. அது மறுபடியும் நமது அருகிலேயே நிகழ வகையுண்டு. நீங்கள், “ஓ, அக்காலத்தில் நான் வாழ்ந்திருந்தால்...'' எனலாம். அக்காலத்தில் வாழ்ந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று அறிய விரும்பினால், இப்பொழுது நீங்கள் உள்ள நிலையைப் பாருங்கள். அக்காலத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதைக் காணலாம். அது நிச்சயம் அதை வெளிப்படுத்தக் கூடியதாய் அமைந்துள்ளது. 22அவருடைய வார்த்தையை விசுவாசிக்கப் பயிற்சி பெற்று, அவர்களுடைய கண்களுக்கு முன்பு வார்த்தை உறுதிப்பட்ட போது, உறுதிப்படுத்தப்பட்ட அந்த வார்த்தையை அவர்கள் மறுதலித்தனர். தேவன் என்ன செய்வார் என்பதை நிறைவேற்றின போது; அவர் செய்வதாக கூறியிருந்ததை செய்து நிறைவேற்றின போது, அவர்கள் அதைக் காணாமல் தங்கள் முதுகைத் திருப்பி, அந்த மனிதனை, “பொல்லாத ஆவி என்றழைத்தனர். அது அவர்களைச் சாபத்துக் குள்ளாக்கியது. என்ன நடந்ததென்பதை சிந்தித்துப் பாருங்கள்! அதற்கு காரணம் என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள்! அவர்கள் பெற்ற பயிற்சி, அவர்களுடைய நாளின் வார்த்தை மாம்சமானவரை அவர்கள் அடையாளம் கண்டுக் கொள்ளாமலிருக்கக் காரணமாயிருந்தது - மிகச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு அவர்களுடைய பள்ளிகளில் அவர்கள் பெற்ற அதே பயிற்சி. நீங்கள், இன்றைக்கு நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் என்கிறீர்கள். அக்காலத்து போதகர்கள் நம் காலத்திலுள்ளவர்களைக் காட்டிலும் உன்னதமானவர்களாக (நம் போதகர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் தவறினர். இன்று நமக்குள்ளது போல் அவர்களுக்கு தொளாயிரத்து தொண்ணூற்றாறு வெவ்வேறு ஸ்தாபனங்கள் இருக்கவில்லை. அவர்களுக்கு மூன்று ஸ்தாபனங்கள் மாத்திரமே இருந்தன. அந்த மூன்றையும் நீங்கள் கவனிப்பீர்களானால், மூன்றில் ஒன்றும் கூட அதை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை! மனிதன் செய்வது தேவனுடைய பார்வையில் மூடத்தனமாயுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. பாருங்கள்? 23அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளத் தவறினர். அவர்கள் அதையே மறுபடியும் செய்வார்கள். மனிதன்... நோக்கம் நல்லது தான், அது எப்பொழுதுமே நல்லது. மனிதன் தன் நிலையை மாற்றிக் கொள்வதில்லை. அவன்தன் வழிகளை அதிகம் மாற்றிக் கொள்வதில்லை. நான் உலகப் பிரகாரமான மனிதனைக் குறித்து பேசுகிறேன். மதசம்பந்தமான மனிதன், முன்பு தேவன் செய்தவைகளுக்காக அவரை துதித்து, அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை மக்களுக்கு சுட்டிக்காட்டி, அவர் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அசட்டை செய்து விடுகிறான்! பாருங்கள்? அது மனிதன், அவன் அவ்விதம் உண்டாக்கப்பட்டிருக்கிறான், அவன் எப்பொழுதுமே அப்படியிருக்கிறான். வேத வாசகர்களாகிய நீங்கள், அது வார்த்தையின் படி சரி என்பதை இன்றிரவு அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் எப்பொழுதுமே அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை எடுத்துக்கூறி, அவர் தற்பொழுது செய்கின்றதை அசட்டை செய்கின்றனர். அது மனிதனின் பழக்கம். 24அந்த போதகர்கள் ஏன் அவ்வாறு செய்தனர் என்னும் என் அபிப்பிராயம்: அவர்கள் வார்த்தைக்கு அர்த்தம் உரைத்தனர், ஏனெனில் அவர்கள் அனைவரும் மேசியாவரப் போகிறார் என்பதை விசுவாசித்தனர். இஸ்ரவேல் அனைவரும் அதை விசுவாசித்தனர், அவர்கள் இன்றைக்கும் விசுவாசிக்கின்றனர். ஆனால் அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளாத தன் காரணம், அவருடைய செய்தி அவர்களுடைய மத சம்பந்தமான காரியங்களுடன் பொருந்தவில்லை. அவர்கள்... மேசியா, அவர்கள் வார்த்தையை வியாக்கியானம் செய்தவிதத்தில் வெளிப்படவில்லை. அவர்களுடைய வியாக்கியானத்துடன் அது பொருந்தாத காரணத்தால், அவர்கள் அவரை அடையாளம் கண்டுக்கொள்ள இயலவில்லை. நான் முன்பு கூறினதையே மறுபடியும் கூறுகிறேன்: ''தேவனுக்கு அவருடைய வார்த்தையை வியாக்கியானப்படுத்த யாரும் தேவையில்லை. அவரே அவருடைய சொந்த வியாக்கியானி.'' 25இப்பொழுது, வேதம் என்ன கூறுகிறதென்றால் அது சத்தியம் என்று இப்பொழுது நான் உங்களுக்கு நிரூபிக்கட்டும். அது நிகழ்வதற்கு எழுநூற்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி, ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.'' என்றான். அந்த காலத்திலிருந்த எல்லோருமே தங்கள் குமாரத்தி அந்த ஸ்திரீயாயிருப்பாள் என்று நினைத்தனர். ஆனால், பாருங்கள், அது எழுநூற்று பதினைந்து ஆண்டுகள் கழித்து நிறைவேறினது. ஆனால் அது.... அவர் எப்பொழுது செய்வார், எப்படி செய்வார் என்றெல்லாம் அவருடைய வார்த்தையை வியாக்கியானப்படுத்த தேவனுக்கு யாருமே அவசியமாயிருக்கவில்லை. அவர் அதை செய்வதாகக் கூறினார், அவர் அதை செய்து நிறை வேற்றினார். 26தேவன் வாக்களித்தார் அவர்... ஏசாயாவிலும் கூட. அது 28ம் அதிகாரம் 18ம் வசனம். மற்றும் யோவேல் 2:28ல், அவர் கடைசி நாட்களில் - கடைசி இரண்டாயிரம் ஆண்டுகளில் - மாம்சமான யாவர் மேலும் தமது ஆவியை ஊற்றுவதாக வாக்களித்தார். அவர், ''உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்'' என்றார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் குறித்து ஏசாயா, ''போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே இளைப்பாறுதல்'' என்றான். அவர்களோ அதை கேட்க மாட்டோம் என்று சொல்லி தலையை ஆட்டிவிட்டுப் போய் விட்டார்கள். அவன், ''போஜனபீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை'' என்றான். மேசியா வந்த போது, அதுவல்லவா எருசலேமின் நிலையும் அக்காலத்து சபையின் நிலையுமாயிருந்தது! இன்றுள்ள நிலையும் அதுவே. அது மறுபடியும் நிகழ்கிறது. தேவன் ஒன்றை செய்வதாக வாக்களித்திருந்தால், அதை செய்தே தீருவார். அதைக் குறித்து யார் என்ன நினைத்தாலும், யார் என்ன சொன்னாலும், தேவன் ஒன்றைக் கூறினால், அந்த வார்த்தையை அவரே வியாக்கியானப்படுத்த அவர் கடமைப்பட்டவராயிருக்கிறார். வார்த்தையை அவர் நிறைவேற்றி உறுதிப்படுத்துவதே அவருடைய சொந்த வியாக்கியானமாயுள்ளது. கவனியுங்கள், அவருடைய மேசியாவின் செய்தியை உறுதிப்படுத்துதல். மேசியா வரும்போது என்ன செய்வாரென்று அவர் வாக்களித்தார். அவர் வந்த போது.... 27கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகளும் கூட, அவர்கள் இருந்த பாபிலோனிலிருந்து தென்மேற்கு திசையில் நோக்கின போது அவர்கள் கம்பீரமான ஒரு நட்சத்திரத்தைக் கண்டனர். உங்களுக்குத் தெரியுமா, எந்த வான்நிலை ஆராய்ச்சி நிலையமும் (அங்கே அவர்கள் நட்சத்திரத்தின் மூலம் நேரத்தைக் கணித்தனர், அங்கு மேதைகள் நட்சத்திரங்களின் மேல் ஆராய்ச்சி செய்தனர். அதை கண்டதாக வரலாறு எதுவும்... அவர்கள் யாருமே நட்சத்திரத்தைக் கண்டதாக வரலாறு எதுவுமில்லை. ஏன்? அது அவர்களுக்கு அருளப்படவில்லை. அவர்கள் அப்படிப்பட்ட ஒன்றை எதிர்நோக்கியிருக்கவில்லை. ஆனால் இந்த சாஸ்திரிகளோ யாக்கோபில் ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்பதை அறிந்து, அதை எதிர் நோக்கியிருந்தனர். இயேசு பெத்லகேமில் பிறந்த அந்த நேரம் முதற்கொண்டு அது தோன்றி... நமது கிறிஸ்தவ பாரம் பரியங்களை நானறிவேன். நமது சபைகள் எல்லாவற்றையுமே தலைகீழாக செய்துவிட்டன. நீங்கள் வெளியே சென்று பார்த்தால், சாஸ்திரிகள் வந்து குழந்தையை பணிந்து கொள்வது போல அலங்காரம் செய்துள்ளதைக் காண்பீர்கள். அப்படிப்பட்ட எதுவுமே வேதத்தில் இல்லை. அவர்கள் சமவெளிகளையும், டைக்ரீஸ் நதியையும் கடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த இடத்தை அடைந்தனர். அவர்கள் அங்கு வந்து ஒரு சிறு குழந்தையைப் பணிந்து கொள்ளவில்லை. ஏறக்குறைய இரண்டு வயது சிறு பிள்ளையையே பணிந்து கொண்டனர். அந்த சமயத்தில் ஏரோது ஏன் இரண்டு வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகளை கொன்று போட வேண்டும்? அப்படி அவன் செய்தால், மேசியாவும் அகப்பட்டு கொள்வார் என்பதனால். பாருங்கள், அவர்கள்... தேவன் தமது வார்த்தையினால் அதை உறுதிப்படுத்தினார். 28இந்த சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்த போது... அந்த நட்சத்திரம் அவர்களை உலகத்தின் மதத்தலை நகராக விளங்கிய எருசலேமுக்கு வழிநடத்தினது. அவர்கள் அதன் வாசல்களில் பிரவேசித்த மாத்திரத்தில் அந்த நட்சத்திரம் (அவர்களை வழி நடத்தின இயற்கைக்கு மேம்பட்ட அது, அவர்களுக்கு எதையும் காண்பிக்க மறுத்தது. இந்த அருமையான மனிதர், ஐசுவரியவான்கள், சிறந்த துணிகள் விரிக்கப்பட்டிருந்த ஒட்டகங்களுடன் தெருக்களில் இங்கும் அங்கும் சென்று அவர்கள் தெருக்களில் இங்கும் அங்கும் சென்று, ''யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம்'' என்றனர். அந்த மகத்தான தலைநகரம், மேய்ப்பர்களின் செய்திக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அதற்கான பதிலைப் பெற்றிருக்கவில்லை, அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. எல்லா ஸ்தாபனங்களுக்கும் தலைமையாய் விளங்கின இடம் அதற்கு விடையளிக்க முடியவில்லை. அது சனகரீப் சங்கத்தை கலக்கினது. அவர்கள் வேதபாரகரை வரவழைத்து படிக்கச் சொன்னார்கள். அவர்கள் மீகா எழுதிவைத்திருந்த, “பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் (மிகச் சிறியது), என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்படுவார்'' என்னும் வரலாற்றைப் படித்துக் காண்பித்தனர். வேத வசனம் வாசிக்கப்பட்டு அது அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உறுதிப்பட்ட பின்பும், வேதவசனம் அவ்வாறு முன்னுரைத்த போதிலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நாளுக்கென வாக்களிக்கப்பட்டுள்ள வேத வாக்கியங்கள் வெளிப்படுத்தப்படும் போது, அவர்கள் அதை இன்று ஏற்றுக்கொள்வார்களோ என்று நான் சந்தேகிக்கிறேன். நான் மறுபடியும் உங்களுக்கு பிரசங்கம் செய்யாமல் போய்விடக்கூடும், ஆனால் இதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள்! பிதாவின் மகத்தான ஞானம் மனிதனின் ஞானத்தை மிகவும் பைத்தியமாக்குகிறபடியால் அது மனிதனை சிறுமைப்படுத்துகிறது. மனிதன் மிகவும் வெட்கப்படும்படியான நிலைக்கு அது அவனைக் கொண்டு வந்து விடுகிறது. அவன் தவறு என்பதை ஒத்துக்கொள்ள, அவன் போதிய அளவுக்கு பெரியவனாயில்லை. பிதாவானவர் தம்முடைய வார்த்தை உண்மையென்றும், அவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றி வருகிறார் என்றும் எவ்வளவாக நிரூபித்த போதிலும், மனிதன் தன் கதையிலேயே நிலை கொண்டிருக்கிறான். மனிதன் தன் ஞானத்தை தேவனுடைய ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்ததாக பாவித்து, அது அவனுடைய ஞானத்தின்படி நடக்கவில்லை என்றால், ''ஏன் அப்படி?'' என்று கேட்கிறான். அது ஒவ்வொரு காலத்துக்கும் உண்மையாய் இருந்து வருகிறது, இப்பொழுதும் அப்படியே உள்ளது. இந்த முழு விஷயமும் இப்பொழுது எவ்வளவாக பொருந்துகிறது பார்த்தீர்களா? 29அது மேய்ப்பர்களுக்கு எப்படிப்பட்ட உற்சாகத்தை விளைவித்தது! தூதர்கள் இறங்கி வந்து மேய்ப்பர்களிடம் பேசினது, தேவதூதர்கள் வந்து மேய்ப்பர்கள் கூட்டத்துக்கு பேசுவதென்பது! நீங்கள் எப்பொழுதாவது ஒரு ஆடு மேய்ப்பனிடம் சிறிது நேரம் பேசினதுண்டா, அல்லது அவனுடன் சிறிது நேரம் தங்கினதுண்டா என்று தெரியவில்லை. அப்படி நீங்கள் செய்திருப்பீர்களானால், நான் இன்னும் சிறிது நேரத்தில் குறிப்பிடப்போவதன் காரணமாக அதை கூற விரும்பவில்லை. ஆனால் மேய்ப்பன் ஆடுகளுடன் நீண்டக்காலம் இருப்பதால், அவன் ஆட்டைப் போலவே சிரிக்கிறான் (சத்தமிடுகிறான்), ஆட்டைப் போலவே பேசுகிறான், ஆட்டின் மேலுள்ள மணத்தைப் போன்ற மணத்தை அவன் மேல் பெற்றிருக்கிறான். அது உண்மை . ஏனெனில் அவன் ஆடுகளின் கூடவே இருக்கிறான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவனுடைய ஆடுகளே. 30இப்பொழுது, உறுதிப்படுத்தப்பட்ட சத்திய வார்த்தை. இந்த மேய்ப்பர்கள், தாழ்மையுள்ள படிப்பில்லாத மனிதர்கள்.... ஒரு ஆட்டுக்குட்டி புதிதாக பிறந்துள்ளது என்னும் செய்தியைப் பெறுவதென்பது ஒரு மேய்ப்பனுக்கு எவ்வளவு கனத்தை அளிக்கக் கூடியதாயும் பொருத்தமாயும் உள்ளது. அது மேய்ப்பனிடம் தவிர வேறு யாரிடமும் வர முடியாது. ஆகையால் தான் அவர் தொழுவத்தில் பிறந்தார், வீட்டில் பிறக்கவில்லை. ஆடுகள் வீட்டிலோ அல்லது வர்ணம் தீட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட மருத்துவமனை அறையிலோ பிறப்பதில்லை. பாருங்கள்? அவை களஞ்சியத்திலும், வயல் வெளிகளிலும் பிறக்கின்றன. ஆகையால் தான் அவர் அடிக்கப்படும் படிக்கு கல்வாரிக்கு கொண்டு போகப்பட்டார். ஆடு தானாகவே வழியில் நடந்து அடிக்கப்படும் இடத்தை அடைய நீங்கள் செய்ய முடியாது. அது உங்களுக்குத் தெரியுமா? ஆடுகளை அடிக்கப்படும் இடத்துக்கு நடத்திச்செல்ல அவர்கள் வெள்ளாட்டை வைத்திருக்கின்றனர். அடிக்கப்படும் இடத்தை அடைந்தவுடனே, வெள்ளாடு குதித்து ஓடி, செம்மறியாடுகளை உள்ளே விடுகின்றது. செம்மறியாடு அங்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அது தானாகவே அங்கு செல்லாது. எனவே இந்த செய்தி மேய்ப்பர்களிடம் வரவேண்டும். அவர்கள் செய்தியாளன் சொன்ன இடத்திலே குழந்தை - தேவனைக் கண்டனர். செய்தியாளன் அளித்த செய்தியின் படியே அவர்கள் அவரை முன்னணையில் கண்டனர் - அவர் எங்கேயிருப்பார் என்று தேவதூதர்கள் கூறினார்களோ, அதேவிடத்தில். 31ஜனங்கள், “ஒரு தேவதூதன் என்னுடன் பேசி, இன்னின்னதை உரைத்தார் என்று கூறுவதை நான் கேட்டதுண்டு. அது சிலசமயங்களில் எவ்வளவு கேலித்தனமாய் உள்ளது! தேவதூதன் பேசி இன்னின்னதை உரைத்ததாக ஜனங்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது வார்த்தைக்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளது. தேவதூதன் எப்படி வார்த்தைக்கு முரணானவைகளைக்கூற முடியும்? அப்படி இருக்கவே முடியாது. இன்னின்ன காரியம் நடக்கும் என்று தேவன் உன்னுடன் கூறியிருப்பாரானால் (அவர் கூறினதாக நீ சொல்லுகிறாய்), அது நிறைவேறாமல் போனால், அது தேவன் உன்னிடம் பேசினதல்ல என்பதை நினைவில்கொள். அது உண்மை. தேவன் பொய் சொல்லமாட்டார். அவர் பொய்யில் காணப்படுவதில்லை. 32அவர்கள் குழந்தையைக் கண்டபோது, அது அவர்களுக்கு எவ்வளவு களிப்பாக இருந்திருக்கும்! ஏனெனில் தேவதூதன் அளித்த செய்தியின்படியே அது இருக்கக் கண்டனர் - தேவதூதன் சொன்ன அதே இடத்தில். அது எப்படிப்பட்ட ஒரு காரியமாக அவர்களுக்கு இருந்திருக்கும்! ஒரு முன்னணையில். ஏன்? தொழுவம் இந்த மேய்ப்பர்களுக்கு எவ்வளவு பழக்கமாக இருந்ததென்று பாருங்கள்! அங்கு ஒரு வேதசாஸ்திரி வந்திருந்தால் என்ன செய்திருப்பான்? அவன் துர்நாற்றம் தாளாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு, ''என்னை இங்கிருந்து கொண்டு போங்கள்'' என்று சொல்லியிருப்பான். பாருங்கள்? அந்த இடத்துக்கு அவன் பொருந்தாதவனாய், கஷ்டப்பட்டிருப்பான். ஆனால், பாருங்கள், மேய்ப்பர்களுக்கோ தங்கள் வீட்டிலிருந்ததைப் போன்ற சூழ்நிலை அங்கிருந்தது. தேவனுக்கு தமது செய்தியை எங்கு அனுப்ப வேண்டுமென்று தெரியும். பாருங்கள்? அது முற்றிலும் உண்மை. மேய்ப்பர்கள் தொழுவத்தில் தாங்கள் இருந்த நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட செய்தி ஒன்றைக் கேட்டனர். எவ்வளவு அழகானது! மேசியாவின் முன்னிலையில் அவர்கள் கேட்ட செய்தி உறுதிப்பட்டது. மேசியா பூமியில் இருக்கிறார் என்னும் செய்தியை மேய்ப்பர்கள் கேட்டு, அவருடைய சமுகத்தில் வந்து அவர்களுடைய சூழ் நிலையிலேயே அவர் இருப்பதைக் கண்டு, அவர்கள் கேட்ட செய்தி உண்மையென்று அங்கு உறுதிப்படுவதை அறிந்து கொண்டனர். தேவன் இவ்வளவு பெரிய காரியத்தை அவர்களுக்கு செய்தார் என்பது எப்படிப்பட்ட உற்சாகத்தை அவர்களுக்கு அளித்திருக்க வேண்டும்! 33அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அறிவாளிகளுக்கு பொருந்தும் ஒரு இடமாக இல்லாதபடியால், அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிப்போயிருப்பார்கள். ஏன்? செய்தியாளர்கள் சாதாரண மேய்ப்பர்களிடம் வருவது. ஒருக்கால் அவர்கள்... இந்த... அந்த மேய்ப்பர்களில் சிலருக்கு தங்கள் பெயரைக் கையெழுத்து போடவும் கூட தெரிந்திருக்காது. அது சந்தேகம் தான். இயேசு இவ்வுலகில் இருந்த போது, தமது ஆடுகளை மேய்க்கத் தெரிந்து கொண்ட மேய்ப்பனுக்கு, ''பேதுருவே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?'' ''ஆம், ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்.“ “என் ஆடுகளை மேய்ப்பாயாக.” பேதுரு படிப்பறியாதவனும் பேதமையுள்ளவனுமாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது. இருந்த போதிலும், அப்படிப்பட்டவர்களை மேய்ப்பர்களாக தெரிந்து கொள்ளுதல். 34அக்காலத்திலிருந்த சபை அங்கத்தினர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், நன்கு வேதசாஸ்திர பயிற்சி பெற்ற சமுதாயத்தினருக்கும், முன்னணை பொருந்தாத ஒரு இடமாக இருந்திருக்கும். உங்களில் அநேகருக்கு (ஒருக்கால் நகரவாசிகளுக்கு) யூதேயாவின் தொழுவத்தில் எப்படி துர்நாற்றம் வீசியிருக்கும், அது எப்படி இருந்திருக்கும், தொழுவத்தில் மிருகங்கள் எப்படி இருந்திருக்கும் என்று தெரியுமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் இன்றைய உயர் வகுப்பினர் சிலருக்கு அந்த இடம் பிடிக்காமல், அதன் வாசலுக்குள் நுழைந்திருக்கவே மாட்டார்கள். ஆனால் தேவனோ, தமது அளவற்ற ஞானத்தினால், அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கு வெளிப்படுத்த பிரியம் கொண்டார். அக்காலத்திலிருந்த அறிவாளிகளும், ஞானிகளும் அதை நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அவர்கள் காணப்படுவது அவர்களுக்கு பெருத்த அவமானமாய் இருந்திருக்கும். முதலாவதாக, அவர்கள் ஒரு கூட்டத்துக்கு சென்று, அங்கு படிப்பில்லாத மேய்ப்பர்கள் ஒரு அற்புத சம்பவம் நிகழ்ந்ததாக கூறினதைக் கேட்டு விசுவாசித்ததாக அவர்களுடைய சபைகளில் சாட்சி கூறியிருந்தால், அவர்கள் சபையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டிருப்பார்கள். இந்த படிப்பில்லாத மேய்ப்பர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் பிடிபட்டிருந்தால், பெத்லகேமின் சமுதாயத்தை விட்டே துரத்தப்பட்டிருப்பார்கள். அது அவர்களுக்கு பெருத்த அவமானமாய் இருந்திருக்கும்! அவர்கள் இப்படிப்பட்ட சாதாரண ஜனங்களுடன் சம்பந்தப்பட்டு.... அவர்கள் அவரை வரவேற்க ஆயத்தமாயிருக்கும் போது, தேவன் தமது செய்தியை படிப்பில்லாத மேய்ப்பர் கூட்டத்துக்கு அளித்தார் என்னும் மதத்துரோகமான கருத்துக்களை விசுவாசித்திருந்தால், அவர்களுடைய தொடர்பு அறுபட்டு, அக்காலத்திலிருந்த சங்கங்களின் உறுப்பினர்களில் ஒருவராக கருதப்பட்டிருக்க மாட்டார்கள் - அவர்கள் உயரிய சிந்தையுடையவர்களுடன் சம்பந்தம் கொள்ளாமல், அப்படிப்பட்ட ஒன்றுடன் சம்பந்தம் கொண்ட காரணத்தால். 35குருவானவர், “இப்படிப்பட்ட மதத்துரோகமான கருத்துடன், மூடத்தனமான கருத்துடன், ஆரம்ப பள்ளியிலும் கூட படிக்காத காட்டில் வாழும் மனிதன் கூறின கருத்துடன் என் பிரகாரத்துக்குள் நுழைய உனக்கு என்ன துணிச்சல் ஒரு தேவதூதன் வந்து அவர்களுடன் பேசினான் என்னும் செய்தியை நீ விசுவாசிக்கலாமா?'' என்று கேட்டிருப்பார். ஆனால் அந்த மனிதன், அந்த செய்தி உறுதிப்பட்டதை நான் கண்டேன்'' என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அவர், ''உன் தொடர்புத் தாள்களை உடனடியாக கொடுத்து விடுகிறேன். இந்த சங்கத்தை விட்டுப் போய் விடு'' என்று கூறியிருப்பார் - காலங்கள் மாறுகின்றன, ஆனால் ஜனங்கள் மாறுவதில்லை. இன்றைக்கு அதேவிதமாக நடந்தால், அவர்கள் சபையை விட்டுத் துரத்தப்பட்டிருப்பார்கள். 36ஆனால் மேய்ப்பர்களுக்கோ தேவ ஆட்டுக்குட்டியைக் கொண்டிருந்த இடம் அவர்கள் பழக்கப்பட்ட இடம் போல் அமைந்திருந்தது. எந்த நல்ல மேய்ப்பனுக்கும் அது அப்படித்தான் இருக்கும். ஆடுகளை கண்காணிக்கும் நல்ல மேய்ப்பன், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினவை வெளிப்படையாய் நிறைவேறி உறுதிப்படுவதைக் காணும் போது, அவனுக்கு அது தன் சொந்த இடம் போல் அமைந்து விடுகிறது. யார் என்ன கூறின போதிலும் அவன் கவலை கொள்ளாமல், ''தேவன் வாக்குத்தத்தம் செய்தார், அதை அவர் நிறைவேற்றினார்'' என்பான். அவர்கள், ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது கிடையாது. அது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே'' என்கின்றனர். ஆனால் வார்த்தையின் உண்மையான மேய்ப்பன் உயிர்த்தெழுதலின் வல்லமையோடு, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று பிரசங்கம் செய்யட்டும்! பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, ''வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். அவர் எந்த இடத்தில் அழைத்தாலும், அந்த வாக்குத்தத்தமும் ஆசீர்வாதமும் உண்மையாயுள்ளது. அது உறுதிப்படுவதை உண்மையான, வார்த்தையைப் போஷிக்கும் மேய்ப்பன் காணும் போது, உலகிலுள்ள வேத சாஸ்திரிகள் அனைவரும் அதை அவனிலிருந்து எடுத்துப்போட முடியாது. ஏனெனில் தேவன் அவ்வாறு கூறினார், அது நிறைவேறுகிறது என்பதை அவன் அறிந்திருக்கிறான். அவ்வளவு தான். அது எப்பொழுதுமே தேவனுடைய வார்த்தை. அவருடைய வார்த்தை மாம்சமாகி, அவர்கள் நடுவே வாசம் பண்ணிக் கொண்டிருந்தது. அவர்களோ அதை அறியவில்லை . 37இந்நாளிலும் அவர் அதையே வாக்களித்துள்ளார். அதை நாம் அடையாளம் கண்டு கொள்வோமா என்று வியக்கிறேன். பெருமையுள்ளவர்களும் ஞானிகளும் அப்படிப்பட்ட ஒன்றை ஒருக்காலும் ஏற்றுக் கொண்டதில்லை. மேசியா பூமியில் தோன்றுவாரானால், அவர் நிச்சயம் அவர்களுடைய ஸ்தாபனங்களில் தோன்ற வேண்டும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். அவர்கள் குழுதான் அவரை வரவேற்க வேண்டும், இல்லையென்றால் அது சரியல்ல என்பது அவர்கள் கருத்து. இதை ஆழமாக யோசித்துப் பாருங்கள். அது அவர்கள் குழுக்களில் ஒன்றாக இல்லாமல் போனால், அது... கவனித்தீர்களா, இல்லாமல் போனால் அது? தேவன் அவர்களுடைய குழுக்களில் ஒன்றையும் தெரிந்து கொள்ளவில்லை. அதனுடன் தொடர்பு கொள்ளாத ஒன்றையே அவர் தெரிந்து கொண்டார். ஏனெனில் அந்த குழு, “நாங்கள் என்ன செய்தோம் பார்த்தீர்களா?'' என்று பெருமையடித்துக் கொண்டிருக்கும். இன்றைக்கும் அவர்கள் அதையே செய்வார்கள். தேவனோ ஒன்று மற்றவர்களை தெரிந்து கொள்கிறார். ஆகையால் தான் அவர் மேய்ப்பர்களை தெரிந்து கொண்டார். மேய்ப்பர்கள் தங்கள் மத்தியில் வார்த்தை மாம்சமான தேவ ஆட்டுக்குட்டியைக் கொண்டவர்களாய், முற்றிலும் சங்கோஜமின்றி நல்லுணர்வை பெற்றிருந்தனர். பெருமை கொண்டவர்களும் ஞானிகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, அது அவர்களைக் கடந்து சென்றது. 38இன்றும், அல்லது வேறெந்த காலத்திலும் அவ்வாறே இருந்து வருகிறது என்று நாம் சொல்லலாம். மார்டின் லூத்தரின் நாட்களில் அவ்வாறே இருந்தது. ஜான் வெஸ்லியின் நாட்களிலும் அவ்வாறே இருந்தது. பெந்தெகொஸ்தேகாரரின் நாட்களிலும் அவ்வாறே இருந்தது. ஆனால் தேவன் ஒரு மனிதனின் ஸ்தாபனத்தின் காரணமாக நிறுத்திவிடுவதில்லை. அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்த அவர் தமது ஆவியை வேறிடத்துக்கு நகர்த்திக் கொண்டே சென்றார். அது அவர்களுடைய சொந்த ஆலோசனை சங்கத்தின் தரத்திலேயே வரவேண்டும், இல்லையென்றால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்றைக்கு சபைகள் அனைத்தும் தலைகனமுள்ளதாய், “நாங்கள் இன்னின்னதை செய்து எல்லா சபைகளையும் ஒன்றாக இணைக்கப் போகிறோம்'' என்கின்றனர். பிராடெஸ்டெண்டுகள், கத்தோலிக்கர், வைதீக சபைகள் இவர் அனைவரையும் ஒன்றாக இணைக்கக் கூடிய ஒரு தலைவனை அவர்கள் எதிர் நோக்கியிருக்கின்றனர். 39சகோதரரே, வெவ்வேறு மார்க்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு நான் பிரசங்கம் செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றேன். அவை ஒவ்வொன்றிலும் நல்லவர்கள் உள்ளனர். இப்பொழுது இதை தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஸ்தாபனமும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அது ஸ்தாபனமாக இருக்க முடியாது. அது உங்களை வலுக்கட்டாயப்படுத்தும்.'' இன்று டூசான் செய்தித்தாளைப் படித்தீர்களா? கத்தோலிக்க பாதிரிமார்கள் குரு பட்டாபிஷேகத்தில் உதவி செய்தனராம்... அதாவது மிஸ் ஸெளரியில் ஒரு பிராடெஸ்டெண்டு குருவானவருக்கு குரு பட்டாபிஷேகம் கொடுக்க அவர்கள் உதவி செய்தனராம். இதை ஆதரிப்பவர் யார்? பிரஸ் பிடேரியன்கள், பாப்டிஸ்டுகள், லூத்தரன்கள், ''அசெம்பிளீஸ் ஆப் காட்டைச் சேர்ந்தவர்கள். அது டூசான் செய்தித்தாளில் உள்ளது. ஓ, அது அதிர்ச்சியை விளைவிக்கிறது! அதிலுள்ள மனிதர்கள் அல்ல, அதிலுள்ள மதத்தலைவர்கள், அரசாங்கத் தலைவர்கள் இதை திரிக்கின்றனர். உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த முறைமை உங்களை அதற்குள் நுழைத்து விடுகிறது. நீங்கள் ஸ்தாபனமாக இருந்து கொண்டு பூமியின் மேல்வரவிருக்கும் கோபாக்கினைக்குத் தப்ப முடியாது. அது உண்மையா என்று நீங்களே அறிந்து கொள்ளுங்கள். அது நடக்கும் போது ஒருக்கால் நான் இவ்வுலகை விட்டுப்போயிருப்பேன். இந்த ஒலி நாடாக்களில் ஒன்றை அப்பொழுது கேளுங்கள். அது உண்மையல்லவென்றால் நான் ஒரு கள்ள சாட்சி. அது உண்மையானால், நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறினேன். 40அது அவர்களுடைய ''பாஸிடிவ் யோசனைக்கு'' (Positive thinking) விரோதமாக செயல்படும் ஏதோ ஒருவகையான பொல்லாத ஆவி என்று அவர்கள் அழைத்திருப்பார்கள். இன்றைக்கு பாஸிடிவ் யோசனையைக் குறித்து நீங்கள் அதிகம் கேள்விப்படுகிறீர்கள். அதாவது உங்கள் மனதை ஒன்றன் மேல் செலுத்தி அது நிச்சயம் நடக்கும் என்று நினைப்பது. பிசாசும் கூட அப்படி செய்ய முடியும்! ஒன்றே ஒன்று மாத்திரமே எல்லாவற்றின் மேலும் ஆளுகை செய்கிறது, அதுதான் தேவனுடைய வார்த்தை. நீங்கள் வார்த்தைக்கு முரணாக சிந்திப்பீர்களானால், உங்கள் யோசனையைக் கைவிடுங்கள். வார்த்தையின் மேல் சிந்தனை செய்யுங்கள். “மேசியா அப்படிப்பட்ட அசுத்தமான இடத்தில் காணப்படமாட்டார் என்று அவர்கள் எண்ணினர். வேத சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்த ஒரு பிரதான ஆசாரியன் அல்லது குருவானவர், சாணம் நிறைந்த தொழுவத்துக்கு வருவார் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஒரு ஏழ்மையான, தாழ்மையான, படிப்பில்லாத மேய்ப்பன் அங்கு வந்து, ''பாருங்கள், இதுதான் அந்த குழந்தை, அந்த செய்தியாளன் என்று என்னால் நிரூபிக்க முடியும்'' என்று கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் தெரியுமா? ''அந்த மனிதன் நேர்மையும் உத்தமமுமாக இதை கூறுகிறான். ஆனால் அவன் கூறுவது முற்றிலும் தவறு'' என்று கூறியிருப்பார்கள். 41ஜனங்கள் மிக நல்ல வாழ்க்கை வாழ்ந்து, மற்ற ஜனங்கள் அவர்களை நம்பாததை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் அப்படிப்பட்டவர்களுக்கு விரோதமாக கூறுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும், ''இந்த மனிதன் உத்தமமாக தவறாயிருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. தேவனே, அவர் அப்படி செய்யாமலிருப்பாராக'' என்கின்றனர். ஆனால் இங்கு அவர்களுக்கு அத்தாட்சி இருந்தது! ''நீங்கள் முன்னணைக்கு சென்று குழந்தை அங்கு கிடத்தியிருக்கிறதா என்று பாருங்கள். அந்த அத்தாட்சி இருந்த போதிலும், அவர்கள், ''நீங்கள் ஏதோ ஒரு அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது தான் உங்களை இவ்வாறு கூறத் தூண்டுகிறது'' என்பார்கள். இருப்பினும் அது தேவனுடைய வார்த்தையின்படி அமைந்திருந்தது. அவர்களோ அதை காண முடியாதபடிக்கு மிகவும் குருடாயிருந்தனர். அவர்களுடைய வேதசாஸ்திரம் அவர்களைக் குருடாக்கிப் போட்டது. என்ன ஒரு பரிதாபம்! அப்படிப்பட்ட இடத்தில் அகப்பட்டுக் கொண்டாரா? அப்படிப்பட்ட அசுத்தத்திலா? ஒரு முன்னணையிலா?'' அவர் வருவதற்கென்று அவர்கள் அழகான இடத்தை வைத்திருந்து, எல்லாவற்றையும் அவர் வருவதற்கென்று ஒழுங்கு செய்த பிறகு, அவர் அப்படிப்பட்ட இடத்துக்கு இறங்கி வந்து (அங்கு சென்று, இந்த செய்தியை அவர்களுடைய போதகர்களுக்கு அறிவிக்கவில்லை என்று நினைத்துப் பார்க்கும் போது! ''அந்த செய்தியை அவர் படிப்பில்லாத மேய்ப்பர்களுக்கு அறிவித்தாரா? அவருடைய சொந்த குமாரன் முன்னணையில் பிறக்கும்படி செய்தாரா? ஒரு சாதாரண தொழுவத்திலா? வைக்கோல் வைக்கப்பட்டுள்ள முன்னணையிலா? இருக்கவே இருக்காது.'' அது மிகவும் எளிமையாக இருந்த காரணத்தால், அவர்கள் அதை விசுவாசிக்கவேயில்லை. 42அது மிகவும் எளிமையாயுள்ளது. ஆகையால் தான் ஞானிகள் எப்பொழுதும் அதைக் காணத் தவறுகின்றனர். அது அவர்களுக்கு திகைப்பை உண்டாக்குகிறது. தேவன் அங்கேயே இருந்த போது, அவர்கள் அவரை வேறு எங்கோ எதிர் நோக்கியிருந்தனர். இப்பொழுதும் நேற்றும் இன்றும் என்றும் மாறாத மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த கிறிஸ்து அவர்களுடன் இருக்கும் போது, அவரை எங்கோ தூரத்தில் எதிர் நோக்கியிருக்கின்றனர். இந்த பெரிய காரியங்கள் அனைத்தும் தள்ளப்பட்டு விட்டன. ஆனால், “மேசியா தோன்றிவிட்டார்'' என்பது நிச்சயமாக உண்மையான அறிக்கையாயிருந்தது. அதை இன்று நாம் அறிந்திருக்கிறோம். அதை இன்று நாம் விசுவாசிக்கிறோம், அதை இன்று நாம் ஏற்றுக் கொள்கிறோம். தேவன் இந்த கிறிஸ்துமஸுக்கு, இந்த நாளுக்கு ஏதாவதொன்றை வாக்களித்து, அது அப்படித்தான் என்று நிரூபித்த பிறகும், அதை விட்டு நாம் நடந்து செல்வோமானால், அக்காலத்தில் அதை உதறித்தள்ளின அவர்களைப் போலவே நாமும் இருக்கிறோம். ஏனெனில் அது நம்முடைய ஸ்தாபன சுவைக்கு ஏற்றாற் போல் வரவில்லை. ஆகையால் தான் நாம் இந்த கிறிஸ்துமஸின் போது இப்படிப்பட்ட குழப்பத்தில் இருக்கிறோம். 43இயேசு மரித்த நிலையில் இல்லை, அவர் உயிரோடிருக்கிறார். அவர் இன்றைக்கு இங்கிருக்கிறார். ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் கூறுகிறது. அவர் யோவான் 14:12ல், ''நான் என் பிதாவினிடத்துக்குப் போகிறபடியால், என்னை விசுவாசிக்கிறவன்.... (என்னை பாவனையாக விசுவாசிக்கிறவன் அல்ல, என்னை விசுவாசிப்பதாக சொல்கிறவன் அல்ல) “நான் என் பிதாவினிடத்துக்குப் போகிறபடியால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளைச் செய்வான்'' என்றார். அவர் அக்காலத்தில் செய்த கிரியைகளைக் காட்டிலும் - இந்த வேதத்தின் பக்கங்களில் எழுதி வைக்கப்பட்டதைக் காட்டிலும் - அதே விதமான அதிக கிரியைகளை செய்ததை என் சொந்த வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். ஆனால் அதுவோ இன்றைய ஞானிகளின் தலைகளில் நுழையாமல் அவர்களைக் கடந்து சென்று, இயேசு ஜெபம் செய்தது போன்று, தன்னை பாலகருக்கு வெளிப்படுத்தினது. அது உண்மை . அவர் முன்னைக் காட்டிலும் அதிக கிரியைகளை இப்பொழுது செய்திருக்கிறார்... என் காலத்தில், என்னுடைய முப்பத்து மூன்று ஆண்டு ஊழியத்தில், அவர் செய்ததாக நான் வேதத்தில் படித்ததைக் காட்டிலும், அதேவிதமான அதிகமான கிரியைகளை செய்ததை நான் கண்டிருக்கிறேன். 44அவர் அக்காலத்தில் என்ன செய்த போதிலும் சனகரீப் சங்கம் அவரை விசுவாசித்தது என்று நினைக்கிறீர்களா? அவர்கள், ''நீங்கள் மந்திரத்தால் மயங்கிவிட்டீர்கள்'' என்றனர். அவர்கள் எங்கே தவறு செய்தனர் என்று காணப்போனால்... மேசியா அவர்கள் காலத்தில் என்ன செய்வார் என்று வார்த்தை கூறினதை கவனிக்காமல் அவர்களுடைய கோட்பாடுகள் என்ன கூறுகின்றன என்பதன் மேல் கவனம் செலுத்தினர். இன்றைக்கு நாமும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்காத தவறைச் செய்கிறவர்களாயிருக்கிறோம். இயேசு, ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. நான் யாரென்று அவைகள் உங்களுக்கு அறிவிக்கின்றன என்றார். 45கவனியுங்கள், அவர்கள் இப்படி செய்வார்களென்று தேவன் முன்னறிந்தார். ஆகையால் தான் ஏன் என்பதற்கு விடையாக அவர் அதை மேய்ப்பர்களிடம் கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. அவர்கள் அதை செய்ய மாட்டார்கள், ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். ஏன் அது மேய்ப்பர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது என்று இப்பொழுது உங்களால் காண முடிகிறதா? ஏன் மேய்ப்பர்கள்? வேத சாஸ்திரிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் மேய்ப்பர்கள்? அது அவருடைய வார்த்தைக்கு முரணாக இருக்குமா? இல்லை! அவர்கள் மேய்ப்பர்கள், அவர்கள் ஆடுகளை அறிந்திருந்தனர். அதற்காகத் தான் அவர் ஒரு ஆடாக, ஒரு ஆட்டுக் குட்டியாகப் பிறந்தார். கவனியுங்கள், அவர் ஒரு ஆட்டுக்குட்டி. மேய்ப்பர்கள் என்னும் வகுப்பினர் மாத்திரமே அவரை ஏற்றுக் கொள்ள முடியும். மேய்ப்பன் ஒருவன் மாத்திரமே ஒரு ஆட்டுக் குட்டியை ஏற்றுக்கொள்ள முடியும். அதை எப்படி பாதுகாக்க வேண்டுமென்று அவர்கள் அறிந்திருந்தனர். இன்றைக்கும் நாம் ஆட்டுக்குட்டியின் செய்தியைப் பெறும் போது, அவ்வாறுள்ளது. 46குறிப்பிடத்தக்க செயல் மிகவும் தாழ்மையுள்ள, படிப்பில்லாத மனிதர் இம்மானுவேலை தொழுவத்தில் சாஷ்டாங்கமாய் பணிந்து கொள்கின்றனர். மிகவும்.... அந்த நாட்களில் தங்கள் வேத சாஸ்திரத்தைப் போதித்த ஜனங்கள் இருந்தனர். திரளான ஜனங்கள் தேசத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்து பலியை செலுத்திக் கொண்டிருந்தனர். அது அவருடைய நாசிக்கு துர்நாற்றமாயுள்ளதாக யோகோவா கூறினார். இங்கோ தாழ்மையுள்ள மேய்ப்பர்கள் தொழுவத்தில் இம்மானுவேலை சாஷ்டாங்கமாக பணிந்து கொண்டிருந்தனர் - தேவனே மாம்சத்தில் தோன்றி தொழுவத்தில் கிடத்தப்பட்டிருந்தார். பாருங்கள், நாம் சிறந்த கல்வி கற்றவர்களாய், நமக்கு ஏதோ ஒன்று தெரியும் என்று எண்ணி பெருமையோடு தலை நிமிர்ந்து நடக்கிறோம். ஆனால் தேவனோ அவையனைத்தையும் தள்ளிவிடுகிறார். பாருங்கள்? அவர் என்ன செய்வதாக வாக்களித்துள்ளாரோ, அதை எப்பொழுதும் செய்து நிறை வேற்றுகிறார். இந்த தாழ்வான மேய்ப்பர்கள் இம்மானு.... இம்மானுவேலை தொழுவத்தில் சாஷ்டாங்கமாக பணிந்து கொள்வதை சிந்தித்துப் பாருங்கள். அது மிகவும் சிறப்பானது. நிச்சயமாக! 47அதன் பிறகு அவர்கள் அவரை சாஷ்டாங்கமாக பணிந்து கொண்டு, அவர்கள் பிரசங்கித்து வந்த செய்தி உறுதிப்பட்டது என்பதை உணர்ந்த பிறகு... அவர்கள் தேவ தூதனின் நம்பத்தகாத செய்திக்காக தேவனைத் துதித்தனர். அதை இந்நாளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு நிமிடம் நின்று சிந்தித்துப் பாருங்கள். மனிதர்கள் தாங்கள் கண்டவைகளுக்காகவும்,கேட்டவைகளுக்காகவும், சத்தியம் என்று அவர்கள் அறிந்தவைகளுக்காகவும், நுண்ணறிவுள்ள சிந்தைக்கு நம்பத்தகாததாய் அமைந்துள்ள செய்தியைக் கொண்டவர்களாய், தேவனை சாஷ்டாங்கமாய் பணிந்து அவரைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர். அது மத சார்புள்ள கருத்துக்கள் அனைத்துக்கும் முரணாயிருந்தது, இருப்பினும் அதுதான் சத்தியம்! அதுவே சத்தியம்! அவர்கள் அதை விசுவாசித்தனர். மனிதனுடைய ஞானம் எவ்வளவு மூடத்தனமாக இருக்கக் கூடும்! பரம சேனையின் திரள் மேய்ப்பர்களுக்கு, அவருடைய பிறப்பை அறிவிக்கும் முதலாம் பாடலைப் பாடினதாக கூறப்பட்டுள்ளது. அதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? தன் பெயரையும் கூட எழுதத் தெரியாத மேய்ப்பன், ஆட்டுப்பட்டியைப் போல் துர்நாற்றம் கொண்டவனாய், தெருவில் நடந்து சென்று, ''உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை! அவர் பூமியில் இருக்கிறார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்'' என்று ஆர்ப்பரிக்கிறான். ஆசாரியன், “அந்த மனிதனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவன் நமது சபை அங்கத்தினர் என்று புத்தகத்தில் தேடிப் பாருங்கள். பிரமாணங்களின் ஆதாரமில்லாத அவனுடைய போதகங்களினால் அவன் நம்மை நிச்சயம் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறான். அவனை இங்கிருந்து அகற்றுங்கள். நாம் ஜனங்களின் மத்தியில் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாகக்கூடாது'' என்றான். நல்லது, நீங்கள் ஜனங்களின் மத்தியில் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளானால், தேவனுடைய பார்வையில் மகிமையடைவீர்கள். நீங்கள் இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்நாளின் மத சம்பந்தமான சுவை தேவனுடைய வார்த்தையுடன் பொருந்துவதில்லை. தேவனுடைய வார்த்தைக்கு வெவ்வேறு சுவைகள் கிடையாது. அது ஒரே சுவை, ஒரே வார்த்தை , ஒரே தேவன். அவ்வளவு தான். 48தேவதூதர்கள் அவர்களுக்கு முதல் பாடலைப் பாடினர் என்றும், அவர்கள் தேவதூதனிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றனர் என்றும் மேய்ப்பர்கள் கூறினர். ஒரு தேவதூதன் அவர்களுக்குத் தோன்றி ஒரு செய்தியை அளித்தான். அவர்கள் சென்று அந்த செய்தி உண்மை என்று கண்டு கொண்டனர். அது மாத்திரமல்ல, “தேவதூதர்கள் எங்களுக்கு அவருடைய பிறப்பைக் குறித்த முதல் பாடலைப் பாடினார்கள்'' என்றனர். பாவம் அந்த ஏழை மனிதனுக்கு இப்படி நேரிடும் என்று நீங்கள் எண்ணின துண்டா?'' என்று அவர்கள் கூறினர். அப்படிப்பட்ட ஒன்று அவர்கள் மத்தியில் நடக்காத காரணத்தால், அது அவர்களுக்கு ஒரு வினோதமான உபதேசமாகக் காணப்பட்டது. அவர்கள் அதை வேதத்தின் வாயிலாக கண்டுக்கொள்ள இயலவில்லை, அவ்வாறு கண்டுக்கொள்ள அவர்களுக்கு அருளப்படவில்லை. அது ஞானிகளுக்கு நம்பத்தகாத ஒன்று. ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு அனுபவம் அவர்களுக்கு உண்டாகவில்லை. நம்பத்தகாதது, இருப்பினும் அது உண்மை. அது உண்மையென்று நமக்குத் தெரியும். யோசித்துப் பாருங்கள்! கிறிஸ்துவின் முதல் மனம் மாறினவரும், முதல் சபையோரும் மேய்ப்பர்கள், குருவானவர்கள் அல்ல; மேய்ப்பர்கள், ஆடு மேய்ப்பவர்கள். ஏன் மேய்ப்பர்கள்? 49கவனியுங்கள்! அவர்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் வெளியே பிரசித்தம் பண்ணி, தேவனைத் துதித்து மகிமைப்படுத்தினார்கள். முதன் முறையாக தேவதூதர்கள் மனிதர்களுக்கு பாடுவதை அவர்கள் கேட்டனர். அதற்கு முன்பு தேவதூதர்கள் மனிதர்களுக்குப் பாடினதே கிடையாது. அன்று உலகில் இருந்த பாடற்குழுக்கள், எவ்வளவாக நின்று, நின்று, ''மேசியாவின் பிறப்பின் போது பாடினர்'' என்னும் பாடலை பலமுறை பாடிதங்கள் குரல்களை பழக்கியிருந்தனர். ஆனால் அவையனைத்தும் தள்ளப்பட்டுவிட்டன! தேவதூதர்கள் இறங்கி வந்து சாதாரண, எளிய மேய்ப்பர்களிடம் பாடினர், குருவானவரின் உடைகளைத் தரித்தவர்களிடம் அல்ல, ஆனால் மேய்ப்பர்களின் உடைகளைத் தரித்தவர்களிடம். செய்தியை முதலில் யார் பெற்றது என்பதைப் பாருங்கள், அது நம்பத்தகாத ஒன்று. அந்த செய்தி எங்கு அளிக்கப்பட்டது? ஆலயங்களில் அல்ல, வனாந்தரமான இடத்தில். கர்த்தருடைய தூதன் வனாந்தரமான இடத்துக்கு வந்தான். ஆலயத்துக்கு அல்ல, வனாந்தரமான இடத்துக்கு. அவன் ஆலயங்களில் வரவேற்கப்படவும் கூட இல்லை. அவர் ஆலயங்களில் இருப்பதாகவும், அவர்கள் அதை பெற்றுள்ளதாகவும் எண்ணியிருந்தனர். ஆனால் அது தவறென்று தேவன் நிரூபித்தார். “தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்''. அது உண்மை. 50முதன் முறையாக தேவதூதர்கள் ஒரு கொண்டாட்டத்தின் போது பாடினது பரலோகத்தில் தான். நீங்கள் யோபு 38:7ஜ பார்ப்பீர்களானால் (உங்களில் சிலர் குறிப்பு எழுதிக்கொள்வதைக் காண்கிறேன்), தேவன் முதலில் பூமியை சிருஷ்டிக்க திட்டமிட்ட போது; யோபு சிறந்த அறிவாளி. அவன் எல்லாவிதமான ஞானத்தையும் பெற்றிருந்தான். அவன், ''நான் பட்டண வீதியில் நடந்து செல்லும் போது, பிரபுக்கள் எனக்கு முன்பாக வணங்கி, ஞானமுள்ள என் சொற்களைக் கேட்க விரும்பினார்கள்'' என்றான். அவன் ஏன் இப்படி துன்புறுத்தப்பட வேண்டுமென்பதை அவனால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. தேவன் அவனிடம், ''இப்போதும் புருஷனைப் போல் இடைக்கட்டிக்கொள். உன்னிடம் பேச நான் இறங்கி வரப் போகிறேன்“ என்றார். அவர் பெருங்காற்றில் இறங்கி வந்த போது, யோபுவே, நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது நீ எங்கேயிருந்தாய்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. யோபு, அப்பொழுது நீ எங்கிருந்தாய்?'' என்று கேட்டார். ''நீ எங்கிருந்தாய்?'' என்னும் கேள்விக்கு அவனால் அப்பொழுது பதிலுரைக்க முடியவில்லை. பாருங்கள், முதன் முறையாக தேவதூதர்கள் ஒரு கொண்டாட்டத்தின் போது பாடினது பரலோகத்தில் தான். ஆனால் முதன் முறையாக அவர்கள் பூமியில் பாடினது, இம்மானுவேல் தேவன் பூமியில் பிறந்த போது, மேய்ப்பர்களிடம்; தேவதூதர்கள் பாடினதை முதன் முறையாகக் கேட்ட மானிடர்கள் தாழ்மையுள்ள மேய்ப்பர்களே. 51முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டு, தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, குட்டைகால் சட்டை அணியும் நமது பெண்கள் ஏதோ ஒருவிதமான சபை அங்கியை தங்கள் மேல் சுற்றிக் கொண்டு, அங்கு நின்றுபாடினால், தேவன் அதைக் கேட்க வேண்டும் என்றல்லவா நாம் நினைக்கிறோம்? அவர் மனிதனை உண்டாக்குவதற்கு முன்பே (ஊ, ஊ).... பாடல்களைப் பாடி அவரை மகிழ்விக்க தேவதூதர்கள் உள்ளனர். அவர்கள் அங்கு சென்று... தேவனுக்கு அருவருப்பான உடைகளை நீங்கள் அணியும் போது, அது தேவனால் உண்டானது என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்? நீங்கள், ''நல்லது, நான் இதை சார்ந்தவன்...'' என்கிறீர்கள். ''நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது நீ எங்கேயிருந்தாய்? அவைகளை எங்கே கட்டினேன் என்பதை சொல். அவை சுழன்று கொண்டிருக்கும் அச்சு (axle) எங்கே? அப்பொழுது நீ எங்கேயிருந்தாய்?'' நம்முடைய ஞானத்தில் கொஞ்சத்தை தேவன் கேட்பார் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நமது ஞானம் அவருக்குப் பைத்தியமாக உள்ளது. அவர் என்ன செய்யப் போவதாக கூறுகின்றாரோ, அதை அவர் செய்வார். 52இப்பொழுது கவனியுங்கள், தேவன் வேறொரு சிருஷ்டிப்பை உண்டாக்குகிறார். அவர் அழிந்து போகக் கூடிய பூமியை, சாவுக்கேதுவான ஜீவனை சிருஷ்டித்த போது, தேவதூதர்கள் பரலோகத்தில் பாடினர். ஆனால் இங்கு அவர் மனிதனுக்கு புது ஜீவனை, நித்திய ஜீவனை சிருஷ்டித்துக் கொண்டிருக்கும் போது, தேவதூதர்கள் மூலம் தமது பிரஜைகளிடம் பாடுகிறார் - பூமியில், பரலோகத்தில் அல்ல. பரலோகத்தில் நித்திய ஜீவன் இருந்தது. பாருங்கள்? அவர் பாடினார். அழிவுள்ள சிருஷ்டிப்பு உண்டான போது, அவர்கள் பரலோகத்தில் பாடினர். இப்பொழுது அழிவில்லாத சிருஷ்டிப்பு உண்டாகும் போது, அவர்கள் பூமியிலுள்ள மக்களிடம் பாடுகின்றனர். முதன் முறையாக, மேய்ப்பர்களிடத்தில். விசேஷமானது, இல்லையா? 53அவர் ஒரு புது சிருஷ்டிப்பை தொடங்கினார். அது என்ன? அவர் தம்மையே சிருஷ்டியாக்கிக் கொண்டார். தேவன் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணினார். அது... வேதம், ''தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர் என்றுரைக்கிறது. தேவன் மானிட உருவில் சிருஷ்டிக்கப்பட்டார். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் வாசம் செய்தார். அவர் மாம்சமும் எலும்பும் கொண்ட கூடாரம் ஒன்றைக் கட்டி, அந்த கூடாரத்தில் வாசம் செய்தார். தேவன், இம்மானுவேல், “தேவன் நம்மோடிருக்கிறார்.'' அவர் வாசம் பண்ணுவதற்கென ஒரு வீட்டைக்கட்டி, அதன் மூலம் தமது பிரஜைகளுக்கு தமது வார்த்தையைப் பிரதிபலித்தார். நீங்கள் கிறிஸ்துவைக் காணும் போது, தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறீர்கள். 54ஞாபகம் கொள்ளுங்கள், ராஜா பிறக்கும் போது எப்பொழுதும் பாடல் பாடப்படும். எத்தனை பேருக்கு அது தெரியும்? உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ராஜா பிறக்கவிருக்கும் நேரத்தில் அந்த ஸ்திரீ ஆலயத்துக்கு வேகமாக ஓடிவந்து, “ஒரு படுக்கையை ஆயத்தம் செய்து, மருத்துவர்களை கூப்பிடுங்கள். ஏனெனில் நான் இம்மானுவேலை பூமியில் பிரசவிக்கப் போகிறேன்'' என்று கூறினாள் என்று நினைக்கிறீர்களா? மிகவும் தாழ்ந்த நகரமாகிய நாசரேத்தைச் சேர்ந்த ஒரு ஏழை ஸ்திரீ... டூசானையும் மற்ற இடங்களையும் விட தாழ்வானது. அப்படிப்பட்ட இடத்திலிருந்து ஒரு ஸ்திரீ பிரதான ஆசாரியனிடம் ஓடிவந்து, ''நான் இம்மானுவேலைப் பிரசவிக்கப் போகிறேன்'' என்று கூறியிருந்தால், அவர்கள் அவளை சிறையில் அடைத்திருப்பார்கள். அவர்கள் நிச்சயம் செய்திருப்பார்கள். அவனுடைய ஜனங்களின் மத்தியில் அத்தகைய மதத்துரோகச் சொற்கள் கூறப்பட்டிருந்தால், அவன் தாங்கிக் கொண்டிருக்கமாட்டான். இன்றைக்கும் அவன் தாங்கமாட்டான். இருப்பினும், அது அவ்வாறே நடந்து கொண்டிருக்கிறது. 55கவனியுங்கள், அங்கு பாடல்கள் பாடப்பட வேண்டும். ராஜாக்கள்... அவருக்கு பாடல்கள் பாடப்பட்டிருக்காது. ஜனங்கள் எவருமே அவருக்கு பாடல்களைப் பாடியிருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. அதன் காரணமாகத் தான்... இதோ இது உங்களுக்கு கூறப்படுகிறது, நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஜனங்கள் கிறிஸ்துவைக் குறித்து வெட்கப்பட்டுள்ளதன் காரணத்தால், அவர்கள் தேவனைத் துதிக்க வெட்கப்படுகின்றனர். மகத்தான ஆலயங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று கொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்கள் மதசம்பந்தமான முறைகளில் அதிகமாக நிலைத்திருக்கும் காரணத்தால், அவர்கள் அதைப் பெற்று கொள்ளமாட்டார்கள். எனவே தேவன் அவரைத் துதிப்பதற்கென வேறு யாரையாகிலும் கண்டுபிடிப்பார். ''தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' என்று யோவான் கூறினதை மறுபடியும் எடுத்துரைக்கிறேன். கவனியுங்கள், அவருடைய பிரஜைகள் அவருக்குப் பாட வேண்டும். தேவதூதர்களே அவருடைய பிரஜைகள். அவர்கள் அவருடைய செய்தியைக் கொண்டு செல்லவிருந்த அவர்களுடைய மேய்ப்பர்களிடம் பாடினார்கள். 56அதை முதலில் யார் கேட்க வேண்டும்? நிச்சயமாக அவருடைய பிரஜைகள். ராஜாவின் பாடல்களை முதலில் கேட்க வேண்டியது அவருடைய பிரஜைகளே, அவருடைய பிரஜைகள் யார்? சகோதரரே, அது விசேஷமானது அல்லவா? அது குருவானவர்கள் அல்ல. அது வேத சாஸ்திரிகள் அல்ல. அது உண்மை . அது ஸ்தாபனமக்கள் அல்ல. இல்லை, அது மேய்ப்பர்கள். ஏன்? ஒரு ஆட்டுக்குட்டி பிறந்தது, அதுதான் காரணம். பாருங்கள்? அவருடைய பிரஜைகள் அதை கேட்டனர். அவர்கள் விசுவாசிப்பார்களென்று தேவனுக்குத் தெரியும். தேவன் செய்தியை அதை விசுவாசிப்பவர்களிடமே அனுப்பினார். அவர் எல்லாம் ஞானமாக இருக்கிறார். அவருடைய செய்தியை எங்கு அனுப்புவதென்றும், அதை யார் விசுவாசிப்பார்கள் என்றும் அவருக்குத் தெரியும். வானாதி வானம் அதை பூமியில் மிகவும் தாழ்ந்த மனிதர்களிடம் அனுப்பினது. இயேசு மத்தேயு 5ல், ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது என்றார். மரியாள்... நீங்கள் வேத வசனங்களைக் குறித்துக்கொள்ள விரும்பினால், அது மத்தேயு;5. நீங்கள் வேத வசனங்களைக் குறித்துக்கொள்ள விரும்பினால்.... இங்கு நான் வேத வசனங்களை தான் எழுதி வைத்திருக்கிறேன். 57மரியாள், லூக்கா 1:52ல், அவள் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த போது, பரிசுத்த ஆவி அவள் மேல் தங்கியிருந்த போது, “அவர் தாழ்மையானவர்களை உயர்த்தினார்'' என்றாள். லூக்காவும் கூட, ''எளிய மக்கள் அவரை சந்தோஷத்தோடு கேட்டார்கள்'' என்றான் - உயர் வகுப்பினர், வேத சாஸ்திரிகள், நியாயப் பிரமாணத்திலும் வேதசாஸ்திரத்திலும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அல்ல; ஆனால் எளிய மக்கள், தாழ்வான மக்கள் அவரை சந்தோஷத்தோடு கேட்டார்கள். பரிசுத்த வேதாகமம் முழுவதிலும், மீட்பின் செய்தி மேய்ப்பர்களாலும் ஆடுகளின் மூலமாகவும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பொழுது நான் முடிக்க வேண்டும், ஏனெனில் முடிப்பதற்கு நமக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது. இந்த கருத்தை உங்களிடம் கூறுவதற்கென நான் எழுதி வைத்துள்ள அநேக வேத வசனங்களை விட்டு விடுகிறேன். 58வேதாகமம் முழுவதிலும் மீட்பு, மேய்ப்பர்கள், ஆடுகள் மூலமாக காண்பிக்கப்பட்டு வந்துள்ளது. அது உண்மை. அதை நாம் எல்லோருமே ஒப்புக்கொள்கிறோம். ஏன்? அது நிழலாகவும் முன்னடையாள மாகவும் உள்ளது. எதுவுமே.... என் கையை நான் காணாமலிருந்து, அதன் நிழலை இங்கு நான் கண்டு, ஐந்து விரல்கள் அதற்குண்டு என்று நான் காணும் போது அது பிரதிபலிப்பு என்பதை நான் அறிந்து கொள்வேன். 'நெகடிவ்' 'பாஸிடிவ்'வை பிரதிபலிக்கிறது. ஆகையால் தான் செய்தி எப்பொழுதுமே... மீட்பு ஆட்டின் மூலம் வருகிறது. ஏனெனில் தொடக்கத்திலிருந்தே அவர் தம்மை ஆடுகள், மேய்ப்பர்களின் மூலம் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவை எல்லாமே நிழல்களாகவும் முன்னடையாளங்களாகவும் அமைந்துள்ளன. 59இப்பொழுது நாம் தொடக்கத்தை நோக்குவோம். ஆதாமும், ஏவாளும், அவர் தங்களுக்களித்த செய்தியை கேட்க தேவனுடைய சமுகத்தில் நின்று கொண்டிருந்த போது, அவர்களுடைய அரைகளில் ஆட்டுத்தோல் உடுத்தியிருந்தனர். முதலாவதாக கேட்கப்பட்ட செய்தி செத்த ஆட்டுத் தோலின் மேல் கொடுக்கப்பட்டது. தேவன் ஒரு ஆட்டை கொன்று, ஆதாமையும் ஏவாளையும் ஆட்டுத்தோலை கொண்டு போர்த்தினார். அவர்கள் அத்தி இலைகளினால் தங்கள் சொந்த மார்க்கத்தை உண்டாக்கி கொள்ள முனைந்தனர். ஆனால் அது கிரியை செய்யவில்லை. அதன் பிறகு தேவன் அவ்வாறு செய்தார். தொடக்கத்திலிருந்தே பாவ நிவாரணத்துக்கென்று ஆடு பலி நியமிக்கப்பட்டது, ஆடு பலி. இதை இங்கே முடித்துக் கொண்டு, அது ஏன் மேய்ப்பர்களாக இருக்க வேண்டியதாயிருந்ததென்றும், அவர் ஏன் ஆடாக இருக்க வேண்டியதாயிருந்ததென்றும் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறோம். 60பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள், பழுதற்ற ஆட்டுக்குட்டியானவர் வரப்போகிறார் என்றுரைத்த அவருடைய வார்த்தையின் மேல் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்துக்கு அறிகுறியாக ஆட்டுத்தோலை போர்த்துக் கொண்டிருந்தனர் (அது நமக்குத் தெரியும், (ஊ,ஊ). ஆகையால் தான் தீர்க்கதரிசிகள் அப்படி செய்தனர். தேவனுடைய வார்த்தை வேதசாஸ்திரிக்கு வருவதில்லை. யாருக்குமே... அதை குழப்பிவிடுகிறவன் அவனே. அது உண்மை. ''இவன் ஒரு வேதசாஸ்திரி'' என்று நீங்கள் கூறுகின்றீர்களே... அப்படி ஒன்றுமே கிடையாது. அது எனக்குத்தெரிந்த எல்லாவற்றைக் காட்டிலும் அவனை வார்த்தையிலிருந்து அதிக தூரம் அகற்றிவிடுகிறது. பாருங்கள்? தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையும் தேவனும் ஒரு போதும் மாறுவதில்லை. வேதத்தில் எங்கு நோக்கினாலும், தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசிகளிடத்தில் வந்தது. அது வேதசாஸ்திரிகள் அல்லது டாக்டர் பட்டம் பெற்றவர்களிடத்தில் வரவில்லை, தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வந்தது. அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர். 61தீர்க்கதரிசிகள் வழக்கமாக ஆடு மேய்ப்பவர்களாக இருந்தனர். அவர்கள் ஆட்டுத்தோலை உடுத்த காரணம், அவர்கள் மேய்த்த ஆடுகளின் தோலை போர்த்துக் கொண்டனர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட சந்ததிக்கு அளிக்கப்பட்ட முதல் செய்தியே ஆட்டுத்தோலின் மேல் தான். நான் மறுபடியும் கூறுகிறேன், தீர்க்கதரிசிகள் ஆட்டுத்தோலினால் தங்களை சுற்றிக் கொண்டிருந்தனர். அதன் மூலம், அந்த பலிக்காக பழுதற்ற ஆட்டுக் குட்டியானவர் ஒருவர் வரப்போகிறார் என்று அவர்கள் விசுவாசித்ததாக சாட்சி பகர்ந்தனர். அந்த ஆட்டுத்தோலின் மேல் தான் அவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தை வந்தது. இந்த ஆடு மேய்ப்பவர்கள்... இந்த தீர்க்கதரிசிகள் வழக்கமாக ஆடு மேய்ப்பவர்களாயிருந்தனர். ஆபிரகாம் ஆடு மேய்ப்பவன், ஈசாக்கு ஆடு மேய்ப்பவன், யாக்கோபு ஆடு மேய்ப்பவன், மோசே ஆடு மேய்ப்பவன், தாவீது ஆடு மேய்ப்பவன். தேவனுடைய பிரதிநிதிகள் அனைவருமே வழக்கமாக ஆடு மேய்ப்பவர்களாயிருந்தனர். 62அது ஏன் மேய்ப்பர்களிடத்தில் வந்தது என்று நாம் கண்டு பிடிக்கப்போகின்றோம். மேய்ப்பன் வழி நடத்தாமல் போனால் ஆடுகளுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. அவை... ஆட்டுக்கு ஒன்றுமே செய்ய முடியாது, அது தானாக செல்ல முடியாது. ஆகையால் தேவன் தமது விசுவாசி பிள்ளைகளை ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார். அவை வழி நடத்தப்பட வேண்டும்! ஆனால் எது உங்களை வழிநடத்துகிறது என்பதைக் குறித்து கவனமாயிருங்கள். உங்களை வழிநடத்த ஒரு வெள்ளாட்டை தெரிந்து கொள்ளாதிருங்கள். அது உங்களை அடிக்கப்படும் இடத்திற்கு நடத்திச் சென்று விடும். நம்மை வழி நடத்த தேவன் நமக்கு ஒரு வெள்ளாட்டைக் கொடுக்கவில்லை, அவர் தமது குமாரனை (பரிசுத்த ஆவியை) கொடுத்தார். அவரே நமது வழிகாட்டி, மனிதனால் ஏற்படுத்தின ஏதோ ஒரு மேய்ப்பன் அல்ல; ஆனால் ஆடுகளுக்கு ஆடுகளின் ஆகாரம் அளிக்கும் தேவனால் அளிக்கப்பட்ட மேய்ப்பன். 63நீங்கள் ஒரு பன்றியைக் கொண்டு வந்து அதனிடம், ''உன்னை ஆட்டுக்குட்டியாக்கப் போகிறேன்'' என்று சொல்லி, அதைக் கழுவி, அதன் கால் நகங்களுக்கு வர்ணம் தீட்டி, ஆடுகளுக்கு தரும் ஆகாரத்தைப் போன்ற நல்ல ஆகாரத்தை அதற்கு கொடுத்து, அதை தரையிலோ அல்லது ஆட்டு மந்தை இருக்கும் ஆல்ஃபால்பாபுல் வெளியிலோ விட்டுவிட்டால், அங்கு சேற்றுப் பள்ளம் எங்காகிலும் இருந்தால், அந்த பன்றி உடனே விரைவாக அந்த சேற்றுப் பள்ளத்துக்கு போய்விடும். பாருங்கள்? ஏன்? அதன் சுபாவம் பன்றியின் சுபாவமாய் உள்ள காரணத்தால். ஆகையால் தான் இன்றைய சபை அங்கத்தினர்களும் உலகத்தின் காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய சுபாவம் இன்னும் மாறவில்லை. அவர்கள் எந்த விதமான மதசம்பந்தமான, வேத சாஸ்திர அசுத்தத்தையும் தின்பார்கள், ஆனால் தேவனுடைய வார்த்தையையோ அவர்களால் சகிக்க முடியாது. அவர்கள் போய் வார்த்தையைக் கேட்டு... 64உங்களுக்குத் தெரியுமா, உலகிலேயே மிகவும் மாய்மால முள்ளது காகமே. பேழையிலிருந்து இரண்டு பறவைகள் வெளியே விடப்பட்டதாக வேதத்தில் காணப்படுகிறது. காகம் வெளியே சென்று திரும்பி வரவேயில்லை. ஏனெனில் அது ஒரு தோட்டி. அது செத்த பிணங்களின் மேல் உட்கார்ந்து கொண்டு வயிறு புடைக்கத் தின்றது. ஆனால் நோவா புறாவை வெளியே அனுப்பின போது, அதனால் துர்நாற்றத்தை சகித்து கொள்ள முடியவில்லை. எனவே அது பிதாவின் வீட்டுக்கு திரும்பி வந்து, நோவா அதை உள்ளே விடும் வரைக்கும் கதவைத் தட்டிக் கொண்டிருந்தது. காகம் செத்த குதிரையின் மாம்சத்தை நாள் முழுவதும் தின்று விட்டு, அதன் பிறகு வயல் வெளிக்கு சென்று புறாவுடன் தானியத்தை தின்னும். ஆனால் புறா அங்கு பறந்து சென்று செத்த குதிரையின் மாம்சத்தை தின்று, அதன் பிறகு தானியத்தை தின்னுமானால், அது அதை கொன்று போடும். பாருங்கள், புறாவுக்கு பித்த நீர் கிடையாது. ஆகையால் அதனால் செத்த மாம்சத்தை ஜீரணிக்க முடியாது. தேவனுடைய எந்த புறாவும், வார்த்தையை புசிக்கும் எந்த புறாவும், ஆடும், சுத்தமான மிருகமும், அவைகளுக்கு நீங்கள் உலகத்தின் காரியங்களைக் கொடுப்பீர்களானால், “ஒருவன் உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்பு கூர்ந்தால், அவனிடத்தில் பிதாவின் அன்பு சிறிதளவும் கூட இல்லை'' என்று அவைகளின் எஜமான் கூறியுள்ளார் என்பதை அறிந்துள்ளன. நீங்கள் அவனுக்கு தேவனுடைய வார்த்தைக்கு முரணான ஒன்றைக் கொடுப்பீர்களானால், அவனால் அதை சகித்து கொள்ள முடியாது. ஆனால் பிசாசும், உலகமும் கூட, அதை எடுத்துக் கொண்டு, அது எல்லாம் தேவன் என்று கூறிவிடும். நீங்கள் தண்ணீரையும் எண்ணெயையும் கலக்க முடியாது. அவை ஒன்றுக் கொன்று கலவாது. 65அவர்கள், இந்த மேய்ப்பர்கள் அனைவரும், மேய்ப்பன் இல்லாமல் ஆடு ஒன்றையும் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் மேய்ப்பர்கள், எனவே ஆடு வழி நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இன்றைக்கு அவர்கள் ஆடுகளுக்கு அசுத்தமான உணவை போஷிக்க முயல்வது எவ்வளவு பரிதாபமான செயல் ஆனால் ஆடு அதை தின்னாது. இல்லை, ஐயா பாருங்கள், முன் காலத்திலும் கூட அவர்கள் ஆடுகளுக்கு அசுத்தமான உணவை போஷிக்க முயன்றனர். வார்த்தை வரும் போது, ஸ்தாபனத்திலுள்ளவர் அசுத்தமான உணவைத்தின்று பழக்கப்பட்டதனால், அவர்களால் வார்த்தையை அறிந்து கொள்ள முடியவில்லை. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. தேவன் ஒன்றை செய்வாரென்று நிரூபிக்கப்பட்டு உறுதிப்பட்ட போதிலும், அவர்கள் அசுத்த உணவைத்தின்று பழக்கப்பட்டதால் அவர்களிடம் பேசிப் பயனில்லை. அவர்கள் அதற்கு செவி கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு தான். நாய்.... ''நாய் தான் கக்கினதைத் தின்னவும் கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது'' என்று வேதம் கூறுவது போல, அவர்கள் செய்கின்றனர். வார்த்தையை கேட்டு விட்டு நேராக அதே சேற்றில் மறுபடியும் புரளச் செல்லுதல், ''ஆம், அது மூட பக்தி வைராக்கியம். அதைப் போன்ற காரியங்களை விசுவாசிக்க வேண்டாம்'' என்று கூறுவார்கள். 66தேவன்... ஆடுகள் இன்றைக்கும் அதையே செய்ய வேண்டும், அவர்கள் வார்த்தை ஆகாரத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். உண்மையான ஆடுகளுக்கு நீங்கள் மத சம்பந்தமான ஆகாரத்தைக் கொடுக்க முடியாது. முடியாது! முடியாது! நீங்கள் அவர்களிடம் சென்று, ''பாருங்கள், நாம் எல்லோரும் ஒன்றாகிவிடுவோம். நாம் எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டும், என்று இயேசு ஜெபம் செய்தார்'' என்று சொல்லிப் பாருங்கள். அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, அதை நீங்கள் டூசானில் கேட்டீர்கள், ஆனால் அது பொய் இயேசு அப்படி ஜெபம் செய்யவில்லை. அவர் எப்படி... உலகம் எப்படி தன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக்கொள்ள நீங்கள் செய்ய முடியும்? அது தனக்கே எதிரான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டால், தேவன் மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவார். இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?'' என்று இயேசு கூறினார். நீங்கள் எப்படி மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ் பிடேரியன்கள், கத்தோலிக்கர் இவர்களை எடுத்து ஒன்றாக இணைக்க முடியும்? நீங்கள் ஒருக்கால் ஒரு மனிதனின் தலைமையின் கீழ் இருக்கலாம். ஆனால் இயேசு, ''நானும் நீரும் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி'' என்று ஜெபம் பண்ணினார். நாமெல்லாரும் வார்த்தையாகிய அவரில் ஒன்றாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்! ஆமென்! அதோ அது, ''பிதாவுடன் ஒன்றாயிருக்கிறது போல, ''பிதாவும் குமாரனும் ஒருவரே. அது அதே வார்த்தை, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை, நீங்கள் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதற்காக மற்றநாளில் அது செய்தது போல் இந்த நாளிலும் அது தன்னை வெளிப்படுத்துகிறது. 67கவனியுங்கள், அவர், ''பிதா என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். அவரை அனுப்பின பிதா அவருக்குள் சென்று வார்த்தையை உறுதிப்படுத்தினார். அதே இயேசு தமது ஜனங்களை அனுப்பும் போது, அவர் அனுப்பும் ஜனங்களுக்குள் சென்று, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்கிறார். நிச்சயமாக, நாம் ஒன்றாயிருக்க வேண்டுமென்று அவர் ஜெபித்தார் - அவருடன் ஒன்றாயிருக்க வேண்டுமென்று, ஸ்தாபனத்துடன் ஒன்றாயிருக்க வேண்டும் என்றல்ல. முறைமையோடு ஒன்றாயிருக்க வேண்டும் என்றல்ல, தேவனுடன் ஒன்றாயிருக்க வேண்டுமென்று. ஏனெனில் தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்று, இயேசுவும் தேவனும் ஒன்று, நீங்களும் நானும் தேவனும் ஒன்றாயிருக்க வேண்டும். அது உண்மை. நாம் வார்த்தையுடன் இணக்கமாக இருக்க வேண்டும் - வேறுயாரோ கூறினதன் பேரில் அல்ல, அது சுயமாக வியாக்கியானம் செய்யப்படக் கூடாது. வார்த்தை கூறுவதை அப்படியே எடுத்துக் கொண்டு அதை விசுவாசியுங்கள். அப்பொழுது தேவன் அதை உறுதிப்படுத்தி அது உண்மையென்று நிரூபிப்பார். அது சீஷர்களுக்கு மாத்திரம் என்று நினைக்கிறீர்களா? அவருடைய வார்த்தை கூறுவதை அப்படியே எடுத்துக் கொண்டு, ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். அவர் வாக்களித்துள்ள படியே அது உங்களுக்கு கிரியை செய்யும் என்பதைக் கண்டு கொள்வீர்கள். ஆம், ஐயா! அவர்கள் அசுத்தமான உணவை உண்பதில்லை, அவர்களுக்கு ஆட்டின் ஆகாரம் தேவை. ''என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது'' என்று பரி. யோவான்:10 உரைக்கிறது. அவர் வார்த்தையாயிருந்தால், எப்படிப்பட்ட சத்தத்தைக் கொண்டவராயிருக்கிறார்? ''என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது, அவைகள் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை. பாருங்கள்? ''அந்நியனின் சத்தத்துக்கு அவைகள் பின் செல்வதில்லை'' என்று இயேசு கூறினார். எனவே அவருடைய ஆடுகள் அந்நியனின் சத்தத்துக்குப் பின் செல்வதில்லை. அவைகள் அவர்களுக்குப் பின் செல்வதில்லை. தீர்க்கதரிசிகள், மேய்ப்பர்கள், ஆடுகள் யாவருமே அவருடைய வருகையை அறிவிக்கின்றனர். 68என்றென்றும் மாறாத தேவனை தமது வார்த்தையின் மாறாத திட்டங்களில் இந்த நாளில் காணுங்கள். மாறாத வார்த்தையைக் குறித்து சில நிமிடங்களில் சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள்! மோசே நோவாவின் செய்தியைக் கொண்டவனாய் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. யோவான் ஸ்நானன் மோசேயின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. இயேசு மோசேயின் செய்தி அல்லது நோவாவின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. வெஸ்லி லூத்தரின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. பெந்தெகொஸ்தேகாரர் வெஸ்லியின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. அதைக் குறித்து கூறப்பட்ட சாட்சியை இப்பொழுது கேட்டோம். தேவன் நகர்ந்து கொண்டே செல்கிறார். வார்த்தையைக் கவனியுங்கள், அப்பொழுது எங்கே இருக்கிறீர்கள் என்பதை காண்பீர்கள். 69அப்படியென்றால் ஏன் இந்த மேய்ப்பர்களின் முதல் அறிக்கை. இந்த தீர்க்கதரிசிகள், இந்த பெரிய மனிதர் அனைவருமே மேய்ப்பர்களாயிருக்கும் போது, மாறாத தேவன் தம்முடைய முறையை மாற்றி அதை வேதசாஸ்திரிகளிடம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? அது மறுபடியும் மேய்ப்பர்கள். பாவ நிவாரண பலியாக ஒப்புக் கொடுக்கப்பட வேண்டிய பழுதற்ற ஆட்டுக்குட்டியின் வருகையைக் குறித்த அறிக்கை மேய்ப்பர்களிடமே வர வேண்டும். மேய்ப்பன் மற்றவர் எவரைக் காட்டிலும் தன் ஆடுகளை நன்றாக அறிந்திருக்கிறான். மேய்ப்பனைப் போல் ஆடுகளை அறிந்திருக்கிறவன் வேறு எவரும் இல்லை. அதற்கென அவன் பயிற்சி பெற்றிருக்கிறான். அவை எந்தவிதமான தீனி உண்ணும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். அவை... ஆடுகள் என்ன உண்ணும் என்று அவனுக்குத் தெரியும், அவை உண்ணும் தீனியிலிருந்து அவன் ஆடுகளை அவன் அறிந்திருக்கிறான்... ஆடு பன்றியின் பட்டிக்குச் சென்று, அழுக்கான உணவை உண்ணத் தொடங்குவதைக் கண்டால் நீங்கள், “அந்த தொட்டியை அகற்றுங்கள்'' என்பீர்கள். பாருங்கள்? எனவே அவைகளை எங்கு அனுப்புவதென்று தேவனுக்குத் தெரியும். 70இப்பொழுது யேகோவாவின் மகத்தான மேய்ப்பர் - தீர்க்கதரிசிகளில் ஒருவனை அழைத்து, ஆட்டுத்தோலை உடுத்தியிருந்த இந்த தீர்க்கதரிசிகளில் தேவன் இருந்தார் என்பதை உறுதி படுத்துவோம். இப்பொழுது கவனியுங்கள். முதலில் நாம் மோசேயை அழைப்போம். அவனை பார்ப்போம். அவனுடைய ஊழியம், யோகோவா அவருடைய மேய்ப்பன் - தீர்க்கதரிசியில் இருந்ததை நமக்குக் காண்பிக்கும். நமக்கு நேரமிருந்தால், அடுத்து பத்து நிமிடங்களுக்கு இந்த ஒன்றைப் பார்ப்போம். நாம் இரண்டு பேர்களை எடுத்துக் கொண்டு பார்ப்போம். ஒருக்கால் இது ஒன்றே போதுமானதாயிருக்கும். மோசே; யோகோவா, இந்த மேய்ப்பன்- தீர்க்கதரிசியில் தம்மை வெளிப்படுத்தினார். அவனுடைய ஊழியத்தையும் அழைப்பையும் இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களிடத்திலும், பார்வோனிடத்திலும் உறுதிப்படுத்துவதற்கு அவனுக்கு மூன்று வரங்கள் அளிக்கப்பட்டன. தேவன் அவர்களுக்குள் வாசம் செய்கிறார் என்பதை உறுதிப்படுத்த தேவன் எப்பொழுதுமே தமது தீர்க்கதரிசிகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தை அளிக்கிறார். தேவனுடைய சமுகம் இருக்குமானால், இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்கள் நிகழாமல் இருக்க முடியாது. இயற்கைக்கு மேம்பட்டவை தொடராமல் யோகோவா பிரத்தியட்சமானதேயில்லை. அது நிகழ வேண்டும். எனவே தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தவை வார்த்தையின்படி அமைந்திருந்தால், அவைகளை தேவன் உறுதிப்படுத்தி, அவர் இந்த தீர்க்கதரிசிகளுடன் கூட இருந்ததை எப்பொழுதும் நிரூபித்து வந்தார். 71இப்பொழுது முதலாம் - அவர் இந்த தீர்க்கதரிசி - மேய்ப்பனுக்கு அளித்த முதலாம் அடையாளம் (பாருங்கள்), அவனுடைய கோலை சர்ப்பமாக மாற்றினார். இரண்டாவதாக, அவனுடைய கைகுஷ்டரோகக் கையாக மாறினது. மூன்றாவதாக, எகிப்திலுள்ள நீல நதியின் தண்ணீரை எடுத்து அதை இரத்தமாக மாற்றுதல். அவன் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாயிருந்தான் என்பதை எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் உறுதிப்படுத்த, அவர் அவனுக்கு மூன்று அடையாளங்களைக் கொடுத்தார். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், மோசே சிருஷ்டிக்க அழைக்கப்பட்டான். அது உண்மை. அவன் தரையிலிருந்த புழுதியை எடுத்து ஆகாயத்தில் எரிந்து, “பேன்கள் வரக்கடவது'' என்றான், அப்பொழுது பேன்கள் வந்தன. அவன், ”வண்டுகள் வரக்கடவது'' என்றான். அப்பொழுது வண்டுகள் வந்தன. ''தவளைகள் வரக்கடவது,'' தவளைகள் வந்தன. இவைகளை அவன் சிருஷ்டித்தான். மனிதனால் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் அது முதலாவதாக மனிதனே கிடையாது. அது அவருடைய தீர்க்கதரிசி - மேய்ப்பனுக்குள் இருந்த யேகோவா. 72கவனியுங்கள். அவர் அவனுக்கு அளித்த மூன்றாம் அடையாளம், அவனுடைய தொழிலுடனோ அல்லது அவனுடனோ சம்பந்தப்பட்டதல்ல - அவனுடைய மூன்றாம் அடையாளம். கவனியுங்கள், முதல் இரண்டு அடையாளங்கள் அவனுடனும் அவனுடைய தொழிலுடனும் சம்பந்தப்பட்டவை. அந்த இரண்டு அடையாளங்களுக்கு மாத்திரமே சத்தம் இருந்ததாக வேதம் உரைக்கிறது. மற்ற அடையாளத்துக்கு சத்தம் இல்லை. ஆனால் அவனுடைய சொந்த சரீரத்திலிருந்து ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த இரண்டு அடையாளங்களுக்கு சத்தம் இருந்தது. ஆனால் இப்பொழுது கவனியுங்கள், கொடுக்கப்பட்ட மூன்றாம் அடையாளம்... அடையாளம், மூன்றாம் அடையாளம் மரணத்தின் அடையாளம்: அதாவது தண்ணீர் இரத்தமாக மாறுதல். உங்கள் - உங்கள் - உங்கள் இரத்தம் தண்ணீராக மாறினால், நீங்கள் இறந்து விடுவீர்கள். இரத்தம் எங்கே உள்ளதோ - சிந்தப்பட்ட இரத்தம் - அது மரணத்தின் அடையாளம். அது அப்படித்தான் பார்வோனுக்கு இருந்தது. நீல நதியின் தண்ணீரை இரத்தமாக மாற்றும் அடையாளம், நமது தேவன் நீல நதியின் மேல் தேவனாயிருக்கிறார், அவர் நீல நதியின் தேவனுக்கு தேவனாயிருக்கிறார் என்னும் செய்தியை பார்வோனுக்கு காண்பிப்பதாய் அமைந்திருந்தது. அவர் எல்லாவற்றின் மேலும் தேவனாயிருக்கிறார், அவர் அந்த தேசத்துக்கு மரணத்தை கொண்டு வரப்போகிறார். அதை குறிப்பதாகத் தான் இரத்த அடையாளம் அமைந்திருந்தது. ஓ, என்னே! நேரடியான மரணத்தின் அடையாளம்: மரணம். 73மற்ற இரண்டு அடையாளங்களுக்கும் தீர்க்கதரிசன சத்தங்கள் உண்டாயிருந்தன (நீங்கள் - நான் நான் கூறும் மறைபொருளை அறிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்). இஸ்ரவேல் ஜனங்களின் எதிர் காலத்தைக் குறித்ததான இந்த இரண்டு அடையாளங்களுக்கும் தீர்க்கதரிசன சத்தங்கள் உண்டாயிருந்தன (அண்மையில் கற்பாறை வெடித்து மேலே எறியப்பட்ட போது, மலையின் மேல் இருந்த உங்களுக்கு) , பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது, அவர்... அவர்களுக்குதவி செய்ய அவர் இயற்கையை மாற்றப்போகிறார். கோலைக் கவனியுங்கள், சர்ப்பத்தைக் கவனியுங்கள், சிவந்த சமுத்திரத்தைக் கவனியுங்கள், அவர் எதையெல்லாம் செய்தாரோ, அவற்றையெல்லாம். அந்த மேய்ப்பனின் கோல் அவர்கள் செல்வதற்கு வழி உண்டு பண்ணுவதைப் பாருங்கள். மேய்ப்பனின் கையிலிருந்த அந்த கோல் வேதசாஸ்திரம் அனைத்தையும், ஆசாரியர்கள் சொன்ன அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு மனிதனுக்கு கூடாத காரியமாகத் தோன்றின அதன் வழியாக அவர்களை நடத்திச் சென்றது. மலைகளில் எரிமலைகள் வெடித்து அதன் குழம்பு நீர் வீழ்ச்சியுடன் கலந்து, அந்த தண்ணீர் நீலந்தியுடன் கலந்து அதை இரத்தமாக மாற்றினதாக பார்வோன் எண்ணினான். அதன் பின்பு தேவன் வானத்திலிருந்து அக்கினியைப் பொழிந்தார், அவர் வானத்திலிருந்து கல் மழையைப் பொழிந்தார், அவர் பூமியை பேன்களால் நிரப்பினார், இவையனைத்தையும் செய்தார். 74அவர் எதைக் கொண்டு செய்தார்: மேய்ப்பனின் கோலினால் - பாட புத்தகத்தினால் அல்ல. வேதசாஸ்திரியின் கருத்தல்ல, ஆனால் மேய்ப்பனின் கோல் அதற்கு இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் வருவோம் - மேய்ப்பனின் கோலுக்கு. அவர் அதை செய்தார். ஸ்தாபன ஜெபப் புத்தகத்தைக் கொண்டு அல்ல, மேய்ப்பனின் கோலைக் கொண்டு, மேய்ப்பனின் கோல் தன் ஆடுகளை நடத்திச் சென்று, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் போது, வழியை உண்டாக்கிக் கொடுத்தது. இன்று மேய்ப்பனின் கோல், வேதசாஸ்திரம், இவ்வுலகத்தின் காரியங்கள் அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு, அவருடைய ஆடுகளை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு நடத்திச் சென்று கொண்டிருப்பது எவ்வளவு அழகாயுள்ளது! மேய்ப்பனின் கோல் முன் சென்று, வழியைத் திறந்து கொடுத்து, அவருடைய வார்த்தை உண்மையென்று நிரூபிக்கிறது. 75கவனியுங்கள், ஆடுகளை நடத்திச் சென்ற அதே மேய்ப்பனின் கோல்... அதை நீங்கள் நம்புகிறீர்களா? அவன் நிச்சயமாக ஆடுகளை நடத்திச் சென்ற அதே கோலைக் கையில் கொண்டு, இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுவித்தான். அதைக் குறித்து நாம் இன்னும் அதிகம் கூறலாம். ஆனால் முக்கியமானதை வலியுறுத்துகிறேன். அவன் ஆடுகளை நடத்திச் சென்று, அதை புறக்கணித்தவர்கள் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தான். ஒருவருக்கு ஆசீர்வாதமாயிருந்த அதே கோல் மற்றவருக்கு சாபமாக முடிந்தது. நோவா பிரசங்கித்த போது, அவனைக் காப்பாற்றின அதே தண்ணீர் உலகத்தை ஆக்கினைக்குட்படுத்தினது. இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு வழி நடத்தின அதே கோல், தீர்க்கதரிசி - மேய்ப்பனைப் பின்பற்ற மறுத்தவர்களை ஆக்கினைக்குட்படுத்தினது. அது உண்மை, அது நியாயத்தீர்ப்பின் கோலாக மாறினது. இயற்கை: தேவன் எவ்வாறு இயற்கையின் வாயிலாக பேசுகிறார் என்பதைக் கவனியுங்கள். நமக்கு நேரமிருந்தால், இங்கு நான் எழுதி வைத்துள்ள, ''தேவன் தமது இயற்கையின் வாயிலாக பேசுகிறார்'' என்னும் குறிப்பைப் பார்க்கலாம். ஆனால் அதை நிரூபிக்க இப்பொழுது நமக்கு நேரமில்லை. 76ஆனால் சற்று பின்பு, மேய்ப்பனின் கோலின் மேல் வைக்கப்பட்ட வெண்கல சர்ப்பம் (வனாந்தரத்தில் அவன் இந்த சர்ப்பத்தை அந்தக் கோலின் மேல் சுற்றினான்) அதை நிரூபித்தது. அது வியாதிக்கும் பாவத்துக்கும் வரவிருந்த உண்மையான பாவ நிவாரணத்தை எடுத்துரைத்தது. பார்வோனுக்கு முன்னால் அந்தக் கோலே சர்ப்பமாக மாறினது. அதே பார்வோன் மந்திரவாதிகளைக் கொண்டு அதை பாவனை செய்து காண்பித்தான். இன்றைய நவீன பார்வோனும், பாவனை விசுவாசிகளும், செய்தியின் மாம்சப்பிரகாரமான போலியாட்களும், அது எங்கிருந்து வருகிறதென்பதை அறியாமல் அதை பாவனை செய்யமுயன்று, அடைக்கப்படாத காற்று எவ்வளவு சுத்தமாயுள்ளதோ, அவ்வளவு சுத்தமான ஒன்றை ஸ்தாபனப் பிரகாரமாக செய்து விடுகின்றனர். நிச்சயமாக! பாவனை செய்ய முயல்கின்றனர், பாவனை செய்து காட்டுகின்றனர். ஆனால் கவனியுங்கள், மேய்ப்பனின் இந்தக் கோல் மற்ற சர்ப்பங்களை விழுங்கினது. அந்த சர்ப்பங்கள் எல்லாம் எங்கே போயின? அவை தரையில் கோல்களாக போடப்பட்டன, ஆனால் ஒரே ஒரு கோல் மாத்திரம் தரையிலிருந்து எடுக்கப்பட்டது. ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்றார் இயேசு. பாவத்துக்கு வரவிருந்த உண்மையான பாவ நிவாரணத்தை அது எடுத்துக் காண்பித்தது. 77மேலும், இஸ்ரவேல் ஜனங்களின் வருங்காலத்தில்.... அவர்கள் தீர்க்கதரிசி - மேய்ப்பன் ஒருவனால் மரணக்கட்டுகளில்லிருந்து விடுதலையானார்கள். அவர்கள் தீர்க்கதரிசி - மேய்ப்பனால் ஒரு கோலைக் கொண்டு அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்கள். பாருங்கள்? மரணத்திலிருந்தும் பாதாளத்திலிருந்தும் இஸ்ரவேலரை விடுவிக்க வருங்காலத்தில் வரப்போகும் மேய்ப்பர் - தீர்க்கதரிசிக்கு அது முன்னடையாளமாயிருந்தது. அதைக் குறித்து இப்பொழுது நாம் பேசுவோம். இப்பொழுது, எல்லோருக்கும்... தீர்க்கதரிசி - மேய்ப்பரின் வார்த்தையை இஸ்ரவேலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நம்மெல்லாருக்கும் தெரியும். எல்லா இஸ்ரவேலரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் குறை கூறினர். அவர் அற்புதங்களைக் செய்து கொண்டிருந்த போது, ''ஓ, அவர் பெரியவர் என்றனர். ஆனால் அவருடைய செய்தியை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், அது வித்தியாசமாயிருந்தது. எல்லா பெரிய அடையாளங்களையும் தொடர்ந்து ஒரு புது செய்தி வருகிறது. அது நமக்குத் தெரியும். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் முறுமுறுத்து, ஆயிரக்கணக்கானோர் மரித்தனர். வெளிப்படையாகக் கூறினால், அந்த இருபத்தைந்து லட்சம் பேர்களில் இரண்டு பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டு உள்ளே சென்றனர் - இருபத்தைந்து லட்சம் பேர்களில் இரண்டே பேர். நீங்கள், ''அது.... அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்கலாம். அவர்கள் நித்தியமாக அழிந்து போயினர். “சகோ. பிரன்ஹாமே, அவர்கள் எல்லோருமா? அப்படித் தான் இயேசு கூறினார். அவர்கள், “எங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்தார்கள், கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்'' என்றனர். அவர்... இயேசு, ''அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்றார். நித்தியமாக பிரிக்கப்பட்டனர், பாருங்கள், அவர்கள் ஒவ்வொருவரும். 78கவனியுங்கள், தேவன் அளித்திருந்த வழியைக் குறித்து அவர்கள் முறுமுறுத்த காரணத்தால் மாண்டு போயினர் (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நான் குறிப்பிட்ட இந்த கடைசி சில சொற்களை காணத்தவறாதீர்கள். அவர்கள் முறுமுறுத்தனர்! அவர்கள் வனாந்தரத்தில் மாண்ட காரணம், தேவன் அளித்த வழியைக் குறித்து முறுமுறுத்ததனால்: அதாவது ஒரு மனிதனின் செய்தி, ஒரு தீர்க்கதரிசி, ஒரு மனிதனின் வழி நடத்துதல் ஆகிய தேவன் அளித்த வழி. தேவன் எப்பொழுதாவது ஒரு கூட்டம் ஜனங்களின் மூலம் வழி நடத்தினதை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் வேதத்தில் காண முடியாது. ஒரு மனிதன், அவர்கள்... வார்த்தை மோசேக்கு உண்டானது. கோரா; அவன் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு ஒரு மனிதனுக்கு செய்தியை அளிப்பதனால் தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று முறுமுறுத்தான். அவன், ''நாங்கள் அனைவருமே பரிசுத்தர். நான் ஏன் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளக் கூடாது? நாம் ஏன், இதை, இதை, அதை உண்டாக்கிக்கொள்ளக் கூடாது?'' என்றான். தேவன் மோசேயிடம், ''அவனை விட்டுப் பிரிந்து வா. எனக்குப் போதுமென்றாகி விட்டது'' என்றார். ஞாபகம் கொள்ளுங்கள், கடைசி நாட்களில் அதுவே சம்பவிக்கும் என்று யூதா கூறுகிறான். அது உண்மை. ''அவர்கள் கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி அழிந்து போனார்கள்.'' தேவனுடைய வார்த்தைக்கும், அவருடைய ஞானத்துக்கும், ஒரு மனிதன் தலைமைக்கும் விரோதமாய் பேசின கோராவுக்கும் மற்றவர்களுக்கும் என்ன நடந்ததென்று நாமறிவோம். அவர்கள் ஒவ்வொருவரும் அழிந்து போனார்கள். 79இப்பொழுது, தேவன் மேய்ப்பன் - தீர்க்கதரிசியில் இருந்து கொண்டு, அடுத்த அடையாள சத்தத்தில் தமது எதிர்கால திட்டங்களைக் காண்பிப்பதை நாம் கவனிப்போம். இப்பொழுது கவனியுங்கள். அதை அங்கு காண்கிறோம். அதை அடுத்த அடையாளத்தில் கவனிப்போம். இப்பொழுது, கவனியுங்கள், மோசே தன் சகோதரர் அடிமைத்தனத்திலிருந்த போது, ஒரு மீட்பின் செய்தியுடன், தான் உரிமை கோருவதை நிரூபிப்பதற்கென தேவனால் அளிக்கப்பட்ட ஒரு அடையாளத்துடன் அவர்களிடம் அனுப்பப்பட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அவனுடைய செய்தியை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசித்தனர் - அவர்கள் ஒவ்வொருவரும். ஆனால் சாயங்கால நேரத்தில்.... அவன் செய்த அற்புதங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் சாயங்கால நேரத்தில் அவர்கள்.... அவன் செய்தியை அளித்த போது அது வித்தியாசமான ஒன்றாய் இருந்தது. அதை விசுவாசிக்காத அனைவரும் மரித்தனர். அது உண்மை . அந்த செய்தி என்ன? அது வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்த செய்தி. சாயங்கால - சாயங்கால நேரத்தில், ஜனங்கள் அவருடைய மேய்ப்பன் - தீர்க்கதரிசி செய்தியை விசுவாசித்தனரா என்று அறிய, அவர் இஸ்ரவேல் ஜனங்களின் பாளயத்தின் வழியாக கடந்து சென்றார். அதை விசுவாசிக்காத அனைவரும் அழிந்து போயினர். 80இப்பொழுது, கவனியுங்கள், இன்னும் சில நிமிடங்களில் நாம் மகத்தான மேய்ப்பருக்கு வரப்போகிறோம். பாருங்கள்? இந்த மகத்தான மேய்ப்பரின் ஊழியத்தை கவனியுங்கள். அவர் அற்புதங்களைச் செய்த போது, ஒவ்வொரு சபையும் வாசலைத் திறந்து அவரை ஏற்றுக் கொண்டது. அவர்களுடைய வியாதியஸ்தர் குணமடைய வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். அவர்கள் மகத்தான கிரியைகள் செய்யப்பட வேண்டுமென்று விரும்பினர். அவருடைய புகழ் மிகவும் அதிகமாயிருந்தது. ஆனால் சாயங்கால நேரம் வந்த போது, அவர் தண்ணீரை திராட்சரசமாக்கி, ஆயிரக் கணக்கானவர்களை அப்பத்தினால் போஷித்து, அற்புதங்களைச் செய்த பிறகு, அவர் உட்கார்ந்து கொண்டு அவர்களிடம் பேசினார். அவர், ''நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று எப்படி சொல்லுகிறாய்?'' என்றார். ''ஓ, சகோதரனே! இவன் தேவனுக்கு தன்னை சமமாக்கிக் கொள்கிறான். அது அவர்களுடைய மத சம்பந்தமான கருத்துக்களுக்கு மிகவும் அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் அது உண்மை! அவர் அப்படித்தான் இருந்தார். ஆனால் அவர் அப்படி சொன்ன போது, அநேகர் அவரைப்பின் பற்றவில்லை. அதன் பிறகு அவர், ''நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால், உங்களுக்குள்ளே ஜீவனில்லை“ என்றார். நுண்ணறிவு படைத்த அறிவாளி ஒருவன் அதைக் குறித்து என்ன நினைத்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்? அவரை தேவாலயத்தில் அனுமதித்த ஆசாரியர்கள், அவரை அங்கு அனுமதித்ததைக் குறித்து மிகவும் வெட்கப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ''அந்த மனிதன் அங்கு எழுந்து நின்று, என் மாம்சத்தைப் புசியாமலும் என் இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் என்று சொன்னான்'' என்பதை நினைத்துப் பார்க்கும் போது, இவன் மனித இரத்தம் குடிக்கும் பூதம், பாருங்கள். ''என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம்... அவன் நர மாமிசம் தின்பவன். நல்ல சிந்தையுடைய நீங்கள்... அப்படிப்பட்ட பைத்தியக்காரனை விட்டு விலகுங்கள்“ என்று சொல்லியிருப்பார்கள். அவர் அதை விளக்கவேயில்லை, அவர் அதை சொன்னார் அவர்களை இடறப்பண்ணி, அவருடைய செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிக்க அவர் அப்படி செய்தார். அவர்களை வெளியே தள்ள அவர் அப்படி செய்தார். யாருமே அவருடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. அன்று முதல் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. பாருங்கள்? 81கவனியுங்கள், சாயங்கால நேரத்தில், தேவன் பாளையத்தின் வழியாக சென்று, யார் விசுவாசித்தார்கள் என்பதைக் கண்டார். மகத்தான மேய்ப்பனின் நாட்களிலும் அவர் அதையே செய்தார். அந்த மகத்தான மேய்ப்பர்- தீர்க்கதரிசியின் ஊழியத்தை கவனியுங்கள். இதை கவனியுங்கள், அவருடைய செய்தியை விசுவாசித்தவர்களுக்கு, ஆனால்... இந்த சாயங்கால செய்தியை அவர்கள் விசுவாசிக்க மறுத்தனர். அவரை ஒரு நல்ல மனிதனாக பாவிக்க விரும்பினர். அவரை ஒரு தீர்க்கதரிசியாக்க அவர்கள் விரும்பினர். அவர் நல்லவர், அவர் தீர்க்கதரிசி, ஆனால் அவர் அதைக் காட்டிலும் மேலானவர். அவர் நல்ல மனிதன், அவர் ஒரு தீர்க்கதரிசி: என்னும் போதகம் இன்று பொதுவாக நிலவி வருகிறது. அவர் இம்மானுவேல் அன்றி வேறு யாரும் அல்ல. அவர் தேவன் வெளிப்பட்ட அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து. அது அவரையும் பிதாவையும் ஒன்றாக ஆக்கினது. அப்படித்தான் அவர் இருக்க முடியும். 82இதை நான் கூற விரும்புகிறேன். சகரியா 14:7, முடிவு காலத்தில் மறுபடியும் சாயங்கால வெளிச்சமும் செய்தியும் உண்டாகுமென்று உரைக்கிறது. அதை கவனித்தீர்களா? மோசேயை பின்பற்றினவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேரும் அக்கினி ஸ்தம்பம் சீனாய் மலையில் அவனை அடையாளம் காண்பித்ததைக் கண்டதாகவும், அது அவனுக்கு இந்த செய்தியை அறிவித்தது என்றும் சாட்சி பகர்ந்த போது, அநேகர் அதை விசுவாசிக்கவில்லை. ஆனால் அவனைப் பின்பற்றி எகிப்தை விட்டு வெளியே வந்தவர்கள் (உலகத்தை விட்டு வெளி வந்து, பிரிக்கும் சமுத்திரத்தைக் கடந்து, வனாந்தரத்துக்குள் பிரவேசித்தவர்கள்), அவன் குறிப்பிட்ட அதே அக்கினி ஸ்தம்பம் அந்த மேய்ப்பன் - தீர்க்கதரிசியை ஆடுகளின் மேய்ப்பனாக உறுதிப்படுத்துவதைக் கண்டனர். அவர்கள் அதைக் கண்டனர். அவர்கள் அதைக் கண்ட பிறகும், அவர்களில் அநேகர் அதை விசுவாசிக்கவில்லை. 83எப்படி என்றென்றும் மாறாத தேவன், மகத்தான மேய்ப்பர் - தீர்க்கதரிசி, தம்முடனும் தம்முடைய ஊழியத்திலும் நிலைத்திருந்தவர்களை ஒலிவ மலையின் மேல் கொண்டு சென்றார் என்பதைக் கவனியுங்கள்-நாம் பேசிக் கொண்டிருக்கும் அந்த மகத்தான மேய்ப்பர் - தீர்க்கதரிசியாகிய இயேசு. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) மோசேயை உறுதிப்படுத்தின பிதா (அதே அக்கினி ஸ்தம்பம்) அவரை உறதிப்படுத்துவதைக் கண்டார், கேட்டார். மோசே குறிப்பிட்ட அதே தேவன் மோசேயின் மேல் அக்கினி ஸ்தம்பமாக தோன்றி, அவர் அவனை வழி நடத்தும் யேகோவா என்பதை நிரூபித்தார். தேவன் தமது மேய்ப்பன் - தீர்க்கதரிசிக்குள் இருந்தார். இங்கு அவர் மற்ற மேய்ப்பர் - தீர்க்கதரிசியை, அந்த மகத்தான தீர்க்கதரிசியை; உண்மையான ஆடாகிய இயேசுவையும், அவருடன் மூன்று பேரையும் தெரிந்து கொண்டு, ஒலிவ மலையின் மேல் கொண்டு சென்று, அங்கே இயேசுவை உறுதிப்படுத்தினார். எல்லா மனிதர்களிடமிருந்தும் அவரைத் தனியே ஒதுக்கி, “இவர் என்னுடைய நேசக்குமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்'' என்றார். அவர்கள் ஏறெடுத்துப் பார்த்த போது, இயேசுவைத் தவிர வேறொருவரையும் காணவில்லை. அது உண்மை. அவர் ஒருவரே. என்னைப் பொறுத்தவரையில், அது அதை முடிவுபடுத்துகிறது. பாருங்கள்? 84(ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி )... ஷெகினா (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) முகம். சீனாய் மலையின் மேல் மோசே ஷெகினாவின் சமுகத்தில் இருந்தான். அது அவன் முகத்தை மாற்றினது. அவன் கீழே இறங்கி வந்த போது, அவனுடைய முகத்தின் மேல் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதாயிருந்தது - அந்த மேய்ப்பன் - தீர்க்கதரிசியாகிய மோசே. அவனுக்குள் யேகோவா ஒரு பாகமாக - ஒரு பாகம் மாத்திரமாக - இருந்தார், அவனுடைய முகம். அவனுடைய வாயில் தேவனுடைய வார்த்தை இருந்தது. ஆனால் கவனியுங்கள், இந்த மகத்தான மேய்ப்பர் ஷெகினாவின் சமுகத்தில் இருந்த போது, அது என்ன செய்தது? அவருடைய முழுரூபமே மாறினது. அவர் தேவனுடைய ஒரு பாகமாயிருக்கவில்லை, அவர் தேவனின் பரிபூரணமாக இருந்தார். இவர் இம்மானுவேலாக இருந்தார். அது ஏன் மேய்ப்பர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது? 85பாருங்கள் இப்பொழுது பாருங்கள், சர்வவல்லமையுள்ள தேவன்.... மேய்ப்பன் - தீர்க்கதரிசியாகிய மோசேயில் தம்மை சித்தரிக்கிறார். தேவன் தம்மை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள் (இது நான் கடைசியாக கூறும் குறிப்பு). அக்கினி ஸ்தம்பத்தின் பிரசன்னத்தில் அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாக நிற்பதை கவனியுங்கள். மோசேயையும் யேகோவாவையும் தவிர மலையின் மேல் வேறுயாருமே இல்லை. ஆமென்! ஆமென் என்றால், ''அப்படியே ஆகக்கடவது.'' கவனியுங்கள்! ''உன் கையை உன்மடியிலே போடு.'' (ஆங்கிலத்தில் (Bosom) - அதாவது, ''உன் கையை உன் மார்பிலே போடு“ - தமிழாக்கியோன்). சத்தத்துடன் கூடிய இந்த இரண்டாம் அடையாளத்தைக் கவனியுங்கள். ''உன் கையை உன் மார்பிலே போடு. ''மோசே இடது கை பழக்கமுள்ளவன் என்று நம்புவதற்கு நமக்கு எந்த காரணமும் இல்லை. எனவே அவன் தன் வலது கையை தான் மார்பிலே போட்டிருக்க வேண்டும். மனிதரில் பெரும்பாலோர் வலது கை பழக்கமுள்ளவர்களே. அவன் வலது கையை போட்டான். இப்பொழுது கவனியுங்கள்! யேகோவா மேய்ப்பன் - தீர்க்கதரிசியாகிய மோசேக்குள் இருக்கும் எவ்வளவு அழகான காட்சியை நாம் காண்கிறோம்! மோசே தேவனின் பிரதிநிதியாக இருந்தான். ஏனெனில் தேவன் மோசேக்குள் இருந்தார். 86கவனியுங்கள், அவன் தன்... ''கையை உன் மார்பிலே போடு'' என்ன ஒரு அடையாளம்! இப்பொழுது, அதோ அவன் தன் வலது கையை தன் இருதயத்தின் மேல் வைத்தவனாய் அங்கு நின்று கொண்டிருக்கிறான் (இப்படி நின்று கொண்டிருக்கிறான்). அங்கு தான் மீட்பின் இரகசியங்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பிருந்தே மறைக்கப்பட்டுள்ளன. ஏன் மேய்ப்பர்கள் என்பதற்கு இதோ இயேசு தேவனின் வலது கரம், நம் மெல்லோருக்கும் தெரியும். மோசே அவரை அப்படியே சித்தரிக்கிறான். அவர் பிதாவின் இரகசியங்களைக் கொண்டவராயிருந்து அவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். கவனியுங்கள், அவன் தன் வலது கையை மார்பிலிருந்து எடுத்த போது அது பயங்கரமான குஷ்டத்தால் பீடிக்கப்பட்டிருந்ததை கவனியுங்கள். தேவன் அவருடைய வலது கரமாகிய இயேசுவுக்கு என்ன செய்யப்போகிறார் என்பதை அது காண்பித்தது. கவனியுங்கள், குஷ்டம் குணமாக முடியாது. மறுபடியும் கவனியுங்கள், அது சாதாரண குஷ்டம் அல்ல, அது கடைசி கட்டத்தை அடைந்த உறைந்த மழையைப் போன்ற வெண்குஷ்டம். அவனுடைய கை பயங்கரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தது. மோசே தன் வலது கையை தன் இருதயத்திலிருந்து, தன் மார்பிலிருந்து எடுத்த போது, அது குஷ்டத்தினால் பீடிக்கப்பட்டதை காண அவனுக்கு எப்படி இருந்திருக்கும்! குஷ்டம் பாவத்துக்கு அடையாளமாயுள்ளது. முக்கியமாக அது கடைசி கட்டத்தை அடைந்து விட்டபிறகு, அதை குணப்படுத்தவே முடியாது. 87சகோதரரே, தேவன் தமது வலதுகரத்தை தமது மார்பிலிருந்து எடுத்த போது உலகம் அந்நிலையில் தான் இருந்தது. உலகம் பயங்கரமான குஷ்டத்தால் பீடிக்கப்பட்டிருந்தது, அதற்கு பரிகாரம் எதுவுமே இருக்கவில்லை. இன்றிரவும் அவ்வாறேயுள்ளது. ஏனெனில் அவர்கள் பரிகாரத்தை ஏற்க மறுக்கின்றனர். கல்வாரியில் பரிகாரம் அளிக்கப்பட்டது, ஆனால் ஜனங்களோ பாவத்துக்கு தேவனுடைய மருந்து சீட்டை பெறுவதற்கு பதிலாக, மனிதனால் அளிக்கப்படும் மருந்து சீட்டிலுள்ள மருந்தை உட்கொள்ள விரும்புகின்றனர். கவனியுங்கள், குஷ்டம் வழக்கமாக படிப்படியாக அதிகரிப்பது போல் அது இல்லாமல், ஒரேயடியாக அதிகமாக தோன்றிவிட்டது. மோசே தன் கையை எடுத்த போது, அது முழுவதும் குஷ்டம் பிடித்ததாக இருந்தது. தேவன் ஆதாமுக்கு என்ன கூறினார் என்பதை கவனியுங்கள்: ''நீ படிப்படியாக பாவத்தில் விழமாட்டாய். நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' அது உண்மை . ''நீ புசிக்கும் நாளில்.'' 88கவனியுங்கள், தீர்க்கதரிசி - மேய்ப்பன் தானே தன்னை அடித்துக் கொண்டான். அவன் தேவனுடைய கட்டளைக்கிணங்கி தன்கையை தன் மார்பின் மேல் போட்டு, குஷ்டம் பிடித்த கையாக அதை எடுத்தான். தீர்க்கதரிசி - மேய்ப்பன் தானாகவே அதை செய்தான். அவ்வாறே அந்த மகத்தான தீர்க்கதரிசி - மேய்ப்பராகிய இயேசு தாமாகவே அதை செய்தார். “நானே என் ஜீவனைக் கொடுக்கிறேன், ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்து கொள்ளமாட்டான். அவர் மகத்தான மேய்ப்பர், மகத்தான தீர்க்கதரிசி - மேய்ப்பர். ''ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளமாட்டான், நானே அதைக் கொடுக்கிறேன்.'' கவனியுங்கள், அது படிப்படியாக வரவில்லை, அது ஒரு நிமிடத்தில் வந்தது. அந்த மகத்தான மேய்ப்பர் தாமாகவே நம்முடைய குற்றங்களை சுமந்து தம்மை அடித்துக் கொண்டார். அவர் நம்முடைய பாவங்களை எடுத்து அவர் மேல் சுமத்திக் கொண்டார். கவிஞன் இவ்வாறு எழுதினதில் வியப்பொன்றுமில்லை: பிளவுண்ட பாறைகள் இருளடைந்த வானத்தின், மத்தியில் என் இரட்சகர் தலை சாய்த்து ஜீவனை விட்டார்: திறக்கப்பட்ட திரை பரலோக சந்தோஷத்துக்கும், முடிவற்ற நாளுக்கும் வழியைக் காண்பித்தது. 89அந்த இரகசியம் தேவனுடைய மார்பில், இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்து, அவருடைய வலது கரமாகிய இயேசுவினால் மூடப்பட்டிருந்தது. அந்த மகத்தான மேய்ப்பர் நம்முடைய குற்றங்களை அவர் மேல் சுமந்து கொண்டார். ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.'' என்று ஏசாயா 53:5 உரைக்கிறது. குணமாகும் இரகசியம் இயேசு கிறிஸ்துவின் - தேவனின் - மார்பில் கிடந்திருந்தது. அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் இருந்தார். அந்த ஒரு ஆடு மாத்திரமே தன் மார்பில் இரகசியத்தைக் கொண்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அதன் முன் நிழல் எப்பொழுதுமே ஒரு ஆடாக இருந்து, கடைசியும் ஆடாக இருந்தது. ஆகையால் தான் அது தன் ஆடுகளைப் பாதுகாக்க அறிந்திருந்த மேய்ப்பனிடம் வரவேண்டியதாயிருந்தது. உங்களுக்குப் புரிகிறதா? கவனியுங்கள், ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர்காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.'' 90கவனியுங்கள், அது வேகமாக வந்தது. வலது கை இரண்டாம் முறை மார்பிலிருந்து எடுக்கப்பட்ட போது, அது வேகமாக மறைந்தது. அந்த மகத்தான மேய்ப்பர், ஆடு - தீர்க்கதரிசி சொன்ன போது... கல்வாரி சிலுவையில், அவர் நம்மெல்லாருக்காகவும் பாவத்துக்கான கிரயத்தை செலுத்தி தீர்த்த பிறகு, ''முடிந்தது என்றார். பாவம் முடிந்து விட்டது, அபராதம் செலுத்தி தீர்ந்துவிட்டது. கடன்கள் செலுத்தப்பட்டுவிட்டது! அதற்கு ஒரு ஆண்டு பிடிக்கவில்லை, அல்லது ஏதோ ஒரு சீர்த்திருத்தக் காரரின் நாட்களில் அது நடக்கவில்லை, அது அப்பொழுதே முடிந்துவிட்டது! 91பாவம், தேவனுடைய பிரமாணத்தை மீறின தன் காரணமாக, ஒரு வார்த்தையை முறித்த தன் காரணமாக, ஒரு நொடியில் தோன்றினது. இன்றிரவு, என் சகோதரரே, உங்கள் ஆத்துமா சங்கிலியால் நரகத்தின் மேல் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அந்த சங்கிலி வேதசாஸ்திர பள்ளியின் போதகமல்ல, அந்தசங்கிலி நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு ஸ்தாபனமோ அல்லது அதன் கோட்பாடோ அல்ல. அந்த சங்கிலி தேவனுடைய வார்த்தை! மனிதகுலம் வாழ்வதற்க்கென்று தேவன் தமது வார்த்தையை அதற்குக்கொடுத்தார். ஏவாள் அதன் ஒரு சிறு இணைப்பை மாத்திரமே முறித்து போட்டாள்.... எந்த ஒரு சங்கிலியும் அதன் மிகவும் பலவீனமான இணைப்பைக் காட்டிலும் பலமுள்ளதல்ல. நீங்கள் அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்து போடும் போது... அது வேதாகமத்தின் முதல் புத்தகம். இயேசு வேதாகமத்தின் நடுவில் வந்து, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திர மல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' என்றார். அது வேதாகமத்தின் நடுபாகம். வேதாகமத்தின் கடைசி புத்தகம், “ஒருவன் இதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால் (ஒரு வார்த்தைக்கு தவறான அர்த்தம் உரைத்தால், அவன் பங்கை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்து போடுவேன்'' என்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தையில் தொங்கிக் கொண்டு நரகத்தைக் கடக்கிறீர்கள். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைத் தவிர வேறுயாரும் வேறொன்றையும் உங்களுக்குள் திணிக்க வேண்டாம். 92ஓ, அப்படியா... அவர்கள், ''நிச்சயமாக, நாங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டோம், நாங்கள் எல்லாவற்றையும் செய்து விட்டோம்'' என்கின்றனர். அப்படித்தான் மகத்தான மேய்ப்பரின் நாட்களில் இருந்த பிரதான ஆசாரியர்களும் மற்றவர்களும் நினைத்திருப்பார்கள். ஏவாளும் அப்படித்தான் நினைத்தாள். சாத்தான் அவளிடம், ''நிச்சயமாக தேவன் அப்படி செய்யமாட்டார்'' என்றான். ஆனால் அவர் செய்தார். ஏனெனில் அவர் அப்படி செய்வாரென்று கூறினார். ஆகையால் தான் அவர் இன்றும் அதை மறுபடியும் செய்வார். “நோவாவின் நாட்களில் நடந்தது போல - அப்பொழுது எட்டு பேர் மாத்திரமே ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள் - மனுஷகுமாரனுடைய வருகையிலும் இருக்கும். பாருங்கள், வெகு சிலரே. ஏனெனில், ”ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர். அது உண்மை. ஆனால் கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதன் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.'' 93அந்த மகத்தான மேய்ப்பர் அடிக்கப்பட்ட போது; அந்த மகத்தான ஆடு - தீர்க்கதரிசி அன்று அடிக்கப்பட்ட போது, அவர், ''முடிந்தது'' என்று சொன்னார். இந்த மேய்ப்பர் அடிக்கப்பட்ட அந்த நிமிடமே, எல்லாம் முடிந்துவிட்டது. பாவம் முடிவடைந்து விட்டது, அதன் பிறகு பாவமில்லை. அவர்கள் சுத்தர்களாயினர், கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது. உலகத் தோற்றத்துக்கு முன்னால் முன்குறிக்கப்பட்டு ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்களுக்கு, இயேசு ''முடிந்தது'' என்று சொன்ன அந்த நிமிடமே அது முடிந்துவிட்டது. அந்த மகத்தான மேய்ப்பர் தன் ஆடுகளுக்காக வந்தார். அது முடிந்துவிட்டது. தேவனுடைய வலதுகரம் அடிக்கப்பட்டதாய் அவருடைய மார்பிலிருந்து எடுக்கப்பட்டு, பிறகு ஈஸ்டர் அன்று அவர் அதை திரும்ப அளித்து (ஆமென், அதை மறுபடியும் தமது மார்புக்கு எழுப்பி, அதை அவருடைய வார்த்தையின் வடிவில் உங்களுக்கும் எனக்கும் அளித்து, பாவம் நம்மை வெளியே துரத்தின அந்த மூலத்தோட்டத்துக்கு நம்மை மீட்டுக் கொண்டு வந்தார். அவருடைய மகத்தான இருதயத்தில் மறைந்திருந்த இரகசியம் தீர்க்கதரிசி - மேய்ப்பரால் வெளிப்படுத்தப்பட்டது. அது மேய்ப்பரால், தீர்க்கதரிசி - மேய்ப்பரால் வெளிப்படுத்தப்பட்டது. 94மலைகள் அன்று துள்ளி ஆர்ப்பரித்ததில் வியப்பொன்றுமில்லை. சூரியன் தன் முகத்தை மறைத்துக் கொண்டு சந்தோஷத்தினால் ஆரவாரம் செய்ததில் வியப்பொன்றுமில்லை. இயற்கை அனைத்துமே அவிழ்த்து விடப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. காற்று மரங்களை அசைத்து அசைத்து, அவைகளிப்பால் துள்ளின. மலையின் மேல் தீர்க்கதரிசி - மேய்ப்பர் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருந்த ஒவ்வொருவரையும் மீட்பதை அவை கண்டன. அவைகளுடைய சொந்த இயற்கையும் மீட்கப்பட்டதை அவை கண்டன. அவை ஆர்ப்பரித்து துள்ளின. உலகம் பூமியதிர்ச்சிக்கு சென்றது. மலைகள் பிளந்தன, பாறைகள் உருண்டு விழுந்தன. சூரியன் அஸ்தமித்தது, எல்லாமே நடைபெற்றது. எந்த கூட்டத்திலும் நடை பெறுவது போல். மேய்ப்பர், ''முடிந்தது'' என்று உங்களுக்கு வெளிப்படுத்தும் போது, அங்கு... 95நான் குதிக்கும் நேரங்களையும், களிப்பான நேரங்களையும் கண்டிருக்கிறேன், ஆனால் யாருக்குமே காயம்பட்டதில்லை. மலைகள் உருண்டு விழுந்தன, அவை... சூரியன் அஸ்தமித்தது, எல்லாமே நடந்தது, ஆனால் யாருமே காயம்படவில்லை. கூட்டங்களில் தேவனுடைய வல்லமை வெளிப்பட்டு, அவர்கள் உலகத்தினின்றும் உலகத்தின் காரியங்களினின்றும் விடுதலையடைந்து, கர்த்தருடைய மகிழ்ச்சி சபையோரை நிறைப்பதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் நின்று, கூச்சலிட்டு, கதறி, தேவனுடைய மகிமைக்கென்று உரக்க சத்தமிடுவதுண்டு. ஆனால் நான் எதையும் ஒழுங்கீனமாகக் கண்டதில்லை, அவையனைத்தும் ஒழுங்காகவே இருந்தன. ஏனெனில் அவர்கள் பெயர் உலகத் தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்ததை அறிந்து கொண்டனர். மகத்தான தீர்க்கதரிசி - மேய்ப்பர் அவர்களுக்கு செய்தியைக் கொண்டு வந்தார். அவர்கள் அந்த தீர்க்கதரிசி - மேய்ப்பரால் விடுவிக்கப்பட்டனர். மற்ற மத சம்பந்தமான ஆதிக்கங்கள் என்ன கூறின போதிலும், என்ன நடந்ததென்று அவர்களுக்குத் தெரியும் - அன்று மேய்ப்பர்கள் என்ன நடந்த தென்று அறிந்து கொண்டது போல இவர்களும் அறிந்து கொண்டனர். 96மோசேயைப் போல் ஒருவன் தேவனை, எந்த வேத சாஸ்திரியும் விளக்க முடியாத அடிப்படையில் சந்தித்தாலொழிய, வார்த்தையைப் பிரசங்கிக்க அந்த புனிதமான பீடத்தில் பிரவேசிக்க எவ்வித உரிமையுமில்லை. மோசே அங்கிருந்தான் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள், ''ஓ, அது அர்த்தமற்றது, அதை கண்டதாக நீ கற்பனை செய்திருப்பாய், அது மூடத்தனம் என்று கூறின போதிலும், அதை அவனிடமிருந்து எடுத்துப்போட முடியவில்லை. அவன் அதை அறிந்திருந்தான். அவன் அங்கிருந்தான் அவனுக்குத்தான் அது சம்பவித்தது. வேதசாஸ்திர பட்டம் அல்லது டாக்டர் பட்டம் பெற்ற எந்த மனிதனுக்குமே, அவன் முதலாவதாக தேவனை முகமுகமாய் அக்கினி ஸ்தம்பத்தில் சந்திக்காமல், பிரசங்கபீடத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் செய்தியின் மேல் உரிமை கோர, யாதொரு உரிமையும் கிடையாது; தன்னை செய்தியைக் கொண்டு வருபவன் என்று அழைத்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அந்த அனுபவத்தை உலகிலுள்ள வேதசாஸ்திரிகள் அனைவருமே விளக்கம் கொடுத்து உங்களிடமிருந்து அகற்றிப்போட இயலாது. அது உங்களுக்கு சம்பவித்தது! நீங்கள் அங்கிருந்தீர்கள், அதைக் குறித்து உங்களுக்குத் தெரியும். யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, அவர்கள் எவ்வளவு தான் அந்த நாட்கள் கடந்துவிட்டன, ''அது அப்படியல்ல'' என்று சொன்ன போதிலும் நீங்கள்... அது உங்களுக்கு சம்பவித்தது, அது வார்த்தையின்படி அமைந்துள்ளது. 97ஆம், ஆகையால் தான் அந்த சத்தம் அவனுடன் பேசினதென்று மோசே அறிந்திருந்தான் - வார்த்தை சத்தம். தேவன் ஆபிரகாமிடம், “உன் சந்ததியார் நானூறு வருஷம் சஞ்சரிப்பார்கள், ஆனால் அவர்களை நான் விடுவிப்பேன்'' என்று கூறினார் என்பதை அவன் அறிந்திருந்தான். நானூறு வருஷம் முடிந்துவிட்டதென்றும் அவன் அதை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறான் என்றும் அறிந்திருந்தான். மனிதர்களே ஸ்திரீகளே, இந்தக் கடைசி நாட்களில் மாம்சமானயாவர் மேலும் தமது ஆவியை ஊற்றுவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அனுப்பி, கறைதிரையற்ற மணவாட்டியை அழைக்கப்போவதாக வாக்களித்துள்ளார். அவர் அப்படி செய்வதாக வாக்களித்துள்ளார், அவர் செய்து நிறைவேற்றுவார். கூலிக்கு அமர்த்தப்பட்ட இந்த மேய்ப்பர்களுக்கு செவி கொடுக்காதீர்கள், அவர்கள் உங்களை வழிதவறச் செய்துவிடுவார்கள். பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே உங்களுக்கு தமது வார்த்தையிலிருந்து ஆட்டின் ஆகாரத்தைப் போஷிக்கும் மேய்ப்பராயிருக்கிறார். அது எப்பொழுதும் மேய்ப்பனின் மூலமாகவே வருகிறது. அவர் நம்முடைய மேய்ப்பர். அவருக்கு செவி கொடுங்கள். நீங்கள் அவருடைய மந்தையின் ஆடுகளாயிருக்கிறீர்கள். நீங்கள் அப்படியிருந்தால், அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள். மற்றவர்கள் சொல்வதையல்ல, அவர் சொல்வதையே கேட்பீர்கள். அந்நிய சத்தத்தைக் குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்காது. 98ஓ, என்னே, அந்த மகத்தான மேய்ப்பன் - தீர்க்கதரிசி அங்கு நின்று கொண்டு, வியாக்கியானம் உரைத்து மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதை கவனியுங்கள். யோவான் யோர்தான் நதியில் நிற்கையில் என்ன கூறினான் என்று பாருங்கள். அவன் அங்கு நின்று கொண்டு பிரசங்கிக்கும் போது, “வேளை வருகிறது...'' என்று கூறினான். கவனியுங்கள், யோவான் ஒரு ஆசாரியனின் மகன். அவர்கள் எப்பொழுதுமே தங்கள் தகப்பனின் வழியைப் பின்பற்றுபவர்கள், அப்படித்தான் நாம் நமது தகப்பனின் பெயர்களைப் பெற்றுள்ளோம். அவர்கள் என்ன செய்த போதிலும், அவர்களை அந்த பெயரால் தான் அழைத்தார்கள். யோவான் தன் தகப்பனைப் போலவே ஆசாரியன் ஆவான் என்று கருதப்பட்டான். உங்களுக்குத் தெரியுமா, கர்த்தருடைய தூதன் யோவானின் தகப்பன் சகரியாவை சந்தித்த பிறகு எலிசபெத்து கர்ப்பமுற்றாள். இயேசுவின் தாய் அவள் வீட்டுக்கு சென்ற போது, அவள் ஏற்கனவே ஆறுமாதம்... கர்ப்பமாயிருந்தாள். ஆனால் குழந்தைக்கு ஜீவன் இல்லை, குழந்தை அசையாததினால் அவளுக்கு பயம் ஏற்பட்டது. 99பரிசுத்த ஆவி, கர்த்தருடைய தூதன், மரியாளுக்கு தோன்றி, அவள் புருஷனை அறியாமலேயே பிள்ளை பெறுவாள் என்று கூறி, எலிசபெத்தின் நிலையையும் கூறினான். அவள் எலிசபெத்தினிடம் இதைக் கூற யூதேயாவின் மலைகளுக்குச் சென்றாள். அவள் எலிசபெத்தை சந்தித்த போது, அவள் தாயாகப் போகிறாள் என்பதைக் கூறினாள். புருஷனை அறியாமல் அது எப்படி முடியும் என்று எலிசபெத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பொழுது அவள், பரிசுத்த ஆவி என் மேல் நிழலிட்டு, எனக்குப் பிறக்கப் போகும் பரிசுத்தமுள்ளது, ''தேவனுடைய குமாரன்'' என்னப்படுவார் என்றும், அவருக்கு நான் ''இயேசு'' என்று பெயரிட வேண்டும் என்றும் கூறினார்'' என்றாள். முதன் முறையாக மனித உதடுகளால் இயேசு என்னும் பெயர் உச்சரிக்கப்பட்ட போது, தாயின் கர்ப்பத்தில் இறந்து போயிருந்த குழந்தைகளிப் பால் துள்ளி சத்தமிட்டது; அது தாயின் வயிற்றில் துள்ளிற்று, அது ஜீவனைப் பெற்றிருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமம் மரித்த குழந்தைக்கு ஜீவனை அளித்திருக்குமானால், மறுபடியும் பிறந்துள்ளதாக உரிமை கோரும் சபைக்கு அது என்ன செய்ய வேண்டும்? 100நாமோ ஊறுகாயைப் போல் புளிப்புள்ளவர்களாக, அதை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறோம். நாம் எழுந்து நின்று நமது அறிக்கையை சாட்சி கூறி, இந்த அர்த்தமற்ற காரியங்களை கடிந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகச் செய்ய நாம் பயப்படுகிறோம். இது கிறிஸ்துமஸ் நேரம். சான்டா கிளாஸ் போன்றவைகளை அகற்றி, வர்த்தகமாக்கியுள்ள இவையனைத்தையும் புறம்பே தள்ளுங்கள். சான்டா கிளாசைக் குறித்து நீங்கள் வேதத்தில் எங்கு கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அது ரோம கட்டுக் கதை, அது ஒன்றுமேயில்லை, அப்படி ஒன்றுமே கிடையாது. அப்படிப்பட்ட அர்த்தமற்ற காரியங்களை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தராதீர்கள். ஒருநாள் நீங்கள் அவர்களிடம் அது கட்டுக்கதை என்றும், அவர்களிடம் பொய் சொன்னீர்கள் என்றும் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும். அது இயேசுவைக் குறித்து நீங்கள் கொண்டுள்ள சாட்சியை பாதிக்கும். அவன் ஒருக்கால் இதுவும் அது போன்று கட்டுக் கதையாக இருக்கக் கூடும்'' என்று சொல்லக் கூடும். நீங்கள் மகத்தான மேய்ப்பர் - தீர்க்கதரிசியாகிய இயேசு கிறிஸ்துவை அவருக்குரிய கிறிஸ்துமஸில் மீண்டும் வையுங்கள். 101கவனியுங்கள், இந்த தீர்க்கதரிசி யோவான் அங்கு நின்று கொண்டு சொல்வதைக் கேளுங்கள். அவன் ஒரு பெரிய மேய்ப்பன்-தீர்க்கதரிசியென்று நாமறிவோம். அவனிடம் ஒரு செய்தி இருந்தது. அவன் இயேசுவை அறிமுகப்படுத்துவான் என்று தூதன் அறிந்திருந்தான். அவன் வேத சாஸ்திரப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. சென்றிருந்தால் அவர்கள், ''உனக்குத் தெரியுமா, டாக்டர் இன்னார் இன்னார் அந்த ஸ்தானத்தை வகிக்க வேண்டும். அவரை நீ அறிமுகம் செய்ய வேண்டும். உனக்குத் தெரியும் அவர்...'' என்று கூறியிருப்பார்கள். பாருங்கள், அவன் மனிதருடன் சம்பந்தம் கலக்க முடியவில்லை. அவனுக்கு ஒன்பது வயதான போது, தேவனுக்கு முன்பாக வழியை ஆயத்தம் பண்ணுவதற்காக அவன் வனாந்தரத்துக்கு சென்றதாக நமக்கு கூறப்பட்டுள்ளது. மேய்ப்பர்களும் அந்த இடத்திலிருந்து தான் வந்தனர். கவனியுங்கள், அவனுடைய செய்தி பட்டம் பெற்ற ஒரு வேதசாஸ்திரியின் செய்திகளைப் போன்று கடினமான சொற்கள் கொண்டதாக இருக்கவில்லை. அவன் மார்க்க சம்பந்தமான வர்களைப் பார்த்து, “ஓ விரியன் பாம்பின் சந்ததியினரே, பாம்பின் கூட்டமே'' என்றான். அவன் வனாந்தரத்தில் பாம்பை தான் கண்டிருந்தான். அவன் கண்ட மிகவும் தாழ்வான ஒன்று பாம்பே. அவன் அந்நாளின் ஆசாரியர்களையும், குருவானவர்களையும், வேத சாஸ்திரிகளையும், ”பாம்பின் கூட்டமே'' என்றழைத்தான். அவன், “வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? ''நாங்கள் இதை சேர்ந்தவர்கள், அதை சேர்ந்தவர்கள்'' என்று சொல்ல நினையாதிருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்'' என்றான். கற்களைத் தான் அவன் வனாந்தரத்தில் கண்டிருக்கிறான். ”கோடரியானது மரங்களின் வேரருகே வைத்திருக்கிறது. இவைகளைத் தான் அவன் கண்டு பழக்கமானவன்: பாம்புகள், மரங்கள், வனாந்தரம். பாருங்கள், இது தான் அவன் செய்தி. அவனுக்கு வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் உபயோகிக்கும் கடினமான சொற்கள் ஒன்றும் தெரியாது. (இதையெல்லாம் இல்லையென்று விவரிக்க). அவன் இயற்கையை அனுசரித்து பிரசங்கித்தான். 102அதைத் தான் நாங்கள் இங்கு காண்பிக்கிறோம்: மேய்ப்பனின் கோல், மேய்ப்பன், ஆடுகள் போன்ற இயற்கையை அனு சரித்தவை . யோவான் என்ன செய்தான்? அவன் ஒரு பெரிய காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது. அவன் ஒருவனே மேசியாவை அறிந்து கொள்ள வேண்டியவன். அவன், “நான் சொல்லுகிறேன், அவர் இப்பொழுது உங்கள் நடுவில் நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை அறியாதிருக்கிறீர்கள். ஏனெனில் உங்கள் வேத சாஸ்திரம் உங்களைக் கட்டிப் போட்டிருக்கிறபடியால், நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அறியாமலிருக்கிறீர்கள்'' என்றான். ஒருநாள் இயேசு அங்கு நடந்து வந்தார். அவன் “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' என்றான். ஆட்டுக்குட்டி! அல்லேலூயா! உண்மையான பாவ நிவாரண பலி. ஏதேன் தோட்டம் முதற்க்கொண்டு பலி செலுத்தப்பட்ட ஒவ்வொரு ஆடும் நிழலாயிருந்து வந்த அவர், ஒரு சாதாரண மனிதனாக நதியண்டையில் நடந்து வருகிறார். 103அவர்கள், ''யோவானே, நீ எப்படி அறிந்து கொண்டாய்? எனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே'' என்றனர். அவன், ''நான் சாட்சியாக உரைக்கிறேன், தேவ ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி வருகிறதைக் கண்டேன். அப்பொழுது ஒரு சத்தம், ''இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்'' என்றது, என்றான். புறாவையும் ஆட்டுக் குட்டியையும் கவனியுங்கள். பாருங்கள்? ஆம், அது வேறு ஏதாகிலும் இருந்திருந்தால்.... ஓநாய் அங்கு நின்று கொண்டிருந்தால்? ஆட்டுக்குட்டி அதன்மேல்... புறா அதன் மேல் உட்கார்ந்திருக்காது. தேவன் தமக்கு அடையாளமாக, மிகவும் சாந்தமுள்ள வானத்தின் பறவையாகிய புறாவையும், தமது குமாரனுக்கு அடையாளமாக, பூமியில் மிகவும் சாந்தமுள்ள பிராணியாகிய ஆட்டுக் குட்டியையும் அளித்தார். பாருங்கள், வானத்தின் சுத்தமான பறவை, ஒரு காகம் அல்ல, ஒரு பருந்து அல்ல, ஒரு புறா. ஒரு பன்றி அல்ல, ஒரு ஆட்டுக்குட்டி. வேறு எந்த சுபாவமும் ஒன்றாக இணைந்திருக்காது. கவனியுங்கள், புறா ஆட்டுக் குட்டியின் மேல் வந்து அதை வழி நடத்தினது - ஆட்டுக் குட்டிக்கு விருப்பமான வழியில் அல்ல, பிதாவுக்கு விருப்பமான வழியில். அப்படித்தான் ஒரு உண்மையான ஆட்டுக்குட்டி இன்றுள்ளது. ஓ, இது கிறிஸ்துமஸ் காலம். ஆடுகளே, தேவன் தமது வார்த்தையினால் மாத்திரமே நடத்துகிறார் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அது தான் அவருடைய கோல். 104கவனியுங்கள் ஒன்றும் நடந்திருக்காது, ஆனால் யோவான், ''மற்றவர்கள் அதைக் காணவில்லை, ஆனால் நான் சாட்சியாக உரைக்கிறேன், அதை நான் கண்டேன்'' என்று சொல்லி, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' என்று அறிமுகப்படுத்தினான். நான் முடிக்கும் தருணத்தில் என் கிறிஸ்துமஸ் செய்தியை இப்பொழுது அறிமுகப்படுத்தலாமா: “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.'' அது அதே ஆட்டுக்குட்டி. அன்று அவர் ஆட்டுக்குட்டியாயிருந்த விதமாகவே இன்றும் ஆட்டுக்குட்டியாயிருக்கிறார். அன்று அங்கிருந்த விதமாகவே இன்றும் இங்கிருக்கிறார். ''ஏனெனில் எங்கே இரண்டு பேர் மூன்று பேர், என் நாமத்திலே கூடியிருக்கிறார்களோ, அவர்கள் மத்தியிலே நான் வாசமாயிருக்கிறேன்'' என்னும் அவருடைய வார்த்தை மாறாதது. அப்படித்தான் அவர் கூறினார். அவர் ஒரு போதும் மாறுவதில்லை. அவர் இப்பொழுதும் தமது ஆடுகளுக்கு தமது மேய்ப்பன் - தீர்க்கதரிசியின் மூலம், முதலில் ஆட்டின் ஆகாரத்தைக் கொடுக்கிறார். வேத சாஸ்திரிகளுக்கல்ல, அவருடைய ஆடுகளுக்கு. 105அவர்கள். மற்றவர்கள் எப்படி அதை புசிக்க முடியும்? ஞானிகள்... இதை கவனியுங்கள் ஞானிகளும், கல்விமான்களும், உலகத்தால் நன்கு பயிற்சி பெற்றும், சான்டா கிளாஸ் என்று ஒன்றுண்டு என்று கூற விரும்புகின்றனர். அவர்கள் வார்த்தையாக அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து, எல்லா விதமான கட்டுக் கதைகளையும் வழிபடுகின்றனர். ஏனெனில் அவர்களுடைய ஸ்தாபனங்களிலுள்ள கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள இன்றைய மேய்ப்பர்களின் கருத்துக்கு அது பொருந்துவதில்லை. கோட்பாடுகளை போஷிக்க அமர்த்தப்பட்ட இந்த கூலி வேலையாட்கள் ஒரு வெள்ளாட்டின் கீழ் உங்களை ஒன்று சேர்க்க முனைவார்கள், அதை நம்பாதீர்கள்! அவர்கள் உங்களை அடிக்கப்படும் இடத்துக்கு நடத்திச் சென்று விடுவார்கள். ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகட்கு முன்பு இந்த மாதத்தில் பிறந்த அந்த மகத்தான மேய்ப்பருக்கு செவி கொடுங்கள். அவருடைய செய்தியில் உண்மையான மேய்ப்பர்கள் தோன்றி, தங்கள் ஆடுகளைப் பாதுகாப்பது எப்படியென்பதை அறிந்துள்ளனர். கவனிப்போமானால், அவர்கள் இன்னும் கட்டுக் கதைகளில் விருப்பம் கொண்டுள்ளனர். அன்று போலவே இன்றும் அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களுடைய மத சம்பந்தமான கருத்துக்களுடன் பொருந்துவதில்லை. அவர்கள் அந்த வார்த்தையை திரித்து தங்கள் ஸ்தாபனத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் உண்மையான வார்த்தையை பிரசங்கிக்க மாட்டார்கள். அவர்கள் மாட்டார்கள் அவர்கள், “அது அப்போஸ்தலர்களின் நாட்களுக்குரியது. இதுவல்ல அதன் அர்த்தம், என்கின்றனர். அது என்ன கூறுகிறதோ, அதுதான் அர்த்தம். அதை வியாக்கியானப்படுத்த அதற்கு... யாரும் தேவையில்லை. 106இந்நேரத்தில் நமது தலைகளையும் இருதயங்களையும் பூமியின் மண்ணுக்கு நேராக வணங்கி, முன்னணைக்கு விரைந்து சென்று, மேய்ப்பரால் இந்த வார்த்தையின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த ஒளியைக் கண்டு அதை ஏற்றுக் கொள்வோம் - அந்த மகத்தான தீர்க்கதரிசி - மேய்ப்பராகிய, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை. அவரைக் குறித்து நீண்ட நேரமாக உங்களிடம் பேசினேன். குருவானவர் பேசுவது போல், என் சொற்களை ஒருக்கால் கோர்வையாக பேசியிருக்க மாட்டேன். அப்படி நான் பேச முயல்வதில்லை. அவர் அதை எனக்கு அருளும் விதமாகவே நான் பேச முயல்கிறேன். அது ஏன் மேய்ப்பர்களாக இருக்க வேண்டியதாயிருந்ததென்று இப்பொழுது காண்கிறீர்களா? மற்றவர்கள் வேறு விதமான கருத்தில் பயிற்சி பெற்றிருந்ததன் காரணத்தால், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கு நம்மை நடத்த நமக்கு பல விதமான மேற் பார்வையாளர்கள், மாகாண அதிகாரிகள், பேராயர்கள், குருவானவர்கள், கார்டினல்கள், போப்புகள் போன்ற அனைவர் இவ்வுலகில் உள்ளனர். ஆனால் தேவன் நமக்கு ஒரு மேய்ப்பரைத் தந்திருக்கிறார். அந்த மேய்ப்பர் பரிசுத்த ஆவியே. 107இப்பொழுது நான் கூறுவதைக் கேளுங்கள். ''அவர்...'' (ஓ சிந்தனை அல்ல, அவர் தனிப்பிரதிப் பெயர்.) ''பரிசுத்த ஆவியாகிய அவர் (சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, நான் உங்களுக்குச் சொன்னயாவையும் உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்து, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர்தான் மகத்தான மேய்ப்பர். இந்த மேய்ப்பரைத் தான் இயேசு விட்டுச் சென்றார். பரிசுத்த ஆவி தான் வேதாகமத்தை எழுதினார். அப்படித் தான் வேதாகமம் கூறுகிறது: ''தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு வார்த்தையை எழுதி வைத்தனர்'' என்று. அப்படியிருக்க, பரிசுத்த ஆவி உங்களை கோட்பாட்டுக்கு இழுப்பாரா? வார்த்தை கூறாத ஒன்றுக்கு அவர் உங்களை இழுப்பாரா? அது முற்றிலும் கூடாத காரியம். பரிசுத்த ஆவி, ''இதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும்'' என்று கூறிவிட்டு, மறுபுறம் திரும்பி, “இல்லை, நான் கூறினது தவறு. சபை கூறுவதன் படி செய்யுங்கள்'' என்று சொல்வாரானால், அவர் பொய்யராகிவிடுவார். நீங்கள் வேறெதற்கோ செவி கொடுத்து, அது உங்களை வார்த்தைக்கு நடத்தும் உண்மையான மேய்ப்பராகிய பரிசுத்த ஆவியிடமிருந்து விலகச் செய்து, உங்களுக்கு அனுபவம் இல்லாமல், உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் சாட்சி இல்லாதிருக்குமானால், அது இல்லாமல்... 108தேவன் ஒருவரே. அவர் ஒருவர் மாத்திரமே நித்திய ஜீவனைக் கொண்டவராயிருக்கிறார். அவரே நித்திய ஜீவன். தொடக்கமுள்ள எதற்கும் முடிவுண்டு. நீங்கள் சபையின் அங்கத்தினர்களாக இருப்பீர்களானால், அதற்கு ஒரு தொடக்கம் உண்டு. ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு தொடக்கம் இல்லை. தேவனுக்கு தொடக்கம் இல்லை. நீங்கள் தேவனால் பிறந்தவர்களானால், நீங்கள் வார்த்தையினால் பிறந்திருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் தேவனுடைய குமாரராகின்றீர்கள். உங்கள் பெயர் உலகத்தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது. உங்களை, உங்கள் தலைமயிரின் நிறத்தை, உங்கள் கண்களின் நிறத்தை, உங்கள் தோற்றத்தை; தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்பே உங்களைக் கண்டார். நீங்கள் இப்பொழுதுள்ள மானிட உருவில் அவர் கண்டார். இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகள் ஆனாலும், நீங்கள் பரிபூரண சாயலுக்கு வர வேண்டுமென்று தேவன் ஆதியில் நியமித்ததை ஒன்றுமே தடை செய்ய முடியாது. ''என் ஆடுகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கிறது, அவைகள் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை.'' 109நீங்கள் இன்றிரவு அந்த நித்திய ஜீவனை ஏற்றுக் கொள்ளாமல், முன்னணையில் ஒரு சிறு குழந்தை கிடத்தப்பட்டு, அதைச் சுற்றிலும் சாஸ்திரிகள் இருக்கும் கட்டுக் கதையை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்களானால், அப்படிப்பட்டவைகளை விசுவாசிக்காதீர்கள். ''நான் நல்லவனாயிருப்பேன். நான் இதை செய்வேன். நான் சபையை சேர்ந்து கொள்வேன். இவ்வளவு தான் நான் செய்ய வேண்டும்'' என்று நினைக்காதீர்கள். நீங்கள் இழக்கப்படுவீர்கள். உங்களுக்கு நித்திய ஜீவன் இல்லாமற்போனால், நீங்கள் எப்படி என்றென்றைக்கும் ஜீவிக்க முடியும்? நீங்கள் ஒரு சோளத்தை எடுத்துக் கொள்ளலாம். காண்பதற்கு அது எவ்வளவு அழகாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் உற்ப-... விஞ்ஞானம் ஒரு சோளத்தை உற்பத்தி செய்துள்ளது. அதை நீங்கள் வெட்டித் திறந்து பார்த்தால், அதற்கு அதே விதமான ஈரப்பசை, அதே விதமான உட்பாகம், வயலில் விளைந்த தானியத்துக்கு உள்ள எல்லாமே உள்ளது. நீங்கள் சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தால், இவ்விரண்டிற்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. இரண்டையும் சோள ரொட்டி செய்ய உபயோகிக்கலாம். இரண்டுமே சோளச் சீவல் (corn flakes) செய்ய உதவும். ஆனால் அவை யிரண்டிற்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க வேண்டுமானால் அவைகளை நிலத்தில் விதைக்க வேண்டும். மனிதனால் உண்டாக்கப்பட்ட சோளம் அங்கேயே தங்கி அழுகிப் போய் மேலே வளருவதில்லை. ஆனால் தேவன் உண்டாக்கின சோளமோ, ஜீவனைப் பெற்றதாய் மறுபடியும் பிழைக்கிறது. 110நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் பாவனை செய்யலாம், நீங்கள் கிறிஸ்தவனைப் போல் சபைக்குச் செல்லலாம், நீங்கள் கிறிஸ்தவனைப் போல் உங்கள் பெயரை ஒரு புத்தகத்தில் எழுதி வைக்கலாம், நீங்கள் கிறிஸ்தவனைப் போல் ஒரு ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதெல்லாம் சரிதான். ஆனால் நல்ல மேய்ப்பன் தன் ஜீவனைக் கொடுத்ததனால் கிடைக்கப்பெற்ற அந்த நித்திய ஜீவன் உங்களுக்குள் இல்லாமல் போனால், பிரிந்த... தேவன் பெந்தெகொஸ்தே நாளில் இறங்கி வந்த போது, சீனாய் மலையின் மேல் இருந்த முதல் மேய்ப்பனாகிய மோசேயிடம் அவர் வந்தது போலவே, ஒரு அக்கினி பந்தில் இறங்கி வந்தார். அவர் இறங்கி வந்த போது, அக்கினி மயமான நாவுகளாக தம்மைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தார். தேவன் தம்மைப் பிரித்துக் கொண்டு தமது ஜனங்களுக்குள் வருதல். அதை நீங்கள் பெறாமல் போனால்.... பேதுரு, ''அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும்'' என்றான். 111நண்பர்களே, வேதசாஸ்திர கட்டுக்கதை எதற்கும் செவி கொடுக்காதீர்கள், நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். அப்படி பிறக்கும் போது, உங்களுக்குள் இருக்கும் ஆவியானது தேவனுடைய ஒரு பாகமாயிருந்து, தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியம் என்று சாட்சி கூறுகின்றது. அந்த அனுபவத்தை நீங்கள் பெறாமலிருந்தால், நாம் விரைந்து முன்னணையிலுள்ள வார்த்தைக்குச் செல்வோம். நாம் வேதசாஸ்திர சொற்களால் அலங்கரிக்கப்பட்ட சபைகளை விட்டு தூர விலகி, வேதாகமத்துக்கு, தேவனுடைய வார்த்தைக்கு, மேசியா அறியப்படுகின்ற அந்த உண்மையான முன்னணைக்கு விரைந்து செல்வோம். நாம் தலை வணங்கி ஜெபிப்போம்: 112அன்புள்ள தேவனே, இந்நேரத்தில் இவ்வளவு தான் எனக்குச் சொல்லத் தெரியும். நாங்கள் கிறிஸ்துமஸை அணுகி கொண்டிருக்கிறோம். தெருக்கள் மனிதராலும், ஸ்திரீகளாலும், பையன்களாலும், பெண்களாலும் நிறைந்து, ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு, அவர்களுக்கு வெகுமதி கொடுப்பவர்களுக்கு வெகுமதி வாங்கிக் கொடுப்பதற்கென சென்று கொண்டிருக்கின்றனர். தங்களைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்ளும் அநேகர் கிறிஸ்துமஸ் வெகுமதிகளாக சிகரெட்டுகளையும், மதுவையும் வாங்குவதற்கு தெருக்களில் போய்க் கொண்டிருக்கின்றனர். தேவனே, அவர்கள் உமது முகத்தில் எறிந்து விட்டு, தங்கள் பிள்ளைகளுக்கு சில கட்டுக் கதைகளை, பரி. நிக்கோலாஸ் என்னும் ரோம அஞ்ஞான பழக்க வழக்கத்தை, உலகத்தாரால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படும் சில கட்டுக் கதைகளை கற்றுத்தந்து, கிறிஸ்துமஸின் உண்மையான கிறிஸ்துவை, உண்மையான ஆட்டுக் குட்டியை புறக்கணிப்பது போல் தோன்றுகிறது. தேவனே, எங்களை நீர் உண்டாக்கின பூமியின் மண்ணை நோக்கி எங்கள் தலைகள் வணங்கப்பட்டிருக்கும் இந்த இரவு வேளையில்... நீர் ஒருமுறை அந்தப் பெரிய தீர்க்கதரிசி - மேய்ப்பனாகிய ஆபிரகாமிடம், ''ஆபிரகாமே, நீ சென்று கடலோரத்திலுள்ள மணலை எண்ணு'' என்றீர். அவன் மாறுத்தரமாக, ''அவை திரளானவை. என்னால் எண்ண இயலாது'' என்றான். அதன் பிறகு நீர், ''வானத்தை அண்ணாந்து பார்த்து, நட்சத்திரங்களைக் கணக்கிடு'' என்றீர். அது கூடாத காரியம் என்று அவன் அறிந்து கொண்டான். அப்பொழுது நீர் அவனிடம், “உன் சந்ததி அவ்வாறே திரளாயிருக்கும்'' என்றீர். நீர் அந்த மேய்ப்பன் - தீர்க்கதரிசிக்கு அருளின, பூமியின் மண்ணிலிருந்து வானத்தின் நட்சத்திரத்துக்கு என்னும் செய்தியை நினைத்துப் பார்த்து, சாவுக் கேதுவான எங்கள் சரீரத்துக்கு மரணம் உண்டாகி அது மண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டாலும், எங்களை நட்சத்திரங்களுக்கு எழுப்ப வல்ல ஜீவன் ஒன்றுண்டு என்பதை அறிகிறோம். 113உம்முடைய பெரிய தீர்க்கதரிசியாகிய தானியேலிடம் நீர் கூறினது போன்று, தங்கள் தேவனை அறிந்திருக்கிறவர்கள், கடைசி நாட்களில், பிரபலமான காரியங்களைச் செய்வார்கள். அநேகரை நீதிக்குட்படுத்து கிறவர்கள் நட்சத்திரங்களைப் போல் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் பிரகாசிப்பார்கள்.'' கர்த்தராகிய தேவனே, மகத்தான சிருஷ்டிகரே, தேவன் யாரென்று மனிதன் அறிந்து கொள்வதற்கென இயேசு என்னும் உருவில் பூமிக்கு வர மிகவும் சித்தம் கொண்டவரே, நீர் ஒருவர் மாத்திரமே மரணம் என்னும் தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியும். தேவதூதன் அல்லது வேறு யாருமே அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. தண்டனையை விதித்தவர் நீரே, நீர் மாத்திரமே நீதியாய் அதை எடுத்துப்போட முடியும். நீர் ஆவியாயிருக்கிறபடியினால் மரிக்க முடியாது. ஆகவே மரிப்பதற்கென்று நீர் மாம்சமாகி உம்மால் மீட்கப்பட்டவர்களின் பாவத்தை சுமந்து தீர்க்க எண்ணி ஆட்டுக்குட்டியானவராகி, உம்முடைய சொந்த இரத்தத்தால் மீட்கப்பட வேண்டியவர்களை மீட்டுக் கொண்டீர். ஓ, அந்த வரலாறு மிகப் பெரிது, கர்த்தாவே. அது அநேகருடைய தலைக்குள் நுழையாமல் கடந்து சென்று விடுகிறது. ''சிறு யேகோவா முன்னணையில் கிடக்கிறார், அவர் ஒரு குழந்தையாக வாழ வேண்டியிருந்தது. சிறு யேகோவா தொழுவத்தில் பிறந்தார். சிறு யேகோவா தெருவில் பிள்ளைகளுடன் விளையாடினார். இளைஞனான சிறு யேகோவா, பள்ளிக்கூடச் சிறுவனான சிறு யேகோவா, மகத்தான சிறு யேகோவா'' என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது! நீர் இந்த ஸ்தானத்தையெல்லாம் வகித்தீர். அதன் பிறகு ''ஆட்டுக்குட்டியானவரான யேகோவா, தீர்க்கதரிசியாகிய யேகோவா.'' நீர் பாவத்திற்கான தண்டனையை அனுபவித்து எங்களுக்கு நித்திய ஜீவனை அளிக்க வேண்டும் என்பதற்காக இவையெல்லாம் ஆனீர். 114ஓ தேவனே, இவ்வுலகின் ஏழை, அபாத்திர சிருஷ்டிகளாகிய எங்களை மன்னியும். கர்த்தாவே, நீர் எங்களுக்காக எவ்வளவு செய்தீர் என்று அறிந்து, நாங்கள் அதற்கு பதிலாக மிகக் குறைவாக செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, இன்றிரவு வெட்கப்படுகிறோம். நீர் எவ்வாறு பெரிய மார்க்கத் தலைவர்களின் காலத்தில் வந்தீர். நீர் எவ்வாறு உறுதியாக நின்று பிதாவின் வார்த்தையை பிரதிபலிக்க சித்தம் கொண்டீர். அவர்களுடைய கருத்துக்களுடன் நீர் எவ்வாறு ஒத்துப் போகாமல் இருந்தீர். ஆனால் இன்றைக்கு உறுதியாய் நின்று, ஒப்புரவாகாமல் வார்த்தையை வார்த்தை என்றழைக்க ஒருவருமே இல்லை என்பது போல் தோன்றுகிறது. தேவனே, நாங்கள் இவைகளை இவ்வளவாக அசட்டை செய்த தற்காக எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். எங்கள் இருதயங்களை உமக்கு முன்னணையாக நாங்கள் அளிக்கும் இந்த இரவு வேளையில், இதை எங்களுக்கு அருளுவீராக. ஒவ்வொரு முறையும் சிலுவையில்யறையுண்ட இயேசு ஏற்றுக் கொள்ளப் படும் போது, ஒரு புது பிறப்பு உண்டாகிறது, ஒரு ஆடு புதிதாய் பிறக்கிறது, அப்பொழுது பரலோகத்தில் தேவ தூதர்கள் பாடுகின்றனர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மனந்திரும்புகிற ஒரு பாவியின் நிமித்தம், தேவ தூதர்கள் பரலோகத்தில் பாடுகின்றனர். இன்றிரவு இங்குள்ள யாராகிலும் உம்மை தேவனுடைய உண்மையான ஈவாக, சொந்த இரட்சகராக அறியாமலிருந்தால் - ஏதோ அறிவில் விளைந்த கருத்தல்ல, ஆனால் மறுபடியும் பிறத்தல் (உம்முடைய ஆவியினால் பிறத்தல்) - கர்த்தாவே, எங்கள் தலைகள் வணங்கியுள்ள இந்நேரத்தில் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, அப்படி செய்யாதவர் ஒருவராகிலும் இருப்பார்களானால், அவர்கள் தங்கள் இருதயங்களில் இப்பொழுது சந்தோஷத்தை பெற்றுக் கொண்டு, அன்றைய மேய்ப்பர்களைப் போல், தங்கள் இருதயமாகிய முன்னணையில் வார்த்தையாகிய மேசியாவை கண்டு கொள்வார்களாக. அவர்களுக்கு அது பரிசுத்த ஆவியாக, இந்நாளின் மகத்தான மேய்ப்பராக உறுதிப்படுவதாக. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். 115இப்பொழுது நாம் தலை வணங்கியிருக்கும் போது, நமது இருதயங்களும் வணங்கியிருக்கும் என்று நம்புகிறேன். இந்நேரத்தில், என் அருமை சகோதரனே, நீ சபையின் அங்கத்தினனாக இருந்த போதிலும்... நான் இப்படி கூறினதனால் உன்னைப் புண்படுத்தவில்லையென்று நம்புகிறேன். நான்.... ஒரு சபையைச் சேர்ந்திருப்பதனால் பரவாயில்லை, நாம் அதை செய்ய வேண்டும், ஆனால், ஓ சகோதரனே, அதை ஏற்றுக் கொள்ளாதே, நீ மறுபடியும் பிறக்க வேண்டும். நீ மறுபடியும் பிறக்க வேண்டுமென்று அந்த மகத்தான தீர்க்கதரிசி - மேய்ப்பர் கூறினார். அவர் ஒரு வேத சாஸ்திரியிடம், ''நீ மறுபடியும் பிறக்க வேண்டும்'' என்று கூறினார். நீ விசுவாசிப்பதனால் மறுபடியும் பிறக்கவில்லை. அவர்கள், “நீ விசுவாசிக்கும் போது மறுபடியும் பிறந்து விடுகிறாய் என்கின்றனர். ஆனால் வேதம், ''பிசாசுகளும் கூட விசுவாசிக்கின்றன“ என்கிறது. இப்பொழுது, கவனியுங்கள், அது அதுவல்ல, அது ஒரு அனுபவம். நீங்கள், நான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறேன்“ எனலாம். அப்போஸ்தலர்களும் கூட அப்படித்தான் இருந்து வந்தனர். ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் மறுபடியும் பிறக்கவில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் குணப்படக்கூடவில்லை. காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முந்திய இரவு , உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா... அல்லது காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று, காட்டிக் கொடுக்கப்படுவதற்கு சற்று முன்பு? இயேசு சீமோன் பேதுருவிடம், ''நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து'' என்றார். பேதுரு அவரை மூன்றரை வருடங்களாக பின்பற்றி, பிசாசுகளைத் துரத்தி, வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி, சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போதிலும், தேவனுடைய வார்த்தையின்படி, அவன் குணப்படக்கூடவில்லை. 116அப்படிப்பட்ட ஒரு தூதனை இன்றிரவு உங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் உண்மையில் அதை விரும்பினால்... மற்றவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை. அது உண்மை, சகோதரனே, சகோதரியே. அது உண்மையென்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாருடைய தலைகளும் வணங்கி, எல்லாருடைய கண்களும் மூடப்பட்டிருக்கும் இந் நேரத்தில் நீங்கள் - என்னிடமல்ல, நான் சாதாரண மனிதன், உங்கள் சகோதரன் - கிறிஸ்துவினிடத்தில் உங்கள் கையையுயர்த்தி, ''அதை நான் விசுவாசிக்கிறேன். அந்த கிறிஸ்துவை - கிறிஸ்துமஸின் உண்மையான கிறிஸ்துவை - என் இருதயத்தில் கொண்டிருக்க விரும்புகிறேன்'' என்று கூறுவீர்களா? இப்பொழுது உங்கள் கைகளையுயர்த்துவீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. தேவன் உன்னையும் ஆசீர்வதிப்பாராக. என்னே, எல்லாவிடங்களிலும் கைகள். அது நடப்பதாக, சகோதரனே; அது நடப்பதாக, சகோதரியே; அது நடப்பதாக, நண்பனே; தேவனுடைய ஆவியினால் நிறையப்படுங்கள். மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதனால் என்ன? ஞாபகம் கொள்ளுங்கள், அது உங்கள் ஜீவன். நாளை காலை நாம் ஒருக்கால் இவ்வுலகில் இருக்கவும் கூட மாட்டோம். இப்பொழுது நாசியிலுள்ள சுவாசம் நாளை இருக்கும் என்னும் நிச்சயம் நமக்கில்லை. ஒருக்கால் நாம் அடுத்த மூச்சுவிடாமல் போய் விடக்கூடும், தேவனுடைய கிருபை மாத்திரமே. நீங்கள் எவ்வளவு நல்லவர்களாக வாழ்ந்தாலும், அதனால் என்ன பயன்...? “ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால், ஒருக்காலும் உள்ளே பிரவேசிக்க மாட்டான்'' என்று இயேசு கூறியுள்ளார். 117மறுபடியும் பிறத்தல் என்னும் சொல் எதைக்குறிக்கிறது என்று எனக்குத் தெரியும். அவர்கள் மறுபடியும் பிறந்த போது என்ன நடந்ததென்று நாம் வேதத்தில் காண்போம். பேதுரு ஒரு விசுவாசி, அப்போஸ்தலர்கள் விசுவாசிகளே. ஆனால் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி அவர்கள் மேல் விழும் வரைக்கும் அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை. என்ன நடந்ததென்று ஜனங்கள் வியந்து கொண்டிருந்த போது, பேதுரு மற்ற பதினொருவருடன் கூட நின்று, ''இஸ்ரவேலரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்தார்; அப்படியிருந்தும் தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக் கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள். தேவன் அவரை எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். அது வேதவாக்கியங்களின்படி உள்ளது'' என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, ''மனிதரே, சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்றார்கள். பேதுரு, “மனந்திரும்புங்கள்'' என்றான். 118இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் கத்தோலிக்க நண்பனே; நான்கைந்து பேர் இங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று எனக்குத் தெரியும். இதைக் குறித்து உங்கள் குருவானவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் - உங்கள் குருவானவர் அல்ல, கத்தோலிக்க குருவான ஒருவரிடம். அவர், ''பாவத்தை மன்னிக்க இயேசு சபைக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். ''எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்'' என்றார். அது உண்மை தான். ஆனால் அவன் அதை எப்படி செய்தானென்று கவனிப்போம். அப்போஸ்தலர்கள் எவ்வாறு அவருடைய கட்டளையை நிறைவேற்றினர்? இன்று கத்தோலிக்க குருவானவர் செய்யும் விதத்தில் அல்ல. ஆனால் முதலாம் குருவானவரான பேதுரு - அவனை நீங்கள் அப்படி அழைக்க விரும்பினால் - ராஜ்யத்தின் திறவு கோல்களைக் கொண்டிருந்தவன், அதை எப்படி செய்ய வேண்டுமென்று கூறினான்? அவன், ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வர வழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். தேவன் இன்னமும் அழைத்துக் கொண்டிருப்பாரானால், நீங்கள் மருந்து சீட்டிலுள்ள அதையே பின்பற்றினால், உங்களுக்கும் அதே அனுபவம் உண்டாயிருக்கும். இந்த சபையோர் அதை விசுவாசித்தால், உங்கள் தலை வணங்கியவாறே “ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அப்படியானால், அதற்கு மாறான எதுவும் வார்த்தைக்கு முரணானது. அது மேய்ப்பன் கூறினபடியிருக்காது. 119கர்த்தராகிய இயேசுவே, இவர்கள் உங்கள் கரங்களில் உள்ளனர். நான் வேண்டிக் கொள்கிறேன், கிறிஸ்துவாகிய மேசியாவை இன்றிரவு பெற்றிராத திறவுண்ட இருதயம் ஒவ்வொன்றும்... கிறிஸ்துவே வார்த்தை, வெளிப்படுத்தப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை. இன்றிரவு அந்த மேசியாவை, உண்மையான கிறிஸ்துமஸ் ஈவை, தேவன் இவ்வுலகிற்கு அருளின ஒரே உண்மையான கிறிஸ்துமஸ் ஈவை, அதை பாவநிவாரண ஆட்டுக்குட்டியாக மேய்ப்பர்களின் மூலம் உலகிற்கு பிரகடனம் செய்த அவரை ஏற்றுக் கொள்ளாத திறவுண்டு இருதயங்கள் ஏதாகிலும் இருக்குமானால், கர்த்தாவே, வார்த்தையாகிய மேசியாவை இன்று அங்கு வைப்பீராக. அவர்களை உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 120அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்''. நண்பர்களே, நாம் கலைவதற்கு முன்பு இதைக்கூற விரும்புகிறேன். அநேக சமயங்களில் நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். என்னிடம் தேவனிடமிருந்து வந்த ஒரு செய்தியுண்டு. அதை நான் என்னவானாலும் பிரகடனம் செய்ய வேண்டும். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும். அப்படி இல்லாமற் போனால், அது தேவனுடைய செய்தியாயிருக்காது; அது இருக்க முடியாது. அது தவறாமல் புரிந்து கொள்ளப்படாமல் இருக்க இன்று எத்தனையோ பிரயத்தனங்கள் உள்ளன. தேவனுக்கு உலகிலுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் மனிதர் உண்டு என்று நான் நம்புகிறேன். நான் என் சகோதரர்களுக்கு விரோதம் அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு டூசானுக்கு வந்து, சகோ. கில்மோர் சபையில் போதகர்களாகிய உங்களைச் சந்தித்துப் பேசினேன். அப்பொழுது நான் ஒரு சபையைத் தொடங்க இங்கு வந்தேனா என்னும் கேள்வி கேட்கப்பட்டது. நான், ''இல்லை, ஐயா. உங்களுக்கு உதவி செய்யவே இங்கு வந்திருக்கிறேன்'' என்றேன். ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில், யாருமே உதவி செய்ய என்னிடம் கேட்கவில்லை. இருப்பினும், உங்களுக்கு உதவி செய்யவே இங்கு நான் இருக்கிறேன். உங்களுடன் கைகோர்க்க இங்கு நான் இருக்கிறேன். உங்களுடன் ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்ள அல்ல, தேவனுடைய வார்த்தையின் பேரில் உங்களுடன் கைக்கோர்த்து, இருதயங்களை ஒன்றாக்கி, நம்முடைய குரலின் கீழ் வரும் இழந்து போன ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் தேவையுள்ள நபருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலாம் என்பதற்காக. என் முழு இருதயத்தோடும், எனக்குள்ள எல்லாவற்றோடும் என்னை இன்றிரவு தேவனுக்களிக்கிறேன். என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் அதிகமில்லை. என்னால் வெள்ளைப் போளத்தையும், தூப வர்க்கத்தையும் பொன்னையும் கொண்டு வர முடியாது. ஏனெனில் என்னிடம் அவை ஒன்றுமில்லை. ஆனால் தேவன் எனக்களித்த எனக்குள்ள யாவற்றையும் இந்த ஜீவனையும் அவருடைய வார்த்தையை என் இருதயத்தில் கொண்டு, முன்னணையில் புதிதாக இன்றிரவு அர்ப்பணிக்கிறேன்; நான் இன்னும் ஒரு ஆண்டு காலம் வாழ அவர் என்னை அனுமதிப்பாரானால், என்னால் முடிந்த வரைக்கும் விசுவாசத்துடன் அந்த வார்த்தையில் உறுதியாய் நிற்க வாக்கு கொடுக்கிறேன். அதை எல்லாமே பிரசங்கம் செய்வேன், அதை எல்லாமே விசுவாசிப்பேன்; எனவே தேவனே, எனக்குதவி செய்யும். எனக்குச் செய்வீரா? 121கர்த்தாவே, எங்களை ஏற்றுக் கொள்ளும். உமது கிறிஸ்துமஸ் வெகுமதியாகிய மேசியாவை, எங்கள் மத்தியிலுள்ள உமது சமுகத்தை உறுதிப்படுத்தும் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை, கோட்பாடுகள் அல்லது சபை பாகுபாடின்றி ஏற்றுக் கொள்கிறோம். இன்றைக்கு உலகம் உடைந்து விழுந்து போகிறதையும், அந்த மகத்தான மேசியா நீட்டப்பட்ட தமது கரங்களுடன் நின்று கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கிறோம்: நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து, சபையானது கடைசி காலங்களில் மிகவும் நன்றாக ஸ்தாபனமாக்கப்பட்டு, அது லவோதிக்கேயா நிலையையடையும் என்று உரைத்துள்ளார். கர்த்தாவே, அது நிறை வேறிவிட்டதை இன்று நாங்கள் காண்கிறோம். அன்புள்ள தேவனே, நாங்கள் என்ன செய்வோம்? நான் என்ன செய்வேன்? கர்த்தாவே, அடுத்த ஆண்டில் வார்த்தையைப் பிரகடனம் செய்ய எனக்கும் உலகிலுள்ள மற்ற வார்த்தையின் மேய்ப்பர்களுக்கும் உதவி செய்யும். கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யுமாறு ஜெபிக்கிறோம். எங்களுக்கு உமது அன்பையும், உமது ஆவியையும், உமது வெளிச்சத்தையும் தந்தருளுவீராக. இன்றிரவு எங்களை உமது வார்த்தைக்கும் உமது அழைப்புக்கும் பிரதிஷ்டை செய்கிறோம். எங்களுக்குள் மாம்சமான தேவனுடைய வார்த்தையாகிய உமது கிறிஸ்துமஸ் வெகுமதியை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஏற்றுக் கொள்கிறோம். ஆமென். 122எனக்கு சபையின் பாடல்கள் பிடிக்கும். வேதாகமத்தில் பவுல், ''நான் பாடின போது, ஆவியில் பாடினேன்; நான் பிரசங்கம் பண்ணின போது, ஆவியில் பிரசங்கம் பண்ணினேன், நான்... நான் என்ன செய்தாலும், அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்தேன்'' என்றான். இது உங்கள் மீது கடினமாய் இருந்ததால்... உங்களை நான் பாராட்டுகிறேன். இந்த செய்தியுடன் நான் வருகிறேன். சில சமயங்களில் எனக்கு அதை கூற விருப்பமில்லை. இருப்பினும் சகோதரரே, அதைக் கூற நான் கடமைப்பட்டவனாயிருக்கிறேன். அப்படி செய்யாமல் போனால், நான் மாய்மாலக் காரனாயிருப்பேன். அப்படி செய்யாமல் போனால், நான் மாய்மாலக் காரனாயிருப்பேன். அப்படி செய்யாமல் போனால், என் மனச்சாட்சிக்கு, தேவனுடைய வார்த்தையில், எனக்குள்ள விசுவாசத்திற்கு துரோகியாகிவிடுவேன். அதை நான் செய்தேயாக வேண்டும். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, என் அழைப்புக்கு உண்மையுள்ளவனாய் இருக்கும் பொருட்டு உங்கள் அனைவருக்கும் உதவி செய்ய விரும்புகிறேன், என்னாலான எல்லாவற்றையும் நான் செய்ய விரும்புகிறேன். இப்பொழுது நாம் காலங்கள் தோறும் சிறந்து விளங்கிய பாடல்களில் ஒன்றான, ''நான் அவரை நேசிக்கிறேன்'' என்னும் பாடலைப் பாடுவோம். அது எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் மாத்திரம் அவரை நேசித்தால், அவர் நம்மிடம் செய்யக் கூறியுள்ளதை நாம் செய்வோம் என்று நம்புகிறேன். “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற் போகிறதென்ன?'' 123கூலிக்கு அமர்த்தப்பட்ட மேய்ப்பன், “உன் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டு சேர்ந்து கொள். இந்த இராப்போஜனத்தில் பங்கு கொண்டு இதை சொல், அவ்வளவு தான்'' என்று கூறுவதற்கு செவி கொடுப்பீர்களா, அல்லது மகத்தான மேய்ப்பரே, ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவும் மாட்டான்'' என்று கூறியுள்ளதற்கா? அக்காலத்து பயிற்சி பெற்ற வேத சாஸ்திரிகளைப் பாருங்கள். அவர்கள் பரிசுத்தமுள்ளவர்களா? தூய வாழ்க்கை வாழ்ந்தனரா? அவர்கள் வாழ்ந்த விதத்துடன் இன்று ஒப்பிட எதுவுமேயில்லை. இருப்பினும் மகத்தான மேய்ப்பர் அவர்களை என்னவென்று அழைத்தார்? ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள். ஏனெனில் அவர்கள். அவர்கள் வார்த்தையை அடையாளங் கண்டு கொண்டனர், ஆனால் வேறொரு நாளுக்கான வார்த்தையை. அந்நாளுக்கான வார்த்தையை அல்ல. அவர்கள் நோவாவின் காலத்தை அறிந்திருந்தால் பரவாயில்லை. அது நோவாவின் காலம். அது மோசேயின் காலத்தில் கிரியை செய்திருக்காது. மோசேயின் காலம் கிறிஸ்துவின் காலத்தில் கிரியை செய்திருக்காது. பாருங்கள்? லூத்தரின் காலம் வெஸ்லியின் காலத்தில் கிரியை செய்திருக்காது. வெஸ்லியின் காலம் பெந்தெகொஸ்தேயினரின் காலத்தில் கிரியை செய்திருக்காது. பெந்தெகொஸ்தேயினரும் மற்றவர்கள் செய்ததையே செய்தனர். கடந்த நாட்களில் எனக்கு உதவியளித்தது யார்? உங்களைக் கேட்கிறேன். 124ஒரு புல் செடி மேலே வரும் போது, அது என்ன? என்ன.... கோதுமை செடி மேலே வரும் போது. “கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால்'' என்று இயேசு கூறினார். கோதுமை மணி... கோதுமை நிலத்தில் விழும் போது என்ன நடக்கிறது? முதலாவதாக மேலே வருவது ஒரு சிறு இலை. அது பூமிக்கடியில் சென்ற கோதுமையைப் போல் இல்லை. இயற்கையை கவனியுங்கள். அது பூமிக்கடியில் சென்ற கோதுமை மணியைப் போல் இல்லை, ஆனால் அது அந்த மணியின் ஜீவனை சுமக்கும் ஒன்று. என்ன தோன்றுகிறது.... அமைதியான தேவன் என்னும் அந்த பிரபலமான புத்தகத்தை எழுதிய நாத்திகன், ''சிவந்த சமுத்திரத்தைப் பிளக்க வல்ல தேவன் எவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் நீடித்த இருளின் காலங்களில் சிறு பிள்ளைகள் சிங்கங்களால் தின்னப்படுவதையும், ஜனங்கள் சிலுவைகளில் அறையப்படுவதையும், அரங்கத்தில் கொல்லப்படுவதையும் பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க முடிந்தது'' என்று எழுதியுள்ளான். பாருங்கள், வார்த்தை என்பது வெளிப்பாடாகும். 125அந்த கோதுமை, அந்த உண்மையான கோதுமை முதலில் தொடங்கின போது, அது தேவனுக்கு தவறிழைத்தது. முடிவில் ஒரு கோதுமை, தேவனை முழுவதுமாக பிரதிபலிப்பவர் தோன்றி, அவருடைய முழு வார்த்தையையும் பிரதிபலித்த காரணத்தால், அவரே வார்த்தையானார். தேவன் அவருக்கு பெந்தெகொஸ்தேவில் ஒரு மணவாட்டியைக் கொடுத்தார். ஆனால் அந்த மணவாட்டியோ இருளின் காலங்களில், உண்மையான கோதுமை மணியைப் போல் நிலத்தடியில் சென்றாள். அது ஏன் செயல்படவில்லை? ஏனெனில் அது பூமிக்குள் மறைந்திருந்தது. அது ஜீவனைத் தோன்றச் செய்வதற்கு முன்பு அழுக வேண்டும். ஆனால் ஒரு காலத்தில் மார்டின் லூத்தர் என்னும் பெயர்ருடைய ஒரு குருவானவர் தோன்றினார். அவர் சத்திய வார்த்தையில் ஒன்றை - ''விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்'' என்பதை - தோன்றச் செய்தார். அப்பொழுது ஒரு இலை தோன்றினது. அதைத் தொடர்ந்து வேறொரு இலை, ஸ்விங்லி, தோன்றினது. அதன் பிறகு கால்வின், நாக்ஸ் என்னும் இலைகள் தோன்றின. முதலாவதாக என்ன தெரியுமா, அது இலையிலிருந்து பட்டுக் குஞ்சத்துக்குள் சென்றது. அது இன்னும் சற்று கூடுதலாக கோதுமை மணியைப் போல் காணப்பட்டது. இருப்பினும் அது பூமிக் கடியில் சென்ற உண்மையான கோதுமை மணியைப் போல் காணப்படவில்லை. அப்பொழுது வெஸ்லி தோன்றினார். வெஸ்லியிலிருந்து மெதோடிஸ்டு சபை தோன்றினது. மெதோடிஸ்டு சபையிலிருந்து நசரீன் சபை, ஐக்கிய சகோதரர்கள் போன்றவர் தோன்றினர். அது என்ன செய்தது? அது மறுபடியும் விழுந்து போய் கோதுமை மணியைப் போலவே காணப்படும் ஒன்றை தோன்றச் செய்தது - பெந்தெகொஸ்தே. 126இப்பொழுது, இயேசு மத்தேயு 24:24ல் கூறியுள்ளதை கவனியுங்கள் : ''கடைசி நாட்களில், இரண்டு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருங்கியிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.'' அது தோன்றும் போது, கோதுமை பயிரிடும் எவரும், அது காண்பதற்கு கோதுமை மணியைப் போலவே இருக்கும் என்பதை அறிவர். ஆனால் அதை நீங்கள் திறந்து பார்த்தால், அதில் கோதுமை இருக்காது. அது வெறும் உமி. ஆனால் மைக்ராஸ் கோப்பில் நீங்கள் அதைப் பரிசோதித்து பார்த்தால், ஒரு சிறு மொட்டைக் காணலாம், அதிலிருந்து கோதுமை தோன்றுகிறது. அப்படியானால் அந்த உமி என்ன செய்கிறது? கோதுமை மணி முதிர்வடையும் போது, உமி அதிலிருந்து விலகிச் செல்கிறது. ஆனால் நீங்கள் கவனித்தீர்களா, இப்பொழுது தோன்றும் கோதுமை மணி பூமிக்கடியில் சென்ற கோதுமை மணியைப் போலவே இருக்க வேண்டும். 127லூத்தரின் எழுப்புதலுக்குப் பிறகு ஒரு ஸ்தாபனம் தோன்றினது. வெஸ்லியின் எழுப்புதலுக்கு பிறகு, ஒரு ஸ்தாபனம் தோன்றினது. அலெக்ஸாண்டர் ஸ்மித், ஜான் இவர்களுக்குப் பிறகு... அலெக்ஸாண்டர் காம்ப்பெல், ஜான்ஸ்மித், இன்னும் மற்றவர்களுக்குப் பிறகு, ஸ்தாபனம் தோன்றினது. பெந்தெகொஸ்தே உண்மையைப் போல் காட்சியளித்து, ஆனால் அதுவும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. அது என்ன செய்தது? தன்னை விலக்கிக் கொண்டது. இப்பொழுது பதினைந்து ஆண்டுகளாக வரலாறு காணாத எழுப்புதல் நம்மிடையே இருந்து வருகிறது. கவனியுங்கள், இந்த பதினைந்து ஆண்டு எழுப்புதல் உலகம் பூராவும் பரவின போதிலும், அதிலிருந்து ஒரு ஸ்தாபனமும் தோன்றவில்லை. அது எங்கிருந்தது? (அது பின் மாரியைத் தொடங்கினது, அது அதன்... அது மரித்தது). இதைத் தொடர்ந்து ஒரு ஸ்தாபனமும் இருக்க முடியாது. ஏன்? அது கோதுமை மணியே, இனி மேல் ஸ்தாபனம் இருக்க முடியாது. இப்பொழுது உமி தன்னை விலக்கிக் கொண்டி ருக்கிறது, எந்த ஒத்துழைப்பும் இல்லை, யாருக்கும் உங்களை வேண்டாம். ஏன் அப்படி? அது அப்படித்தான் இருக்க வேண்டும். 128சபை ஏன் அங்குள்ளது? அதை ஆதரிக்க. அங்கே.... யார் ஒத்துழைத்திருப்பார்கள்? பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன் அல்லது லூத்தரன் யாராவது தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்களை ஆதரித்திருப்பார்களா? ஆனால் உண்மை வெளி வரும் போது என்ன நடக்கிறது? உமியல்ல, ஆனால் ஜீவன் உமியிலிருந்து வெளி வந்து கோதுமை மணிக்குள் பிரவேசிக்கிறது - உண்மையான ஜீவன். அங்குள்ள ஸ்தாபனம் மரிக்கிறது, ஒவ்வொரு காலத்திலும் நடந்தது போல் எப்பொழுதும் நடக்கிறது. நீங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதை விட்டு வெளி வந்து, மறுபடியும் அதற்குள் சென்று விட்டீர்கள். ஆனால் உண்மையான ஜீவனோ கோதுமை மணியைத் தொடர்கிறது. நண்பர்களே, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 129உமி ஏன் விலகிச் செல்கிறது? கோதுமை மணியை குமாரனின் சமுகத்துக்கு கொண்டு வந்து, அதை எஜமானுக்கென்று பொன் நிறமுள்ள மணியாய் முதிர்வடையச் செய்ய. அது ஏன் தன்னை விலக்கிக் கொண்டது? அது இருதயத்தில் வேதனைகளும் கண்ணீரும் உண்டாகக் காரணமாயிருக்கவும், அது சூரியனுக்கு முன்பாக அல்ல, குமாரனுக்கு முன்பாககிடந்திருந்து, உண்மையான முழு சுவிசேஷத்துக்கு முதிர்வடையவும், வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து வாக்களித்துள்ள அனைத்தையும் வெளிப்படுத்தவும். ஜனங்களின் மத்தியில் ஒரு சரீரம் எழும்பிக் கொண்டிருக்கிறது. இனி ஸ்தாபனங்கள் ஒரு போதும் இருக்காது. அது ஐசுவரியமுள்ள லவோதிக்கேயாவுக்குள் சென்று விட்டது. ஸ்தாபனம் எதனால் செழிப்படைந்தது? கோடிக்கணக்கான டாலர்கள், கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் போன்ற வைகளைக் கொண்டு. மேய்ப்பன் எதற்காக வந்தார்? தமது சகோதரர்களை அடிமைத்தனத்தினின்று விடுவிக்க. நான் அறியேன்; தேவனே, எங்களோடு கூட இரும், எங்களுக்குதவி செய்யும். வார்த்தையை படியுங்கள். வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் நமக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறோம். சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுப்பவைகளும் அவைகளே. பாருங்கள், தேவன் தமது வார்த்தைகளை ஒவ்வொரு காலத்துக்கும் பகிர்ந்தளித்துள்ளார். இந்தக் காலம் எப்பொழுதுமே... 130இயேசு வந்த போது என்ன கூறினார்? அவர் ஜனங்களை நோக்கி, ''மாயக்காரரே, நீங்கள் சுவர்களுக்கு வெள்ளையடித்து, தீர்க்கதரிசிகளுக்கு கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். உங்கள் பிதாக்கள் அவர்களைக்கொன்று அங்கு அடக்கம் செய்தார்கள். நீங்கள் உங்கள் பிதாக்களின் புத்திரராயிருக்கிறீர்கள். அவர்கள் செய்த கிரியைகளே நீங்களும் செய்வீர்கள்'' என்றார். அது எக்காலத்தும் மாறாமல் இருந்து வந்துள்ளது, என் சகோதரரே. ஆனால் இயேசு ஒரு நாளில் வரும் போது, காலங்கள் தோறும் வழி வழியாக லூத்தர் பெந்தெகொஸ்தே போன்ற சுமப்பவைகளின் வழியாக வந்த வெளிச்சத்தை ஏற்றுக் கொண்ட மகத்தான மேய்ப்பரின் ஆடுகள் (சுமப்பவைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல, அதன் வழியாக வந்த வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டவர்கள்); அவர்களை மீட்க அவர் வருவார். அவர் மறுபடியும் வரப்போகிறார் என்று நான் அறிந்திருப்பதனால் மிகவும் மகிழ்வுறுகிறேன். ஓ, அவருடைய கூட்டத்தில் ஒருவராக நீங்கள் எண்ணப்படுவீர்களா? நீங்கள் எண்ணப்படுவீர்களா? அதற்கு ஒரே ஒரு வழியுண்டு. ஒரு சபையைச் சேர்ந்து கொள்வதன் மூலம் அல்ல, அவருக்குள் பிறப்பதன் மூலமே. ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா ஒருவனை அழைக்காவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான் பாருங்கள், அவ்வளவு தான் அதில் உள்ளது. அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்... எனக்குத் தெரிந்த ஒரே கிறிஸ்துமஸ் வெகுமதி அவர் உலகத்துக்கு அருளின தேவ ஈவாகிய அவருடைய ஒரே பேறான குமாரனே. அவர் வார்த்தையாக, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். பாருங்கள்? அவரை இந்நாளில் வேதாகமத்தின் முழுமையில் விசுவாசியுங்கள். 131அந்த ஏழு இரகசியங்கள்... ஏழு சபை காலங்களில் மறைக்கப்பட்ட ஏழு இரகசியங்கள் இருந்தன. அதைக் குறித்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அண்மையில் ஒரு சிறந்த வேத பண்டிதர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே...'' என்றார். பாருங்கள், எவ்வாறு சாத்தான் உங்களை வழிவிலகச் செய்ய முயல்கிறான் என்று. அவர், ''சகோ. பிரன்ஹாமே, என்ன தெரியுமா? அடுத்தபடியாக நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் நமக்கு வெளிப்படுத்துவார் என்று நினைக்கிறேன்... அது இந்த ஏழு முத்திரைகளின் கீழ் மறைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய இரகசியமாயிருக்கும்'' என்றார். நான், ''இல்லை, அப்படியில்லை, சகோதரனே'' என்றேன். அவர், ''அது வேதாகமத்தில் எழுதி வைக்கப்படாத ஒன்றாயிருக்கும்'' என்றார். நான், ''இல்லை! இல்லை!'' இதனுடன் ஒரு வார்த்தை கூட்டுகிறவன், அல்லது ஒரு வார்த்தை எடுத்துப்போடுகிறவன் எவனோ'' என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள் என்றேன். பாருங்கள், அது ஏற்கனவே அதில் உள்ளது. ஆனால் அதைக்காண சீர்த்திருத்தக்காரர்கள் தவறினர். அதைக் காண அவர்கள் போதிய காலம் உயிர் வாழவில்லை. அந்த காலங்களெல்லாம் முடிவடைந்து, இப்பொழுது நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம். ஞாபகம் கொள்ளுங்கள், லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவர் சபைக்கு வெளியே இருந்து கொண்டு, தட்டிக் கொண்டு, உள்ளே செல்ல முயன்று கொண்டிருக்கிறார். ஏவாள் தன் ஆதாமை வெளியே துரத்திவிட்டாள். தேவனே, எங்களுக்குதவி செய்யும். அவரைக் கண்டடைய நாம் பாளயத்துக்குப் புறம்பே செல்வோம். நாம் வாசல்களுக்குப் புறம்பே அவரோடு பாடுபடுவோம். நாம் அவருடைய மரணம், அவருடைய அடக்கம், அவருடைய உயிர்த்தெழுதல் ஆகியவைகளில் அவரிடம் செல்வோம். ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 132நாம் செல்வதற்கு முன்பு ஒரு பாடலைப் பாடுவோம். நீங்கள் பாடுவீர்களா? நான் அவரை நேசிக்கிறேன். சகோதரியே, சுருதி கொடுப்பீர்களா? எத்தனை பேருக்கு அந்த பழைய பாடல் தெரியும்? நான்... நீங்கள் எப்பொழுதாவது கூட்டங்களுக்கு வந்திருந்தால். அது எனக்கு பிடிக்கும். இப்பொழுது நாம் கண்களை மூடி, யேகோவாவை சிந்திப்போம். யாருமே பாத்திரவானாகக் காணப்படவில்லை, அவரைத் தவிர வேறு யாருமே அதை செய்ய முடியவில்லை. அவர் இறங்கி வந்து, ஒரு சிறு குழந்தையானார். அவர் இளைஞனானார். அவர் தச்சனாக, தொழிலாளியானார். அவர் ஆட்டுக் குட்டியானார், அவர் பலியானார். அவர் வெற்றி சிறந்து உயிரோடெழுந்தார், அந்த யேகோவா. மோசே தன் இருதயத்தின் மேலுள்ள மார்பிலிருந்து தன் கையை எடுத்தது போல, தேவன் தமது மார்பிலிருந்து (அவருடைய இரகசியம்) தன் கரமாகிய குமாரனை பாவம் என்னும் குணப்படுத்த முடியாத வியாதியால் பீடிக்கப்பட்டவராய் வெளியே எடுத்தார். அதை மறுபடியும் தமது மார்பின் மேல் போட்டு வெளியே எடுத்து, அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவாக உங்களுக்கும் எனக்கும் அளித்தார். அவரை இப்பொழுது நோக்கிப் பாருங்கள்: நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 133அது மேய்ப்பனாயிருக்க வேண்டுமென்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள், ''ஆமென்'' என்று சொல்லுங்கள் (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) இருக்க வேண்டும். ஏன் ஒரு மேய்ப்பன்? அது மேய்ப்பனாகத் தான் இருக்க வேண்டும். அந்த சரணத்தை நாம் மறுபடியும் பாடும் போது, மேசைக்கு மறுபுறம் கை நீட்டுங்கள். இன்றிரவு இங்கு மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, லூத்தரன், பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர் எல்லோருமே அமர்ந்துள்ளனர். நீங்கள் கைகுலுக்கி, “உடன் யாத்திரீகரே, இன்றிரவு உங்களுடன் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்று கூறுங்கள். அவர்களிடம் ஏதாவதொன்றை சொல்லுங்கள். ''தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்று சொல்லுங்கள். ''தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்று நாம் ஒருவரோடொருவர் கை குலுக்கும் போது சொல்லுங்கள். நாம் மறுபடியும் பாடுவோம். நான்... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) ......என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் இப்பொழுது நாம் கண்களை மூடி, கரங்களை உயர்த்தி, அவருக்கு இதை பாடுவோம்: நான் உம்மை நேசிக்கிறேன் நான் உம்மை நேசிக்கிறேன். முந்தி நீர் என்னை நேசித்ததால், சம்பாதித்தீர் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில். 134இப்பொழுது, தேவன் உருவில்லாதவர். நாம் தலை வணங்கி சிறு பிள்ளைகளைப் போல் இதை மெளனமாக இசைப்போம். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். உலகம் என்ன நினைக்கும் என்பதைப் பாராதீர்கள். நீங்கள் இப்பொழுது ஆராதித்துக் கொண்டிருக்கிறீர்கள், கிறிஸ்துவை ஆராதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது தலை வணங்கி மெளனமாக இசையுங்கள் (சகோ. பிரன்ஹாம் “நான் அவரை நேசிக்கிறேன்'' என்னும் பாடலை மெளனமாக இசைத்து சபையோரை நடத்துகிறார் - ஆசி). உங்களுக்கு தேய்த்து கழுவப்பட்டது போன்ற உணர்வு உள்ளதல்லவா? ஒரு விதமான... ஏதோ ஒன்று எல்லா சந்தேகங்களையும் உலகம் அனைத்தையும் உங்களிடமிருந்து தேய்த்து கழுவினது போன்ற உணர்வு? அத்தகைய உணர்வு உள்ளதா? உங்கள் கரங்களை யுயர்த்தி, ''நான் தேய்த்துக் கழுவப்பட்டதை உணருகிறேன். நான் வித்தியாசமாக உள்ளதை உணருகிறேன். அவருடைய கரங்களிலிருந்து புசித்துக் கொண்டிருந்தது போன்ற உணர்வு எனக்குள்ளது. நான்...'' என்று கூறுங்கள். இங்கு சாட்சி கொடுத்த சகோதரன் கூறினது போன்று: ''ஆகாரம், மேய்ப்பனின் ஆகாரம், ஆடுகளின் ஆகாரம்.'' அது வார்த்தை! 135தேவனுடைய ஆடுகள் அவருடைய ஆகாரத்தினால் போஷிக்கப்படுகின்றன. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ''அது தான் இது, இந்த வேதாகமம். நாம் ஒவ்வொரு வார்த்தையையும் உண்கிறோம். ஏதோ சில வார்த்தைகள் மாத்திரமல்ல, அவருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும். ஓ, அது உங்களை அவரை நேசிக்கச் செய்கிறதல்லவா? இப்பொழுது நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போது நாம் இனிமேல் அல்ல, இப்பொழுதே தேவனுடைய குமாரர்களாயிருக்கிறோம். இனிமேல் அல்ல, இப்பொழுதே! கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சி பெட்டி ஒரு ஈதர் அலை உள்ளதை நிரூப்பிக்கிறது. அது உலகின் பல்வேறு பாகங்களிலுள்ள ஜனங்களை தொலைக்காட்சி திரையில் காண்பிக்கிறது. அவ்வாறே மகத்தான தேவனுடைய வார்த்தை - தேவனுடைய ஆவி தேவனுடைய வார்த்தையை எடுத்து, உன்னதங்களில் உள்ள அவருடைய ஆடுகளுக்கு இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காண்பித்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அறிவிக்கிறது. அவர் அற்புதமானவர் அல்லவா? அவர் அற்புதமானவர்! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 136இப்பொழுது நாம் சற்று நேரம் நிற்போம். ஆசீர்வாதம் கூற யாரையாகிலும் நியமித்திருக்கிறீர்களா? இப்பொழுது, கிறிஸ்துமஸின் போது, கர்த்தராகிய இயேசுவை ஆராதிக்க கவனமாயிருங்கள். அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் ஆராதியுங்கள். உங்களுக்கு நான் எப்பொழுதாவது உதவியாயிருக்க முடியுமானால் (உங்களுக்கு, உங்கள் போதகருக்கு, உங்கள் சபைக்கு, வேறுயாருக்காகிலும், இரவு அதிக இருளாவதில்லை, மழை அதிகமாகப் பொழிவதில்லை. அன்றொரு இரவு (இப்பொழுது ஒரு ஸ்திரீ இங்கு நின்று கொண்டிருக்கிறாள்), நான் அதிகமாக வேலையில் ஈடுபட்டிருந்தேன், வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டு.... அப்பொழுது புத்தி சுவாதீனம் இழந்த எண்பத்தொன்று வயதான அம்மாள் ஒருத்தி இருந்தாள்... புத்தி சுவாதீனம் இழந்த காரணத்தால், அவள் ஒரு குழந்தையைப் பெறப் போவதாக எண்ணியிருந்தாள். அலுவலகத்திலிருந்து பில்லி என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, அப்பா, உங்களால் முடியுமா?'' என்றான். நான், ''இப்பொழுது என்னால் முடியாது. இங்கு ஜனங்கள்... என்னால் முடியாது'' என்றேன். அவன், ''அப்பா, நீங்கள் அவளுக்காக ஜெபம் செய்யக் கூடாதா? நீங்கள் ஜெபிப்பதாக அவர்களிடம் கூறி விடுகிறேன்'' என்றான். நான், ''சரி'' என்றேன். அந்த நேரத்திலேயே அவள் குணமடைந்தாள். அவள் நன்றாக உறங்கி, சாதாரண நிலையில் உறக்கத்தினின்று எழுந்து, புத்தி சுவாதீனத்துடன் இரவு உணவின் போது கோழி உண்டாள். இங்கு நின்று கொண்டிருந்தவர் சிறிது நேரத்துக்கு முன்பு அதைக் குறித்து சாட்சி கொடுத்தார். 137சகோ. மாக், அவரை சற்று முன்பு இங்கு பார்த்தேன் - சபையில் எங்கோ ஓரிடத்தில். அவர் இங்கிருக்கிறார், போதகர்களில் ஒருவர், உள்ளூர் போதகர். மிகவும் அருமையான சகோதரன். என் ஊழியத்தை நான் தொடங்கின முதற் கொண்டு, நான் சகோ. மாக்கை எப்பொழுதும் நேசித்ததுண்டு. நான் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு சென்றிருந்தேன். தேவன் எல்லாவற்றையும் எவ்வாறு நன்மையாகச் செய்கிறார் என்பதை உங்களுக்குக் காண்பிக்க இதை கூறுகிறேன். நான் குதிரையின் மேலேறி வனாந்தரத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அங்கு நான் தேவனிடம் வழி நடத்தின ஒரு கூட்டம் சிகப்பு இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தன் குதிரையை இழந்த அந்த சிகப்பு இந்திய பையனிடம் அவன் எங்கு அதை கண்டுபிடிப்பான் என்றும், அது எவ்வளவு தூரம் இருக்குமென்றும், அந்த குதிரை எங்கு நின்று கொண்டிருக்குமென்றும் தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்டது. அவனுடைய தாய் மாரடைப்பால் மரணத்தருவாயில் இருந்தாள். அவள் சுகமடைந்து இரட்சிக்கப்பட்டாள். அந்த பையன் அங்கு வந்து அதை பார்த்து, அறிந்தவனாய்.... அவனிடம் கூறப்பட்ட அதே விதமாகவே அவனுடைய குதிரை கண்டு பிடிக்கப்பட்டது. 138கர்த்தர் இதுவரை உரைத்த ஒரு வார்த்தையாவது... உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்: ''அவர் உங்களிடம் கூற எனக்குக் கட்டளையிட்டது இது வரையிலும் அவர் உரைத்தபடி நிறை வேறாமல் இருந்ததுண்டா? அப்படி நிறைவேறியிருந்தால், ''ஆமென்'' என்று சொல்லுங்கள் (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் -ஆசி). பாருங்கள்? பாருங்கள்? அப்படியே. அது ஒரு முறை கூட தவறினதில்லை. சகோ. மாக் மரணத்தருவாயில் இருந்தார். அவருடைய மனைவி பில்லியைத் தொலைபேசியில் கூப்பிட்டு.... பில்லியின் மனைவியைக் கூப்பிட்டு... நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டாள். அந்த அருமையான ஸ்திரீ... அவருடைய மனைவி, அவள்... என் மருமகள், “அவர் வேட்டை பயணம் மேற் கொண்டு வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு சென்றிருக்கிறார்” என்றாள். அன்று காலை என்னமோ, என்னால் குதிரையின் மேல் சவாரி செய்து வெளியே செல்லவே முடியவில்லை. பில்லி, “நான் எதற்கும் இன்னும் ஒரு முறை வீட்டுக்கு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லி ஃபோன் இருந்த இடத்துக்குச் சென்றான். இதோ அவர்கள் ஓடி வந்தனர். அப்பொழுது குதிரை கிடைக்கப்பெற்ற அந்த சிகப்பு இந்தியன் அங்கு நின்று கொண்டிருந்தான். பில்லி, ”சகோ. மாக் மரணத்தருவாயிலிருக்கிறார். அவர்கள் உங்களை அழைக்கிறார்கள்'' என்றான். 139நான் இறங்கி, காட்டுக்குச் சென்று முழங்கால்படியிட்டு, அன்புள்ள தேவனே, மூவாயிரம் மைல் தொலைவில் சூரிய வெளிச்சமுள்ள அரிசோனா நாட்டு டூசானில் என் சகோதரன் சாகக்கிடக்கிறார். அவருக்கு உதவி செய்வீரா?'' என்று ஜெபித்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம், “எல்லாம் நன்றாகயுள்ளது'' என்றது. அன்றொரு நாள் நான் சகோ. மாக்கிடம் பேசிக் கொண்டிருந்த போது, ''அது எந்த மணி நேரத்தில் சம்பவித்தது?'' என்று கேட்டேன். அது நாங்கள் ஜெபம் செய்த அதே மணி நேரத்தில். ஓ, அவர்... அவர் அற்புதமானவரல்லவா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நான் ராஜாவின் சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அறிந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 140இப்பொழுது நாம் தலை வணங்குவோம். விலையேறப் பெற்ற ஒரு சகோதரன், ஒரு மிஷனரி சகோதரன், என் நண்பர், அசெம்பிளீஸ் ஆப் காட்டை சேர்ந்தவர், விலையேறப் பெற்ற சகோதரர் இங்கிருக்கிறார். அவரை நான் ''க்ரீச்'' என்று அழைப்பது வழக்கம். அவர் மிகவும் அருமையான காரியங்களை பேசினார். சகோ. க்ரீச், அப்படித்தான் உங்களை நான் அழைக்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்தக் கடைசி காலத்தில் நீங்கள் என் சகோதரனும் இயேசு கிறிஸ்துவுக்காக படும் உபத்திரவங்களில் என் உடன் ஊழியனுமாக இருக்கிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கப்போவதாக சகோ. டோனி கூறினார் என்று நினைக்கிறேன். நாம் தலை வணங்குவோம். சரி, வாருங்கள்.